Friday, March 6மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

முக்கிய செய்திகள்

கடந்த 2 மாதத்தில் 15 லட்சம் கோடி ரூபாய் இழப்பு! பங்கு முதலீட்டாளர்கள் சோகம்!

கடந்த 2 மாதத்தில் 15 லட்சம் கோடி ரூபாய் இழப்பு! பங்கு முதலீட்டாளர்கள் சோகம்!

இந்தியா, முக்கிய செய்திகள், வர்த்தகம்
  ஓமிக்ரான், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வெளியேறியது, மத்திய வங்கிகளின் வட்டி விகிதம் அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் இந்திய பங்குச்சந்தைகளில் கடந்த இரண்டு மாதத்தில் மட்டும் 15.30 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டாளர்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.   குறிப்பாக, அமெரிக்காவின் ஃபெடரல் வங்கியின் வட்டி விகிதங்கள் உயர்த்தப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவியதால், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை விற்கத் தொடங்கினர். அதன் தாக்கம், இந்திய பங்குச்சந்தையில் பெரிய அளவில் எதிரொலித்தது.   தேசிய பங்குச்சந்தையான நிப்டி, வரலாற்றில் முதன்முறையாக கடந்த அக். 19ம் தேதி 18604 புள்ளிகள் வரை எகிறியது. அடுத்த ஒரே மாதத்தில் 10 சதவீதம் வீழ்ச்சி அடைந்து, தற்போது 16782 புள்ளிகள் ஆக சரிவடைந்துள்ளது.   கடந்த வாரம் 17516 புள்ளிகளாக அதாவது, 3.5 சதவீதம் வரை உயர்ந்த நிப...
நகர்ப்புறம்? நகர்ப்புரம்? எது சரி?; முதல்வர் விழாவில் தமிழுக்கு வந்த சோதனை!

நகர்ப்புறம்? நகர்ப்புரம்? எது சரி?; முதல்வர் விழாவில் தமிழுக்கு வந்த சோதனை!

சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், டிச. 11ம் தேதி, சேலத்தில் நடந்த அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு, 31 ஆயிரம் பயனாளிகளுக்கு பல்வேறு துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அன்றைய தினமே, சேலம் மாவட்டத்தில் அடுத்தடுத்து மேற்கொள்ளப்பட உள்ள 1242 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டங்களையும் அறிவித்து, மாங்கனி மாவட்ட மக்களை திக்குமுக்காடச் செய்தார்.   அதே விழாவில், மாநில அளவில் 300 கோடி ரூபாயில் நமக்கு நாமே திட்டத்தையும், 100 கோடி ரூபாயில் நகர்ப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தையும் தொடங்கி வைத்தார். தாரை தப்பட்டை, நாட்டுப்புறக் கலைகள் என முதல்வருக்கு மிக பிரம்மாண்டமான வரவேற்பும் களைகட்டின. நடந்த வரை எல்லாமே சிறப்புதான் என்றாலும், விழா மேடையில் வைக்கப்பட்டிருந்த நிகழ்ச்சி குறித்த விளம்பர பலகையில் இடம் பெற்றிருந்த பிழையான ஒரு சொல், தமிழார்வலர்களின் மனதை நோகச்செய்தி...
மசாஜ் அழகி கொலை: பலிகடாவான 4 போலீசார்! யாரை காப்பாற்ற நாடகம் ஆடுகிறது சேலம் காவல்துறை?

மசாஜ் அழகி கொலை: பலிகடாவான 4 போலீசார்! யாரை காப்பாற்ற நாடகம் ஆடுகிறது சேலம் காவல்துறை?

குற்றம், சேலம், முக்கிய செய்திகள்
சேலத்தில் கொல்லப்பட்ட மசாஜ் அழகியுடன் தொடர்பில் இருந்ததாக மூன்று எஸ்ஐக்கள் உள்ளிட்ட 4 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டதும், அதன் தொடர்ச்சியாக உளவுப்பிரிவு உதவி கமிஷனர், 2 பெண் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்ட விவகாரம் மாநகர காவல்துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. சேலம் குமாரசாமிப்பட்டியைச் சேர்ந்தவர் நடேசன். அதிமுக பிரமுகர். இவருக்குச் சொந்தமான அபார்ட்மெண்டில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்தார் தேஜ் மண்டல். 26 வயதான இவர், சேலம் சங்கர் நகர், பள்ளப்பட்டி ஆகிய இடங்களில் 'தேஜாஸ் ஸ்பா' என்ற பெயரில் மசாஜ் செண்டர்களை நடத்தி வந்தார்.   தான் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பில், பக்கத்திலேயே இன்னொரு அறை எடுத்து, அதில் தன்னிடம் வேலை செய்து வந்த ரிஷி, நிஷி, ஷீலா ஆகிய 3 பெண்களையும், லப்லு என்ற ஆணையும் தங்க வைத்திருந்தார். தேஜ் மண்டல் உள்பட இவர்கள்...
பெண்களுக்கு இலவச பேருந்து பயணம்: தொழிலை விட்டு வெளியேறிய 40% ஆட்டோ ஓட்டுநர்கள்! கந்து வட்டிக்காரர்களிடம் வாகனங்கள் சரண்டர்!

பெண்களுக்கு இலவச பேருந்து பயணம்: தொழிலை விட்டு வெளியேறிய 40% ஆட்டோ ஓட்டுநர்கள்! கந்து வட்டிக்காரர்களிடம் வாகனங்கள் சரண்டர்!

சிறப்பு கட்டுரைகள், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  அரசு நகரப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் என்ற திட்டத்தால், ஆட்டோ ஓட்டுநர்கள் பலர் சவாரியின்றி பெரும் நலிவைச் சந்தித்துள்ளனர்.   தமிழக சட்டமன்றத் தேர்தலின்போது, திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அரசு நகரப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று தேர்தல் அறிக்கையில் அக்கட்சி தெரிவித்து இருந்தது. ஆட்சிக்கு வந்த கையோடு, அத்திட்டத்தை அமலுக்கு கொண்டு வந்தது திமுக அரசு.   இதற்கு பெண்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்தது. சேலத்தை அடுத்த பனமரத்துப்பட்டியைச் சேர்ந்த பொன்னம்மாள் என்ற பெண் விவசாயி, ''கீரைக்கட்டுகளை எடுத்துக்கொண்டு தினமும் சேலம் மார்க்கெட்டுக்கு சென்று வர பஸ் செலவு மட்டும் தினமும் 30 ரூபாய் ஆகிவிடும்.   கூவிக்கூவி விற்பதால் காலையில் சீக்கிரமாகவே பசியெடுக்கும். அதற்காக ஏன் செலவு செய்ய வேண்டும் என்று பட்டின...
சேலம் மாநகராட்சியில் 719361 வாக்காளர்கள்; ஆண்களை விட பெண் வாக்குகள் அதிகம்!

சேலம் மாநகராட்சியில் 719361 வாக்காளர்கள்; ஆண்களை விட பெண் வாக்குகள் அதிகம்!

சேலம், முக்கிய செய்திகள்
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி, சேலம் மாநகராட்சியில் புகைப்படத்துடன் கூடிய புதிய வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி, சேலம் மாநகராட்சியில் புகைப்படத்துடன் கூடிய புதிய வாக்காளர் பட்டியலை, ஆணையர் கிறிஸ்துராஜ் வியாழக்கிழமை (டிச. 9) வெளியிட்டார். அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகன் முன்னிலையில் இந்தப் பட்டியல் வெளியிடப்பட்டது.   இதுகுறித்து சேலம் மாநகராட்சி ஆணையர் கிறிஸ்துராஜ் கூறியது:   நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு 1.11.2021ம் தேதியன்று இந்திய தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்ட தமிழ்நாடு சட்டமன்றத் கொகுதி ஒருங்கிணைந்த வாக்காளர் வரைவுப் பட்டியல்களை அடிப்படையாகக் கொண்டு, சம்பந்தப்பட்ட நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்காளர் பட்டியல்கள் தயாரிக்கப்பட்டு உள்ளன.   வாக்காளர் பட்டியல்கள் அடிப...
ஏற்றத்தில் பங்குச்சந்தைகள்! சென்செக்ஸ் 57600 புள்ளிகளில் நிறைவு!!

ஏற்றத்தில் பங்குச்சந்தைகள்! சென்செக்ஸ் 57600 புள்ளிகளில் நிறைவு!!

இந்தியா, முக்கிய செய்திகள், வர்த்தகம்
கடந்த இரண்டு செஷன்களாக சரிவில் இருந்த இந்திய பங்குச்சந்தைகள் செவ்வாய்க்கிழமை (டிச. 7) மீண்டெழுந்து ஏற்றத்துடன் வர்த்தகத்தை நிறைவு செய்திருக்கின்றன. புதிய வகை ஒமிக்ரான் வைரஸ் பற்றிய அதீத அச்சுறுத்தல்களால் உலகம் முழுவதும் கடந்த வார இறுதியிலும், நடப்பு வாரத்தின் முதல் நாளான திங்களன்றும் பங்குச்சந்தைகள் கடும் சரிவைச் சந்தித்தன.   இந்நிலையில், முந்தைய கொரோனா வைரஸைக் காட்டிலும் பெரிய அளவில் பாதிப்பை ஒமிக்ரான் வைரஸ் ஏற்படுத்தாது என்ற தகவலால் பங்குச்சந்தைகள் இன்று தடாலடியாக மீண்டெழுந்தன.   இன்று வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 886.51 புள்ளிகள் (1.56%) உயர்ந்து, 57633 புள்ளிகளுடன் வர்த்தகத்தை நிறைவு செய்திருந்தது. அதேபோல, தேசிய பங்குச்சந்தையான நிப்டி 264.45 புள்ளிகள் உயர்ந்து 17176.70 புள்ளிகளில் நிறைவு பெற்றது. இது, முந்தைய நாள் ...
35 வருடம் காத்திருந்து காதலியை கரம் பிடித்த சிக்கண்ணா! காலம் போட்டு வைத்த கணக்கு!

35 வருடம் காத்திருந்து காதலியை கரம் பிடித்த சிக்கண்ணா! காலம் போட்டு வைத்த கணக்கு!

இந்தியா, முக்கிய செய்திகள்
  'பிணியும் மூப்பும் இறப்பும் மானுடர்க்கே அன்றி காதலுக்கு ஒருபோதும் அல்ல' என்பதை, 65 வயதிலும் தான் நேசித்த பெண்ணுக்காய் காதலை பசுமையுடன் பத்திரப்படுத்தி வந்திருக்கும் சிக்கண்ணா நிரூபித்திருக்கிறார்.   'காதல் கொண்ட அனைவருமே மணம் முடிப்பதில்லை; மணம் முடித்த அனைவருமே சேர்ந்து வாழ்ந்ததில்லை' என்ற கண்ணதாசனின் வரிகள், சிக்கண்ணா - ஜெயம்மாவுக்கு ரொம்பவே பொருந்தும்.   கர்நாடகா மாநிலம் ஹாசன் மாவட்டம் ஒலேநரசிப்புராவில் வசிக்கும் சிக்கண்ணாதான், கடந்த ஒரு வாரமாக இணையங்களில் பெரிய அளவில் கவனம் ஈர்த்தவர். இத்தனைக்கும் இவர் இப்போதும் மிகச்சாமானியர்தான்.   கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு மைசூருவுக்கு கூலி வேலைக்காகச் சென்றிருந்தார். அப்போது அவருக்கும், அதே ஊரில் வசித்து வந்த அவருடைய உறவுக்கார பெண்ணான ஜெயம்மாவுக்கும் (60) பழக்கம் ஏற்பட்டது. ஆரம்பத்தில் கண...
50 கோடி ரூபாய் சுருட்டல்; அரசுப்பள்ளி பெண் ஆசிரியர் கைது! கரும்பலகை குற்றத்தில் இது வேற லெவல்!

50 கோடி ரூபாய் சுருட்டல்; அரசுப்பள்ளி பெண் ஆசிரியர் கைது! கரும்பலகை குற்றத்தில் இது வேற லெவல்!

முக்கிய செய்திகள், வேலூர்
வட்டித்தொழில் தொடங்கி பாலியல் அத்துமீறல் வரை குற்றங்களில் அனாயசமாக ஈடுபட்டு வந்த ஆசிரியர்களை தூக்கிச் சாப்பிட்டிருக்கிறார் வேலூரைச் சேர்ந்த அரசுப்பள்ளி பெண் ஆசிரியர் ஒருவர்.   வேலூர் மாவட்டம் கொணவட்டத்தைச் சேர்ந்தவர் மகேஸ்வரி (55). அப்பகுதியில் உள்ள அரசுப்பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருடைய கணவர் தர்மலிங்கம் (60). காவல்துறை உதவி ஆய்வாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். கணவன், மனைவி இருவரும் இணைந்து வேலூரில் கடந்த 2018ம் ஆண்டு கார், லாரி, ரியல் எஸ்டேட் தொழில்களை அடுத்தடுத்து தொடங்கினர். இவர்கள் நடத்தி வரும் தொழில்களில் முதலீடு செய்தால் அதிக வட்டி கொடுப்பதாக ஆசை வலை விரித்தனர்.   வெறும் 175 ரூபாய் ஊக்கத் தொகைக்காக பணம் கொடுத்தாவது எம்.ஃபில் பட்டத்தைப் பெறுவதில் முனைப்பு காட்டும் ஆசிரியர்களிடம், முதலீட்டுக்கு அதிக வட்டி என்றால் சும்மா ...
ஷேர் மார்க்கெட்: பொதுப்பங்கு வெளியீட்டில் களம் இறங்கிய ஸ்டார் ஹெல்த்!

ஷேர் மார்க்கெட்: பொதுப்பங்கு வெளியீட்டில் களம் இறங்கிய ஸ்டார் ஹெல்த்!

இந்தியா, முக்கிய செய்திகள், வர்த்தகம்
மருத்துவக் காப்பீட்டுத் துறையில் கணிசமான சந்தைப் பங்களிப்பை வைத்திருக்கும் ஸ்டார் ஹெல்த் அன்டு அலைடு இன்சூரன்ஸ் நிறுவனம், நவ. 30ம் தேதி பொதுப்பங்கு வெளியீட்டில் களமிறங்கியுள்ளது.   பங்குசந்தைகளில் ஒரு நிறுவனம் முதன்முதலில் பங்குகளை வெளியிட்டு, முதலீடுகளை திரட்டுவதைத்தான் பொதுப்பங்கு அதாவது, ஐபிஓ என்கிறார்கள். இதுபோன்ற பொதுப்பங்கு வெளியீட்டில் முதலீடு செய்யும் சிறு முதலீட்டாளர்களுக்கு, குறைந்த விலையில் பங்குகள் கிடைப்பதுடன், பட்டியலிடப்படும் நாளன்று பெரும்பாலும் கணிசமான லாபமும் கிடைத்துவிடும். அதனால் முதலீட்டாளர்களிடையே எப்போதும் ஐபிஓக்களுக்கு வரவேற்பு இருக்கும்.   இந்நிலையில், ஸ்டார் ஹெல்த் அன்டு அலைடு இன்சூரன்ஸ் நிறுவனம் செவ்வாய்க்கிழமை (நவ. 30) ஐபிஓவை வெளியிட்டுள்ளது. இந்தியாவின் மிகப்பெரும் பங்குச்சந்தை தரகரான ராகேஷ் ஜூன்ஜூன்வாலா இந்நிறுவனத்தின் புர...
மாப்பிள்ளை அவருதான்… ஆனா அவர் போட்டிருக்கிற டிரஸ் என்னுது! இது நாமக்கல் திமுக பாலிடிக்ஸ்!

மாப்பிள்ளை அவருதான்… ஆனா அவர் போட்டிருக்கிற டிரஸ் என்னுது! இது நாமக்கல் திமுக பாலிடிக்ஸ்!

அரசியல், தமிழ்நாடு, நாமக்கல், முக்கிய செய்திகள்
சுற்றுலாத்துறை அமைச்சராக மதிவேந்தன் செயல்பட்டு வந்தாலும், நாமக்கல் மாவட்டத்தைப் பொருத்தவரை சகலமும் நான்தான் என காலரை தூக்கிவிட்டு பவர் பாலிடிக்ஸ் நடத்தி வருகிறார் மாவட்ட பொறுப்பாளரான கேஆர்என். ராஜேஷ்குமார்.   நாமக்கல்லைச் சேர்ந்தவர் மருத்துவர் மாயவன். திமுகவின் மூத்த நிர்வாகிகளுள் ஒருவர். இவருடைய மகன் மதிவேந்தன் (36). நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளராக இருக்கிறார். எம்பிபிஎஸ்., எம்.டி., படித்துள்ள மதிவேந்தன், 2021 சட்டமன்ற தேர்தலில் ராசிபுரம் தனித்தொகுதியில் முன்னாள் அமைச்சர் சரோஜாவை எதிர்த்துப் போட்டியிட்டு 2000க்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் போராடி வெற்றி பெற்றார்.   யாருமே எதிர்பாராத வகையில் மதிவேந்தனை சுற்றுலாத்துறை அமைச்சராக்கி அழகு பார்த்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். தமிழக அமைச்சரவையில் இவர்தான் மிகவும் ஜூனியர். அருந்த...