Wednesday, November 5மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

முக்கிய செய்திகள்

சிங்கம் களம் இறங்கிடுச்சே!;  வைகோவை நொறுக்கும் ‘நெட்டிஸன்’கள்

சிங்கம் களம் இறங்கிடுச்சே!; வைகோவை நொறுக்கும் ‘நெட்டிஸன்’கள்

அரசியல், தமிழ்நாடு, மதுரை, முக்கிய செய்திகள்
திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை முதலமைச்சர் ஆக்குவதுதான் தனது நோக்கம் என்ற மதிமுக தலைவர் வைகோவை, சமூகவலைத்தளத்தில் கடுமையாக கிண்டல் செய்து 'மீம்'கள் பதிவிட்டுள்ளனர். பலர் திமுகவுக்கு அறிவுரையும் வழங்கியுள்ளனர். பேருந்து கட்டணம் உயர்வைக் கண்டித்து மதுரையில் நேற்று (பிப்ரவரி 13, 2018) பொதுக்கூட்டம் நடந்தது. அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட மதிமுக தலைவர் வைகோ, இரண்டு முக்கிய முழக்கங்களை முன்வைத்தார். ஒன்று, திராவிடம் இல்லாத தமிழ்நாடு என்று யார் நினைத்தாலும் அது முடியாது. மற்றொன்று, திமுக செயல் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலினை தமிழகத்தின் முதலமைச்சர் ஆக்குவதுதான் என் நோக்கம் என்றும் கூறினார். சும்மாவே வைகோவை கேலி, கிண்டல் செய்யும் சமூகவலைத்தள பதிவர்களுக்கு இது போதாதா? இன்று நாள் முழுக்க அவரை கடுமையாக கிண்டல் செய்து எக்கச்சக்கமாக மீம்களை பதிவிட்டுள்ளனர். ஒரு காலத்தில் திமுகவின் மு...
5வது ஒருநாள் கிரிக்கெட்:  தென்னாப்பிரிக்கா மண்ணில் இந்தியா வரலாற்று சாதனை;  மிரட்டும் விராட் கோலி படை

5வது ஒருநாள் கிரிக்கெட்: தென்னாப்பிரிக்கா மண்ணில் இந்தியா வரலாற்று சாதனை; மிரட்டும் விராட் கோலி படை

இந்தியா, உலகம், முக்கிய செய்திகள்
தென்னாப்பிரிக்கா உடனான ஐந்தாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி, 73 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இத்துடன் 6 போட்டிகள் கொண்ட தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியதுடன், 25 ஆண்டுகால தொடர் தோல்வி என்ற சோகத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்து, வரலாற்று சாதனை படைத்துள்ளது. தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 6 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. தொடர்ச்சியாக மூன்று போட்டிகளில் 'ஹாட்ரிக்' வெற்றி பெற்ற இந்திய அணி, நான்காவது போட்டியில் தோல்வி அடைந்தது. இந்நிலையில் ஐந்தாவது ஒருநாள் போட்டி போர்ட் எலிசபெத் மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக நேற்று (பிப்ரவரி 13, 2018) நடந்தது.   ரோஹித் ஷர்மா சதம்:   டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா கேப்டன் மார்க்ராம், முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். தொடக்க வீரர்களான ஷிகர் தவான், ரோஹித் ஷர்ம...
5வது ஒருநாள்: ரோஹித் ஷர்மா அபார சதம்; இந்தியா 274 ரன்கள் குவிப்பு

5வது ஒருநாள்: ரோஹித் ஷர்மா அபார சதம்; இந்தியா 274 ரன்கள் குவிப்பு

இந்தியா, உலகம், முக்கிய செய்திகள், விளையாட்டு
போர்ட் எலிசபெத்தில் நடந்து வரும் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான ஐந்தாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா, 7 விக்கெட் இழப்பிற்கு 274 ரன்கள் எடுத்துள்ளது. அபாரமாக ஆடிய ரோஹித் ஷர்மா 115 ரன்களை குவித்தார். இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகள் இடையேயான ஐந்தாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி, போர்ட் எலிசபெத்தில் இன்று (பிப்ரவரி 13, 2018) நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா கேப்டன் மார்க்ராம் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். ஆறு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா தொடர்ச்சியாக முதல் மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. நான்காவது போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி வென்றது. தொடரில் இந்தியா 3-1 கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால், தென்னாப்பிரிக்கா மண்ணில் ஒருநாள் தொடரை கைப்பற்றிய முதல் ஆசிய அணி என்ற வரலாறு படைக்க வாய்ப்பு இருக்கிறது. அத...
இந்தியாவின் கோடீஸ்வர முதல்வர்கள் யார் யார்?; ஏழை முதல்வர் மாணிக் சர்க்கார்!

இந்தியாவின் கோடீஸ்வர முதல்வர்கள் யார் யார்?; ஏழை முதல்வர் மாணிக் சர்க்கார்!

அரசியல், இந்தியா, முக்கிய செய்திகள்
தேர்தல் சீர்திருத்தத்திற்காக போராடி வரும் ஏடிஆர் அமைப்பும், தேசிய தேர்தல் கண்காணிப்பகம் அமைப்பும் இணைந்து அண்மையில் ஓர் ஆய்வை மேற்கொண்டன. இந்திய ஒன்றிய அரசில் உள்ள மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் என மொத்தமுள்ள 31 முதலமைச்சர்களைப் பற்றிய ஆய்வு அது. அவர்களின் சொத்துமதிப்பு, அவர்களுக்கு எதிரான வழக்குகள், கல்வித்தகுதி போன்ற அம்சங்களை அவ்விரு அமைப்புகளும் ஆய்வு செய்தன. இன்றைய நிலையில் 25 முதலமைச்சர்கள் கோடீஸ்வரர்களாக உள்ளனர் என்கிறது அந்த ஆய்வு. அவர்களில் இருவர், 100 கோடி ரூபாய்க்கும் அதிகமாக சொத்துக்களை வைத்திருப்பவர்கள். ஒருவர், ஆந்திரா மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு. அவருடைய சொத்து மதிப்பு 177 கோடி ரூபாய். மற்றொருவர், அருணாச்சல பிரதேச மாநில முதல்வர் பீமா காண்டு. அவருடைய சொத்து மதிப்பு 129 கோடி ரூபாய். மூன்றாம் இடத்தில் இருக்கும் பஞ்சாப் மாநில முதல்வர் அம்ரீத்தர் சிங், 48 கோ...
தமிழ் மொழியை அங்கீகரித்த கூகுள் ஆட்சென்ஸ்!

தமிழ் மொழியை அங்கீகரித்த கூகுள் ஆட்சென்ஸ்!

இந்தியா, உலகம், முக்கிய செய்திகள்
இணைய உலகில் மிகப்பெரும் தேடியந்திரமாக உள்ள கூகுள், தனது ஆட்சென்ஸ் (AdSense) மூலமாக இதுவரை 42 மொழிகளுக்கு அங்கீகாரம் அளித்து இருந்தது. ஆட்சென்ஸ் அங்கீகாரம் பெற்ற மொழிகளில் வெளிவரும் இணையதளங்களுக்கு மட்டுமே கூகுள் நிறுவனம் விளம்பரங்கள் வழங்கி வந்தது. அதேநேரம், உலகளவில் 10 கோடி பேருக்கும் மேலான மக்களால் பேசப்பட்டு வரும் தமிழ் மொழிக்கு இதுவரை கூகுள் ஆட்சென்ஸ் அங்கீகாரம் இல்லாமல் இருந்து வந்த நிலையில், தற்போது தமிழ் மொழிக்கும் அங்கீகாரம் அளித்துள்ளது. கடந்த பிப்ரவரி 9, 2018ம் தேதி இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இதன்மூலமாக தமிழுக்கு புதிய பொருளாதார கதவுகள் திறந்துள்ளதாகக் கூறலாம். இனி உலகின் பல மூலைகளிலும் உள்ள தமிழர்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும். கடந்த பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வந்த தொடர் முயற்சிகளுக்குக் கிடைத்த வெற்றியாகவே ஆட்சென்ஸின் அங்கீகாரம் பார்க்கப்படுகிற...
டிஎன்பிஎஸ்சி பரிதாபங்கள்: மன்னிப்பு எந்த மொழிச் சொல்? நீங்களாவது சொல்லுங்க!

டிஎன்பிஎஸ்சி பரிதாபங்கள்: மன்னிப்பு எந்த மொழிச் சொல்? நீங்களாவது சொல்லுங்க!

சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட குரூப்-4 போட்டித்தேர்வு வழக்கம்போல் பல்வேறு குளறுபடியான வினாக்களால், வேலை தேடும் இளைஞர்களின் சாபத்தை அள்ளிக்கட்டிக் கொண்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி ஆணையத் தலைவராக முன்னாள் டிஜிபி நட்ராஜ் பொறுப்பேற்றதில் இருந்தே பல்வேறு புதிய முயற்சிகள் படிப்படியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவர் தலைவராக இருந்தபோது குரூப்-2 பிரிவில் இருந்த சில பணியிடங்களை குரூப்-1 தரத்திற்கு கொண்டு சென்றார். குரூப்-2 பிரிவில் நேர்காணல் இல்லாத பணியிடங்களை 'குரூப்-2 ஏ' என்றும், அப்பணியிடங்களை ஒருங்கிணைந்த சார்நிலை பணித்தொகுதியாகவும் மாற்றினார். அண்மையில், குரூப்-4 எழுத்தர் நிலையிலான தேர்வும், கிராம நிர்வாக அலுவலர் தேர்வும் ஒரே தேர்வாக நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. நேற்று முன்தினம் (பிப்ரவரி 11, 2018) நடந்த டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தே...
கூகுளை திணறடிக்கும் பிரியா வாரியார்!; ”கண்ணொடு கண்இணை நோக்கொக்கின்…”

கூகுளை திணறடிக்கும் பிரியா வாரியார்!; ”கண்ணொடு கண்இணை நோக்கொக்கின்…”

இந்தியா, உலகம், சினிமா, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
இந்தியர்களின் தேடலால் இன்றைய தேதியில் கூகுள் தேடியந்திரத்தையே களைத்துப் போகச்செய்திருக்கிறார் ஒரு கேரளத்துப்பெண். பிரியா பிரகாஷ் வாரியார் என்ற மலையாள நடிகை, தன் கண்களால் கோடிக்கணக்கான இந்திய ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்திருக்கிறார். அதென்னவோ அரபிக்கடலோர பெண்களுக்கும் அழகுக்கும் அத்தனை பொருத்தம். அதனால்தான் வைரமுத்துவும்கூட, 'அந்த அரபிக்கடலோரம் ஓர் அழகைக் கண்டேனே...' என்று பாடல் எழுதியிருப்பார். நீட் தேர்வு காரணமாக மருத்துவப் படிப்பு கனவான விரக்தியில் அனிதா தற்கொலை செய்து கொண்ட செய்தி, ஊரெல்லம் பற்றி எரிந்தபோதுகூட, மற்றொருபுறம், மலையாள தேசத்தின் ஜிமிக்கி கம்மல் பாடலும், நடனமும் சமூக வலைத்தளங்களில் 'வைரல்' ஆகின. மனித மனங்களின் இரு எதிர்நிலையில் உள்ள குணாம்சமே இதற்குக் காரணம். துக்க வீட்டை விட்டு வெளியேறிவிட்டால், அடுத்த கணமே கொண்டாட்டத்திலும் ஈடுபடுகின்றனர் என்பதற்கு ஜிமிக்கி கம்மல்...
முன்னாள் துணைவேந்தர்  கணபதிக்கு 4 நாள் போலீஸ் காவல்

முன்னாள் துணைவேந்தர் கணபதிக்கு 4 நாள் போலீஸ் காவல்

குற்றம், கோயம்பத்தூர், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
உதவி பேராசிரியர் பணி நியமனத்திற்கு ரூ.30 லட்சம் லஞ்சம் பெற்ற புகாரில் கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதி, பேராசிரியர் தர்மராஜ் ஆகியோர் கடந்த 3ம் தேதி கைது செய்யப்பட்டனர். இருவரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இதையடுத்து கணபதியை பிப்ரவரி 6ம் தேதி முதல் பணி இடைநீக்கம் செய்வதாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உத்தரவிட்டார். கணபதியை கைதுக்குப் பின்னர் 20க்கும் மேற்பட்டோர் அவர் மீது புதிதாக லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்தனர். பணி நியமன விவகாரத்தில் கணபதி மட்டுமின்றி அரசியல் புள்ளிகளுக்கும், பிற பல்கலைக்கழக துணை வேந்தர்கள் சிலருக்கும்கூட தொடர்பு இருப்பதாக தெரியவந்துள்ளது. இதனால் அவரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு, கோவை லஞ்ச ஒழிப்புப்பிரிவு காவல்துறையினர் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த மனுவை கோவை ஊழல் கண்காணிப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மி...
கிரிக்கெட்: இந்திய பந்துவீச்சை தென்னாப்பிரிக்கா கிழி… கிழி… கிழி…;  ஷிகர் தவான் சாதனை சதம் வீண்

கிரிக்கெட்: இந்திய பந்துவீச்சை தென்னாப்பிரிக்கா கிழி… கிழி… கிழி…; ஷிகர் தவான் சாதனை சதம் வீண்

இந்தியா, உலகம், முக்கிய செய்திகள், விளையாட்டு
ஜோகன்னஸ்பெர்க்கில் நேற்று (பிப்ரவரி 10, 2018) நடந்த நான்காவது ஒரு நாள் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி, 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது. இந்திய வீரர் ஷிகர் தவானின் சதம் வீணானது.  தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 6 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே தொடர்ச்சியாக மூன்று போட்டிகளை வென்றுள்ள இந்திய அணி, இந்தப் போட்டியிலும் வென்று, தொடரை கைப்பற்றும் முனைப்புடன் களமிறங்கியது. பிங்க் நிற சீருடை: மார்பக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக தென்னாப்பிரிக்கா வீரர்கள் தங்களது வழக்கமான பச்சை நிற சீருடையை தவிர்த்து, பிங்க் நிற சீருடையில் களம் புகுந்தனர். போட்டி நடைபெறும் ஜோகன்னஸ்பெர்க்கின் வாண்டரர்ஸ் மைதானத்திலும் ஏராளமான ரசிகர்கள் பிங்க் நிற உடை அணிந்து வந்திருந்தனர். இந்திய அணி வீரர்கள் தங...
ஜீயர் உண்ணாவிரதமும் மோடியின் பக்கோடாவும்!

ஜீயர் உண்ணாவிரதமும் மோடியின் பக்கோடாவும்!

அரசியல், சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தமிழகத்தில் பாஜக தங்கள் இருப்பை நிலைநிறுத்துவதற்காக மேற்கொள்ளும் ஒவ்வொரு முயற்சியும் தவிடுபொடியாகிக் கொண்டே போவதை கிண்டலடித்து, சமூகவலைத்தளங்களில் பலர் கேலியான விமர்சனங்களை பதிவிட்டுள்ளனர். நரேந்திர மோடியின் 'பக்கோடா' முதல் ஜீயர் உண்ணாவிரதம் வரை ஒவ்வொன்றையும் முடிச்சுப்போட்டு கருத்துகளை பதிவிட்டுள்ளனர்.   மத்தியில் அசுர பலத்தில் இருக்கும்போதே, தமிழகத்திலும் முக்கிய கட்சிகளின் வரிசையில் வந்துவிட வேண்டும் என்றுதான் பாஜக ரொம்பவே மெனக்கெடுகிறது. ஆனால், அதன் ஒவ்வொரு முயற்சியும் பிள்ளையார் பிடிக்க குரங்கான கதையாகி விடுகிறது. சாரணர் தேர்தல் முதல் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நோட்டாவிடம் தோற்றது வரை பாஜகவின் பலம் என்ன என்பதை தமிழ்நாடே அறியும். அவர்கள் வெற்றி என்பதெல்லாம் இபிஎஸ், ஓபிஎஸ் கும்பலை வளைத்துப் போட்டது மட்டுமே. மங்குனி அமைச்சர்களுக்கும் விழுந்து வணங்குவதற்கு பாதங்கள...