Monday, November 10மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

முக்கிய செய்திகள்

‘அதிமுக குரங்கு’: – நடிகர் ட்வீட்!

‘அதிமுக குரங்கு’: – நடிகர் ட்வீட்!

அரசியல், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
ஆளுங்கட்சியை சமீப காலமாக நடிகர் கமல்ஹாஸன் டிவிட்டர் பக்கத்தில் அடிக்கடி கடுமையாக விமர்சித்து வருகிறார். அவர், ''தமிழர்கள் தலையில் இப்போது கோமாளி குல்லா'' என்று டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்து இருந்தார். இபிஎஸ் - ஓபிஎஸ் அணிகள் இணைப்பை பற்றிதான் அவர் இவ்வாறு கேலி செய்திருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர். கமல்ஹாஸனை பின்பற்றி நடிகர் கஸ்தூரி, ஸ்ரீபிரியா, பார்த்திபன் ஆகியோரும் டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் அரசியல் கருத்துகளை ரத்தினச்சுருக்கமாக நையண்டி செய்து வருவது அதிகரித்துள்ளது. இந்நிலையில் நடிகர் பார்த்திபன் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஒரு பதிவு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அவருடைய டிவிட்டர் பக்கத்தில், ''கிளியை வளர்த்து யாரோ குரங்கு கையில் கொடுக்க - அந்த குரங்கை பிடித்து யாரோ மனிதன் கையில் கொடுக்க - அப்படி இன்றியமையா இணைப்பிற்குப் பின்!!!'' என்று ட்வீ...
வைத்திலிங்கம் நீக்கம்: டிடிவி அதிரடி

வைத்திலிங்கம் நீக்கம்: டிடிவி அதிரடி

அரசியல், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி அணியும், ஓ.பன்னீர்செல்வம் அணியும் நேற்று ஒன்றாக இணைந்தது. இரு அணிகளும் இணைப்புக்குப் பின்னர் நேற்று மாலை ஊடகங்களிடம் பேசிய எம்பி வைத்திலிங்கம், அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சசிகலா நீக்கப்படுவார் என்று தெரிவித்தார். பொதுச்செயலாளரை நீக்கும் அதிகாரம் பொதுக்குழுவிற்குதான் உண்டு என்று அப்போதே வைத்திலிங்கம் கருத்துக்கு தினகரன் தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், எடப்பாடி அணியில் உள்ள அமைச்சர் ஓஎஸ் மணியன், வைத்திலிங்கம் கூறியது அவருடைய தனிப்பட்ட கருத்து என்றும், சசிகலா தொடர்பாக யாரும் விவாதிக்கவில்லை என்றும் கூறினார். இந்நிலையில் அதிமுகவின் துணை பொதுச்செயலாளரான டிடிவி தினகரன் வைத்திலிங்கத்தை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவதாக அறிவித்துள்ளார். சசிகலாவுக்கு எதிராக யார் பேசினாலும் அவர்கள் கட்சிய...
‘எடப்பாடிய தூக்குங்க’; எம்எல்ஏக்கள் போர்க்கொடி!

‘எடப்பாடிய தூக்குங்க’; எம்எல்ஏக்கள் போர்க்கொடி!

அரசியல், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது வைத்திருந்த நம்பிக்கையை இழந்துவிட்டோம்; அவரை மாற்ற வேண்டும் என்று டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர் இன்று (22/8/17) ஆளுநர் (பொ) வித்யாசாகர் ராவிடம் கடிதம் கொடுத்துள்ளனர். அதிமுகவில் நீண்ட இழுபறிக்குப் பின்னர் ஒருவழியாக எடப்பாடி பழனிசாமி அணியும், ஓ.பன்னீர்செல்வம் அணியும் நேற்று ஒன்றாக இணைந்தது. இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்வராக நியமிக்கப்பட்டார். அவருடைய அணியைச் சேர்ந்த மாஃபா க.பாண்டியாராஜனுக்கும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. சமீப காலமாக டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் இபிஎஸ், ஓபிஎஸ் ஆகிய இரு அணிகளையும் கடுமையாக விமர்சித்து வந்தனர். நேற்று இரு அணிகளும் இணைக்கப்பட்டபோதும்கூட தினகரன் ஆதரவு தரப்பை, அவ்விரு தரப்புமே கண்டுகொள்ளவில்லை. இதனால் விரக்தி அடைந்த தினகரன் தரப்பினர், முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது வைத்திருந்த நம்பிக்க...
அஜித்தின் ‘விவேகம்’ பைசா வசூல் ஆகுமா?

அஜித்தின் ‘விவேகம்’ பைசா வசூல் ஆகுமா?

சினிமா, முக்கிய செய்திகள்
ரசிகர்களால் அன்புடன் ‘தல’ என்று அழைக்கப்படும் அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள ‘விவேகம்’ படம், வரும் 24ம் தேதி ரிலீஸ் ஆகிறது. திரைக்கு வருவதற்கு முன்பே திரையரங்க விநியோக உரிமை, சாட்டிலைட் உரிமம், வெளிநாட்டு உரிமம் மூலம் ரூ.120 கோடிக்கு வியாபாரம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. அஜித்தின் சினிமா வாழ்வில், இந்தப்படம்தான் மிக அதிக பொருட்செலவில் தயாராகி உள்ளது. அதுவும் போட்ட பட்ஜெட்டுக்கு மேல். பெரும்பாலான படப்பிடிப்பு வெளிநாடுகளில் நடத்தப்பட்டு உள்ளது. காஜல் அகர்வால், கதாநாயகியாக நடித்துள்ளார். கமலின் இளைய மகள் அக்ஷரா ஹாஸன் இந்தப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகம் ஆகிறார். அவருடைய கேரக்டர் இதுவரை சஸ்பென்சாக வைக்கப்பட்டு உள்ளது. பாலிவுட் நடிகர் விவேக் ஓபராயும் நடித்துள்ளார். வணிக ரீதியான அம்சங்கள் இத்தனை இருந்தாலும், அஜித்தின் முந்தைய ‘வேதாளம்’, ‘வீரம்’ ஆகிய படங்கள் திரையரங்க உரிமையாளர்...
துணை முதல்வரானார் ஓபிஎஸ்; செம்மலைக்கு இடமில்லை!

துணை முதல்வரானார் ஓபிஎஸ்; செம்மலைக்கு இடமில்லை!

தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
அதிமுகவில் இரு அணிகளும் இணைந்ததை அடுத்து, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டு உள்ளது. அவருடைய அணியைச் சேர்ந்த 'மாஃபாய்' க.பாண்டியராஜனுக்கும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டு உள்ளது. செம்மலைக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா உடல் நலக்குறைவால் கடந்த ஆண்டு டிசம்பர் 5ம் தேதி மரணம் அடைந்தார். அதையடுத்து, நிதி அமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக பொறுப்பேற்றார். அதிமுகவுக்குள் சசிகலா குடும்பத்தினரின் தலையீடு காரணமாக அக்கட்சி பன்னீர்செல்வம் அணி, எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஓர் அணி என இரண்டு அணிகளாக உடைந்தன. இதற்கிடையே, டிடிவி தினகரன் சில எம்எல்ஏக்ளை வளைத்துப் போட்டுக்கொண்டு தனி அணியாக செயல்பட்டார். அவருடைய குடைச்சல் நாளுக்குநாள் அதிகரித்ததை அடுத்து, ஓபிஎஸ் - இபிஎஸ் அணிகள் இணைவது குறித்த பேச்சுவார்த்தை ...
ஓபிஎஸ் – இபிஎஸ் அணிகள் இணைந்தன!

ஓபிஎஸ் – இபிஎஸ் அணிகள் இணைந்தன!

தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சென்னை : அதிமுகவில் இரு அணிகளாக பிரிந்து செயல்பட்டு வந்த எடப்பாடி பழனிசாமி அணியும், ஓ.பன்னீர்செல்வம் அணியும் இன்று இணைந்தன. கட்சி அலுவலகத்திற்கு வந்த முதல்வர் பழனிசாமியும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வந்து, அணிகள் இணைப்பை உறுதி செய்தனர். இருவரும் கைகுலுக்கி வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். முதல்வர் பழனிசாமியைத் தொடர்ந்து, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் கட்சி தலைமை அலுவலகத்திற்கு வந்தார். முதல்வர் பதவியில் இருந்து விலகி பிறகு, 6 மாதங்களுக்கு பிறகு கட்சி அலுவலகத்திற்கு ஓபிஎஸ் வந்தார். முதல்வர் உடனான ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு, ஓபிஎஸ் வீட்டிற்கு சென்ற அமைச்சர் தங்கமணி, வேலுமணி மற்றும் எம்.பி., வைத்தியலிங்கம் அவரை கட்சி அலுவலகத்திற்கு அழைத்து வந்தனர். கட்சி அலுவலகம் வந்த ஓபிஎஸ்.,க்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து, ஓபிஎஸ் ம...
வளரத் துடிக்கும் கல்லுக்கட்டு மலைக்கிராம பள்ளி!

வளரத் துடிக்கும் கல்லுக்கட்டு மலைக்கிராம பள்ளி!

கல்வி, சேலம், முக்கிய செய்திகள்
''வாய்ப்பும், வசதியும் கிடைத்தால் உச்சம் தொடுவார்கள்'' தகவல் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருக்கும் கல்லுக்கட்டு மலைக்கிராமப் பள்ளிக்கு போதிய தொழில்நுட்ப வசதிகள் கிடைத்தால், கல்வியில் உச்சம் தொடுவார்கள். சேலம் மாவட்டம் ஆத்தூரில் இருந்து பத்து கிலோமீட்டர் தொலைவில், மலைப்பகுதியில் அமைந்துள்ளது, கல்லுக்கட்டு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி. ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை மொத்தமே 20 மாணவர்கள்தான் படிக்கின்றனர். இவர்களில் 7 பேர் பெண் குழந்தைகள். மலைக்கிராமங்களில் குறிப்பாக பழங்குடியினர் படிக்கும் பள்ளிகளில் பணியாற்றவே விருப்ப முன்னுரிமை தெரிவிக்காத இந்த நாளில், பழங்குடியின குழந்தைகளுக்கு தனியார் பள்ளிகளுக்கு இணையாக ஆங்கில வாசிப்புப் பயிற்சி அளித்து வருகிறார், ஆசிரியர் நடராஜன். அவரை சந்திப்பதற்காக நாம் கல்லுக்கட்டு அரசுப்பள்ளிக்கு நேரில் சென்றிருந்தோம். பள்ளி வேலை தொடர்பாக அ...
சேலத்தின் ஜோதிட கிராமம்…!

சேலத்தின் ஜோதிட கிராமம்…!

சேலம், முக்கிய செய்திகள், ராசிபலன்
''குலத்தொழிலை மறக்காத இளம் தலைமுறையினர்'' சேலத்திற்கென்று இருக்கும் சில தனித்த அடையாளங்களில், வீராணம் கிராமத்திற்கும் இடம் உண்டு. பழைய பேருந்து நிலையத்தில் இருந்து 8 கி.மீ. தொலைவில் இருக்கிறது வீராணம். இந்த ஊரில், சுமார் 25 குடும்பத்தினர் மூன்று தலைமுறைகளைக் கடந்தும் இன்றும் ஜோதிடத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுவாக ஒரே பொருளை விற்கும் கடைகள் அடுத்தடுத்து தொடர்ச்சியாக இருந்தாலே தொழில் போட்டி வந்து விடும் அல்லது வியாபாரம் படுத்து விடும். ஆனால் இங்குள்ள ஜோதிடர்களுக்கு அப்படி அல்ல. வீராணத்தில் அடுத்தடுத்து 'ஜோதிட நிலையம்' பெயர் பலகை இருப்பதைக் காண முடியும். வள்ளுவர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பல தலைமுறை களாக ஜோதிடத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். பெரும்பாலும் ஒரே குடும்ப வகையறாவைச் சேர்ந்தவர்கள்தான் இங்கு வசிக்கின்றனர்.  சமீப காலங்களாக வேறு சமூகத்தைச் சேர்ந்த சிலரும் இப்பகுதிய...
கிரிக்கெட்: தவான் அபார சதம்; இந்தியா வெற்றி

கிரிக்கெட்: தவான் அபார சதம்; இந்தியா வெற்றி

முக்கிய செய்திகள், விளையாட்டு
தம்புல்லா: இலங்கை தம்புல்லாவில் இன்று பகலிரவு ஆட்டமாக நடந்த முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியை இந்தியா வீழ்த்தியது. ஷிகர் தவான் அபாரமாக ஆடி 132 ரன்களை குவித்தார். கோஹ்லி அரைசதம் அடித்தார். இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி தம்புல்லாவில் இன்று பகலிரவு ஆட்டமாக நடந்தது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோஹ்லி பீல்டிங் தேர்வு செய்தார். இதையடுத்து, இலங்கை அணியின் டிக்வெல்லா, குணதிலகா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர் . இருவரும் நிதானமாகவும், அதேவேளையில் சிறப்பான ஆட்டத்தையும் வெளிப்படுத்தினார்கள். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 14 ஓவரில் 74 ரன்கள் சேர்த்தது. 14-வது ஓவரை சாஹல் வீசினார். இந்த ஓவரின் கடைசி பந்தில் குணதிலகா 44 பந்தில் 35 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். 2-வது விக்கெட்டுக்கு டிக்வெல்லா உடன் குசால் மெண்டிஸ்...
ரேஷன் மானியம் ரத்து: பட்டினிச் சாவை உருவாக்கும்!

ரேஷன் மானியம் ரத்து: பட்டினிச் சாவை உருவாக்கும்!

இந்தியா, முக்கிய செய்திகள்
ரேஷன் மானியம் ரத்து குறித்த அறிவிப்பு, சாமானிய மக்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.இந்திய அரசாங்கம் என்பது, சாமானிய மக்கள் நலன் நாடும் அரசு என்ற எண்ணவோட்டத்தில் இருந்து விலகிச்சென்று, கார்ப்பரேட்டு முதலாளிகளுக்கு மட்டுமே இனி சேவகம் செய்யும் என்ற நிலைக்கு தன்னை உருமாற்றிக் கொண்டு வருகிறது. ரேஷன் கடைகளில் மானிய விலையில் அரிசி, பருப்பு, சர்க்கரை, கோதுமை, மண்ணெண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய குடிமைப் பொருட்களுக்கு மானியம் ரத்து செய்யப்படும் என்பதுதான் தேசிய உணவுப்பாதுகாப்புச் சட்டத்தில் சொல்லப்பட்டுள்ள முக்கியமான ஷரத்து. இதற்காகத்தான் மறைந்த முதல்வர் ஜெயலலிதா, கடுமையாக இந்த சட்டத்தை எதிர்த்து வந்தார். அதற்கு மக்கள் நலன் மட்டுமே காரணமாகச் சொல்ல முடியாது. ஏனெனில், தமிழகத்தில் ரேஷன் அரிசி அரசியலும் ஒன்று இருக்கிறது. தமிழகத்தைப் பின்பற்றி மேற்கு வங்கம், கேரளம் உள்ளிட்ட ஏனைய மாநில...