Thursday, November 6மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

முக்கிய செய்திகள்

கேப் டவுன் டெஸ்ட்: தென்னாப்ரிக்காவிடம் சுருண்டது இந்தியா!

கேப் டவுன் டெஸ்ட்: தென்னாப்ரிக்காவிடம் சுருண்டது இந்தியா!

இந்தியா, உலகம், முக்கிய செய்திகள், விளையாட்டு
தென்னாப்பிரிக்கா - இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, தென்னாப்பிரிக்கா அபாரமாக வெற்றி பெற்றது. அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் பிலாண்டர் 6 விக்கெட்டுகள் வீழ்த்தி, வெற்றிக்கு வழிகோலினார். தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டி கேப் டவுனில் உள்ள நியூலாண்ட்ஸ் மைதானத்தில் கடந்த 5ம் தேதி தொடங்கியது. தென்னாப்பிரிக்கா அணி முதல் இன்னிங்சில் 286 ரன்களும், இந்தியா 209 ரன்களும் எடுத்து இருந்தது. இதைத் தொடர்ந்து, 77 ரன்கள் முன்னிலையுடன் தென்னாப்பிரிக்கா அணி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. இரண்டாம் நாள் முடிவில் அந்த அணி 2 விக்கெட் இழப்பிற்கு 65 ரன்கள் எடுத்து இருந்தது. இந்நிலையில், மூன்றாம் நாள் ஆட்டம் மழ...
சட்டப்பேரவை: மு.க.ஸ்டாலின் வெளிநடப்பும் டிடிவி தினகரன் வருகையும்!

சட்டப்பேரவை: மு.க.ஸ்டாலின் வெளிநடப்பும் டிடிவி தினகரன் வருகையும்!

அரசியல், சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சட்டப்பேரவையில் இருந்து அடிக்கடி வெளிநடப்பு செய்யும் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலினை கிண்டலடித்தும், முதன்முதலில் எம்எல்ஏவாக பேரவைக்குள் காலடி வைத்த டிடிவி தினகரனை பாராட்டியும் ட்விட்டரில் பலர் 'மீம்'கள் பதிவிட்டுள்ளனர். நடப்பு ஆண்டில் தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று (ஜனவரி 8, 2017) தொடங்கியது. கடந்த அக்டோபர் மாதம் தமிழக ஆளுநராக பொறுப்பேற்றார் பன்வாரிலால் புரோஹித். அவர் உரையாற்றும் முதல் கூட்டத்தொடர் இது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஆர்.கே.நகர் தொகுதி முதன்முதலில் இடைத்தேர்தலைச் சந்தித்தது. அதில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கி வெற்றி பெற்ற டிடிவி தினகரன், எம்எல்ஏ ஆக காலடி வைக்கும் முதல் கூட்டத்தொடர். மக்களவை, மாநிலங்களவை எம்பியாக இருந்த டிடிவி தினகரன் கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகள் இடைவெளிக்குப்பிறகு, மக்கள் பிரதிநிதியாக அவர் இப்போது சட்டப்பேரவைக்குள் நுழைந்துள்ளார். ...
தமிழக அரசு ஆஹா…ஓஹோ…!; ஆளுநர் உரையில் பாராட்டு; முழு விவரம்

தமிழக அரசு ஆஹா…ஓஹோ…!; ஆளுநர் உரையில் பாராட்டு; முழு விவரம்

அரசியல், சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தமிழக சட்டப்பேரவை நடப்பு ஆண்டில் முதல்முறையாக ஆளுநர் உரையுடன் இன்று (ஜனவரி 8, 2017) தொடங்கியது. ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், ஆங்கிலத்தில் தனது உரையை வாசித்தார். முன்னதாக அவர், 'அனைவருக்கும் வணக்கம்' என்று தமிழில் கூறினார். இடையில் எதிர்க்கட்சிகள் கூச்சலிட்டபோதும், 'உட்காருங்க' என்று தமிழில் பேசினார். தமிழகத்தில் நிதி பற்றாக்குறை இருப்பினும் நலத்திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருவது பாராட்டுக்குரியது. தமிழகத்தை வளர்ச்சி பாதையில் அழைத்துச் செல்வதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு சிறப்பாக செயல்பட்டு வருவதாக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பாராட்டினார். ஆளுநர் உரையின் முழு விவரம்: மறைந்த முதல்வர் ஜெயலலிதா காட்டிய வழியில் அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மக்கள் நலத்திட்டங்கள் நல்ல முறையில் இடைவிடாது செயல்படுத்தப்படுகின்றன. ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக...
நடிகனாக மட்டுமே என் வாழ்க்கை முடிந்து விடக்கூடாது!:  மலேசியாவில் ரஜினி பேச்சு

நடிகனாக மட்டுமே என் வாழ்க்கை முடிந்து விடக்கூடாது!: மலேசியாவில் ரஜினி பேச்சு

அரசியல், இந்தியா, உலகம், சினிமா, முக்கிய செய்திகள்
ஆண்டவர் கொடுத்த தொழிலில் நாம் நாணயமாகவும், நேர்மையாகவும் செயல்பட்டால் நமக்கு எல்லாமே கிடைக்கும் என்று மலேசியாவில் நடந்த நட்சத்திர கலைவிழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசினார். தென்னிந்திய நடிகர்கள் சங்கத்தின் சார்பில் மலேசியாவில் உள்ள கோலாலம்பூரில் நேற்று (ஜனவரி 6, 2017) நட்சத்திரக் கலை விழா நடந்தது. விழாவின் ஒரு பகுதியாக நடிகர் விவேக், ரஜினிகாந்திடம் பேட்டி எடுக்கும் நிகழ்ச்சியும் நடந்தது. விவேக் கேட்ட கேள்விகளுக்கு ரஜினிகாந்த் மிக இயல்பாகவும், ஜாலியாகவும் பதில் அளித்தார். எனினும், அவர் கேட்கத் தொடங்குவதற்கு முன்பே, ரொம்ப கடினமான கேள்விகளைத் தவிர்க்கும்படியும் வேண்டுகோள் விடுத்தார். விவேக் கேள்விகளும் ரஜினியின் பதில்களும்.... பைரவி டு இந்திரன், சிவாஜிராவ் டு ரஜினிகாந்த், நடிகர் டு தலைவர் இந்த பயணம் பற்றி? என் 45 வருட சினிமா பயணத்தில் என்னால் முடிந்த அளவு என் படங்களில் நல்ல க...
மலேசியாவில் ரஜினி பேச்சு: ட்விட்டரில் கிளம்பும் கடும் எதிர்ப்பு!

மலேசியாவில் ரஜினி பேச்சு: ட்விட்டரில் கிளம்பும் கடும் எதிர்ப்பு!

அரசியல், உலகம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
மலேசியாவில் நடந்த நட்சத்திர கலைவிழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசிய பேச்சுக்கு, ட்விட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் வலைத்தளவாசிகள் கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். பலர் கேலி செய்து, 'மீம்'களை பதிவிட்டுள்ளனர். தமிழகத்தில் இதற்குமுன் திரைத்துறையில் இருந்து எத்தனையோ நடிகர்கள், கலைஞர்கள் அரசியலுக்கு வந்திருந்த போதும் ரஜினி அளவுக்கு யாரும் கடும் எதிர்ப்பை சம்பாதித்ததில்லை. ஆனால், தான் அரசியலுக்கு வருவது உறுதி என்று ரஜினிகாந்த் கடந்த டிசம்பர் 31ம் தேதி சொன்னாலும் சொன்னார், அவருக்கு பல்வேறு முனைகளில் இருந்தும் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. அரசியல் வருகை குறித்து பேசிய அடுத்த நாளே ரஜினிகாந்த், ரசிகர் மன்றங்களை புதுப்பிக்க வசதியாக 'ரஜினி மன்றம்' என்ற பெயரில் புதிய இணையதளம் தொடங்கியது, ராமகிருஷ்ண மடாதிபதியிடம் ஆசி, திமுக தலைவர் கருணாநிதியுடன் சந்திப்பு, 'ரஜினி மன்றம்' என்பதை மாற்றி ...
பெரியார், பாரதிதாசன் பல்கலைகளுக்கு புதிய துணைவேந்தர்கள் நியமனம்

பெரியார், பாரதிதாசன் பல்கலைகளுக்கு புதிய துணைவேந்தர்கள் நியமனம்

கோயம்பத்தூர், சிவகங்கை, சேலம், தமிழ்நாடு, திருச்சி, முக்கிய செய்திகள்
சேலம் பெரியார் பல்கலைக்கழகம் மற்றும் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகங்களுக்கு புதிய துணைவேந்தர்களை நியமித்து, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று (ஜனவரி 6, 2018) உத்தரவிட்டுள்ளார். அதன்படி, சேலம் பெரியார் பல்கலைக்கழகத்திற்கு பேராசிரியர் குழந்தைவேலு புதிய துணை வேந்தராக நியமிக்கப்பட்டு உள்ளார். இவர் தற்போது, கோவை பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் துறை பேராசிரியராக பணியாற்றி வருகிறார். அதேபோல், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் அறிவியல் துறை புல முதன்மையராக பணியாற்றி வரும் பேராசிரியர் பி.மணிசங்கர், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர்கள் இருவரும் விரைவில் பதவியேற்பார்கள் எனத்தெரிகிறது....
”பெண்களைவிட ஆண்களுக்கு  அதிக சம்பளம் கொடுத்தால் தண்டனை!”; எங்கே தெரியுமா?

”பெண்களைவிட ஆண்களுக்கு அதிக சம்பளம் கொடுத்தால் தண்டனை!”; எங்கே தெரியுமா?

இந்தியா, உலகம், சிறப்பு கட்டுரைகள், முக்கிய செய்திகள்
சம வேலைக்கு சம ஊதியமே தர மாட்டேங்கிறார்கள் என்ற புலம்பல்கள் அதிகரித்திருக்கும் இந்த வேளையில், ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கு குறைவாக ஊதியம் கொடுப்பது தண்டனைக்குரிய குற்றம் என்று தடாலடியாக சட்டம் கொண்டு வந்திருக்கிறது ஐஸ்லாந்து. ஆண், பெண் பாலின சமத்துவத்தில் ஆசிய நாடுகளைவிட ஐரோப்பிய நாடுகள் எப்போதும் ஒரு படி மேலேதான் இருக்கிறது எனலாம். அட, நம்ம இந்தியாவில் ஆண்கள் செய்யும் அதே வேலையை பெண்கள் செய்தாலும்கூட, ஆண்களுக்கு கொடுக்கப்படும் அளவுக்கு சம்பளமே கொடுக்கப்படுவது இல்லை. ஆண்கள் பெறும் ஊதியத்தில் 60 முதல் 70 விழுக்காடுதான் பெண்களின் ஊதியமாக இருக்கிறது. இத்தனைக்கும் நம்ம நாட்டு மக்கள்தொகையில் சரிபாதி பெண்கள். இந்தியா மட்டுமல்ல. உலகம் முழுவதுமே பெண்கள் எல்லா இடங்களிலும் பாலின பாகுபாட்டை சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அமெரிக்கா மாதிரியான வளர்ந்த நாடுகளிலும் இந்த பிரச்னை இருக்க...
இந்திய அளவில் டிவிட்டரில் டிரெண்டிங்  ஆன ரஜினியின் ‘#ஒரு நிமிஷம்-_ தலைசுத்திருச்சு!’

இந்திய அளவில் டிவிட்டரில் டிரெண்டிங் ஆன ரஜினியின் ‘#ஒரு நிமிஷம்-_ தலைசுத்திருச்சு!’

அரசியல், இந்தியா, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சினிமாவில் மட்டுமில்லாமல் தனது சொந்த வாழ்க்கையில் ரஜினிகாந்த் பேசிய பேச்சும் இப்போது டிவிட்டரில் இந்திய அளவில் டிரெண்டிங் ஆகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ரஜினி, விஜய், அஜீத், கருணாநிதி, ஸ்டாலின் உள்ளிட்டோரையும் நெட்டிஸன்கள் கிண்டலடித்துள்ளனர். கடந்த டிசம்பர் 31ம் தேதி தனது ரசிகர்களை சந்தித்த ரஜினி, தான் அரசியலுக்கு வருவது உறுதி என்றதுடன், ஆன்மிக அரசியல்தான் தனது கொள்கை என்றும் அறிவித்தார். அப்போது பேசுகையில், ''திடீரென்று ஒரு டிவி கேமராமேன் என்னிடம் வந்து உங்க கட்சியின் கொள்கைகள் என்ன என்று கேட்டார். எனக்கு அப்படியே ஒரு நிமிஷம் தலை சுத்திருச்சு,'' என்று பேசினார். சமூக வலைத்தளமான ட்விட்டரில் ரஜினிகாந்த் சொன்ன, 'ஒரு நிமிஷம் தலைசுத்திருச்சு' என்ற பேச்சுதான் இன்று இந்திய அளவில் டிரெண்டிங் ஆகியிருக்கிறது. '#ஒருநிமிஷம்_தலைசுத்திருச்சு' என்ற பெயரில் ஹேஸ்டேக் செய்துள்ளனர். ...
”புயலோ மழையோ குளிரோ எதுவும் எங்களுக்கு துன்பமில்லை!” – செய்தித்தாள் ‘லைன் பாய்’கள் கதை!

”புயலோ மழையோ குளிரோ எதுவும் எங்களுக்கு துன்பமில்லை!” – செய்தித்தாள் ‘லைன் பாய்’கள் கதை!

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  சில பணிகளில் குறைந்த உழைப்பு இருக்கும். அதீத லாபம் கிடைக்கும். சில பணிகளில் உழைப்பு விழுங்கும் அளவுக்கு பணப்பலன்கள் இருக்காது. இதில் இரண்டாவது வகையிலானது, வீட்டுக்கு வீடு செய்தித்தாள் போடும் 'லைன் பாய்'களின் வாழ்க்கை. செய்தித்தாளும் ஒரு கோப்பை தேநீரும்:   ''காலையில பேப்பர் பார்க்கலைனா எனக்கு பொழுதே ஓடாது. அதுவும், ஒரு கையில தேநீர் கோப்பையை பிடித்து ஒவ்வொரு மிடறாக உறிஞ்சி சுவைத்தபடி, செய்தித்தாள் வாசிக்கும் அனுபவமே தனிதான்,'' என பலர் சுகானுபவமாக சொல்வதுண்டு.     அவர்களில் பலர், செய்தித்தாள் விநியோகத்தில் இருக்கும் வலைப்பின்னல் அமைப்பு, உழைப்பு, கூலி, 'லைன் பாய்'களின் வாழ்க்கை போராட்டம் பற்றி அறிந்து இருக்க வாய்ப்பே இல்லை.   முகவர்கள்:   தினசரி செய்தித்தாளோ அல்லது வார / மாத சஞ்சிகைகளோ எதுவாக இருந்தாலும், அவை மாவட்ட அளவில் நியமிக்...
மீண்டும் மொழி அரசியலில் பாஜக அரசு!; தமிழை தகர்க்க முயற்சி?

மீண்டும் மொழி அரசியலில் பாஜக அரசு!; தமிழை தகர்க்க முயற்சி?

அரசியல், இந்தியா, சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
ஐ.நா. மன்றத்தில் ஹிந்தி மொழியை அலுவல் மொழியாக கொண்டு வருவதில் முனைப்பு காட்டும் பாஜக அரசு, தமிழ் மொழியின் வளர்ச்சியை முடக்குவதிலும், மாநில உரிமைகளை பறிப்பதிலும் தீவிரம் காட்டி வருகிறது. இந்திய அளவில் மொழிக்காக புரட்சி வெடித்தது என்றால், அந்த பெருமை தமிழ் மொழிக்கு மட்டுமே பொருந்தும். அத்தகைய போராட்டத்தை முன்னெடுத்ததில் திராவிட இயக்கங்களுக்கு பெரும்பங்கு உண்டு. 1963 மற்றும் 1965களில் உலகமே ஆச்சர்யப்படத்தக்க வகையில் ஹிந்தி மொழித் திணிப்புக்கு எதிரான போராட்டம் நடந்தது. ஆயினும், இந்தப் போராட்டம் திடீரென்று உருவெடுத்து இல்லை. இப்போராட்டங்களுக்கான விதை 1937லேயே விதைக்கப்பட்டு விட்டது. ஹிந்திக்கு எதிராக அப்போது துவங்கியதுதான் முதல் போராட்டம். தற்போது, மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் பாஜக, தொடக்கத்தில் இருந்தே மாநில அரசுகளின் அடிப்படை உரிமைகளை பறிப்பதிலேயே கவனம் செலுத்தி வருகிறத...