Wednesday, October 22மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

முக்கிய செய்திகள்

சேலத்தில் நாளை முதல் புதிய நேரக்கட்டுப்பாடு அமல்; தேநீர் கடைகள் மூடல்! ஆட்சியர் ராமன் அறிவிப்பு!!

சேலத்தில் நாளை முதல் புதிய நேரக்கட்டுப்பாடு அமல்; தேநீர் கடைகள் மூடல்! ஆட்சியர் ராமன் அறிவிப்பு!!

சேலம், முக்கிய செய்திகள்
சேலம் மாவட்டத்தில் மீண்டும் கொரோனா நோய்த்தொற்று பரவல் அதிகரித்ததால், அனைத்து வகையான கடைகளும் நாளை முதல் (ஜூன் 24) மாலை 4 மணி வரை மட்டுமே இயங்க அனுமதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ராமன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஆட்சியர் ராமன் செவ்வாய்க்கிழமை (ஜூன் 23) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:   சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கொரோனா நோய்த்தொற்றின் வேகம் அதிகரித்து வருகிறது. பிற மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து இ-பாஸ் அனுமதியின்றி வருகை தந்தவர்கள், தகவல் தெரிவிக்காமலும், எவ்வித பரிசோதனைகளும் செய்து கொள்ளாமல் இருந்ததால் அவர்களுக்கு கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.   சேலம் மாவட்டத்தில் 35 பேர் மட்டுமே ஆரம்பத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது 185 ஆக அதிகரித்துள்ளது. மேலும், வெளி ...
ஏற்றத்தில் நிப்டி! 10300 புள்ளிகளை எட்டும்!!

ஏற்றத்தில் நிப்டி! 10300 புள்ளிகளை எட்டும்!!

முக்கிய செய்திகள், வர்த்தகம்
இந்திய பங்குச்சந்தைகளான சென்செக்ஸ் மற்றும் நிப்டி ஆகிய இரண்டிலுமே கடந்த வெள்ளியன்று (ஜூன் 19) ஏற்றத்துடன் வர்த்தகம் முடிந்திருப்பது, முதலீட்டாளர்களிடம் நம்பிக்கையை அதிகரித்திருக்கிறது. கடந்த சில வாரங்களாகவே சென்செக்ஸ், நிப்டி இரண்டு சந்தைகளிலுமே சராசரியாக 3 சதவீதம் வரை வர்த்தகம் உயர்ந்துள்ளன. கொரோனா வைரஸின் இரண்டாம் கட்ட அலை காரணமாக கடந்த வாரம் உலகம் முழுவதுமே பங்குச்சந்தைகள் சரிவுடன் தொடங்கின. இதுபோன்ற செய்திகளால் முதலீட்டாளர்களிடமும் அச்சம் தொற்றிக் கொள்கிறது. கடந்த வாரம், கொரோனா மற்றும் இந்தியா - சீனா நாடுகளிடையேயான பதற்றம் என இந்திய பங்குச்சந்தைகளை இரட்டை தாக்குதல் தாக்கியது. எனினும், சென்செக்ஸ் மற்றும் நிப்டி ஆகியவற்றில் கடந்த வாரத்தின் பிற்பகுதி தித்திப்புடன் வர்த்தகம் முடிந்ததால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.   இந...
கருங்கால் கொக்கும்… முலை குளமும்!

கருங்கால் கொக்கும்… முலை குளமும்!

இலக்கியம், முக்கிய செய்திகள்
  சங்க இலக்கியங்களில் பெண்களின் அங்கங்கள் குறித்தான வர்ணனைகள் உச்சம் தொட்டாலும், அவை ரசிக்கத்தக்க வகையிலேயே இருந்திருக்கின்றன. முகச்சுளிப்பை ஏற்படுத்துவதில்லை. குறிப்பாகச் சொல்ல வேண்டுமெனில், குறுந்தொகையில் உவமைகள் வெகு இயல்பாக பொருந்தி வந்திருக்கும். எல்லா காலத்திலும் ரசிக்கத்தக்க வகையில் பாடல்கள் அமைந்திருப்பதும் குறுந்தொகையின் தனித்த அடையாளம்.   எட்டுத்தொகையுள் செறிவும், இனிமையும் மிக்கது, குறுந்தொகை என்று எந்த அவையிலும் நாம் துணிச்சலாக கட்டுத்தொகை கூட வைக்க முடியும்.   தமிழ் ஆர்வலர்களிடம் உரையாடுகையில் அடிக்கடி இப்படிச் சொல்வேன்... ''குறுந்தொகையில் பாடல்களை எழுதிய புலவர்கள், பாடு பொருள்களுக்காக மெனக்கெட்டிருப்பார்களே தவிர, பொருள் (பரிசில்) தேடி அலைந்திருக்க மாட்டார்கள். ஆனால், இப்போதுள்ள பேச்சாளர்கள் சிலர், க...
இனி இந்தியாவில் விவசாயமே இருக்காது! ரோடு இருக்கும்; சோறு கிடைக்காது!!

இனி இந்தியாவில் விவசாயமே இருக்காது! ரோடு இருக்கும்; சோறு கிடைக்காது!!

சிறப்பு கட்டுரைகள், சேலம், திருவண்ணாமலை, முக்கிய செய்திகள்
கொரோனா ஊரடங்கு என்ற பெயரில் மக்களை வீட்டிற்குள் முடக்கிவிட்டு நடுவண் பாஜக அரசு, நாட்டையே தனியாருக்கு தாரை வார்க்கும் திட்டங்களை எவ்வித விவாதத்திற்கும் உட்படுத்தாமல் அடுத்தடுத்து நிறைவேற்றி வருகிறது. இது, அரசியல் கட்சிகளிடம் மட்டுமின்றி பலமட்டங்களிலும் அதிர்வலைகளை உருவாக்கி இருக்கிறது. நடுவண் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அண்மையில், ராணுவத் தளவாடங்கள் உற்பத்தி, மின் விநியோகம், அணுசக்தி தயாரித்தல், விமான போக்குவரத்து, கனிமச்சுரங்கம் உள்ளிட்ட முக்கிய துறைகளில் தனியார் பங்களிப்பு ஊக்குவிக்கப்படும் என்று அறிவித்தார். இத்தகைய அதிரடியான முடிவுகள் எல்லாமே, தேசிய கட்டமைப்பு மேம்பாடு வரைவுத் திட்டத்திலேயே மறைமுகமாக கோடிட்டு காட்டியிருப்பது இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.   தேசிய கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்ட (National Infrastructure Pipel...
பங்குச்சந்தை: துள்ளிய கரடியை வீழ்த்திய காளை! கடந்த வார கடைசியில் நடந்தது என்ன?

பங்குச்சந்தை: துள்ளிய கரடியை வீழ்த்திய காளை! கடந்த வார கடைசியில் நடந்தது என்ன?

முக்கிய செய்திகள், வர்த்தகம்
இந்திய பங்குச்சந்தைகளில் கடந்த வாரத்தின் கடைசி வர்த்தக நாளில், முதல் இரண்டு மணி நேரத்திற்கு கரடி ஆட்டம் காட்டி வந்த நிலையில், இரண்டாவது சுற்றில் காளையின் ஆட்டம் தொடங்கியது. பங்குச்சந்தைகள் ஓரளவு சரிவிலிருந்து மீண்டதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.   கரடியின் ஆட்டம்!:   கடந்த வியாழனன்று (ஜூன் 11), மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 33538 புள்ளிகளுடன் முடிவடைந்தது. சந்தை ஆய்வாளர்கள் முன்பே எச்சரித்தது போலவே வாரத்தின் கடைசி வர்த்தக நாளான வெள்ளியன்று (ஜூன் 12), ஆரம்பத்திலேயே சென்செக்ஸ் 32436 புள்ளிகளில்தான் துவங்கியது. அதாவது முந்தைய நாள் முடிவைக் காட்டிலும் இது 1102 புள்ளிகள் வீழ்ச்சி ஆகும்.   வர்த்தகம் தொடங்கிய முதல் இரண்டு மணி நேரத்தில் பெரிய முன்னேற்றம் இல்லாததால் முதலீட்டாளர்கள் உற்சாகம் இழந்தனர். எனினும், நீண்ட க...
பிஹெச்.டி., ‘வைவா’ தேர்வுக்கு ஓராண்டு அவகாசம் நீட்டிப்பு!

பிஹெச்.டி., ‘வைவா’ தேர்வுக்கு ஓராண்டு அவகாசம் நீட்டிப்பு!

கல்வி, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
பி.ஹெச்டி., எம்.பில்., படித்து வரும் மாணவர்களுக்கு 'வைவா-வோஸ்' எனப்படும் வாய்மொழித் தேர்வில் கலந்து கொள்ள மேலும் ஓராண்டு காலம் அவகாசத்தை நீட்டித்து உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழக உயர்கல்வித்துறை செயலர் அபூர்வா, அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது:   கொரோனா நோய்த்தொற்று அபாயம் காரணமாக, பல்கலைக்கழகங்களில் பிஹெச்.டி., எம்.பில்., ஆராய்ச்சிப் படிப்பு மேற்கொண்டு வரும் மாணவர்களுக்கு வாய்மொழித் தேர்வு நடத்தி முடிப்பதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ஆராய்ச்சிப் படிப்பு மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அவர்கள் வாய்மொழித் தேர்வுக்கு பதிவு செய்திருந்த காலம் ஏற்கனவே முடிந்திருந்தால், அந்த நாளில் இருந்து மேலும் ஓராண்டு காலம் வாய்மொழித்தேர்வை முடிக்க அவகாசம் நீட்டிக்கப்படுகிறது.   ஆராய்ச்சி மாணவ...
ஒரே நாளில் 34% விலை ஏறிய வோடபோன் ஐடியா பங்குகள்! கூகுள் பேச்சுவார்த்தை எதிரொலி!!

ஒரே நாளில் 34% விலை ஏறிய வோடபோன் ஐடியா பங்குகள்! கூகுள் பேச்சுவார்த்தை எதிரொலி!!

முக்கிய செய்திகள், வர்த்தகம்
கூகுள் நிறுவனம், வோடபோன் ஐடியா நிறுவனத்தில் கணிசமான பங்குகளை வாங்க உள்ளதாக பேச்சுகள் எழுந்ததை அடுத்து, மே மாத கடைசி வர்த்தக நாளில் இந்நிறுவனத்தின் பங்குகள் 34 சதவீதம் வரை அதிரடியாக உயர்ந்தது. இந்தியாவின் பெரும் கோடீஸ்வரரான முகேஷ் அம்பானி, தன்னுடைய ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் கணிசமான பங்குகளை அண்மையில் பேஸ்புக், சில்வர் லேக், விஸ்டா ஈக்விட்டி, ஜெனரல் அட்லாண்டிக் ஆகிய நிறுவனங்களுக்கு விற்றதன் மூலம் சுமார் 75 ஆயிரம் கோடி ரூபாயை திரட்டினார்.   பேஸ்புக் நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் மீது பார்வையைச் செலுத்திய நிலையில், உலகின் மற்றொரு டிஜிட்டல் ஜாம்பவனான கூகுள் நிறுவனமும், இந்திய தொலைதொடர்புத் துறையில் கால் பதிக்க ஆர்வம் காட்டுகிறது.   கூகுள் நிறுவனம், வோடபோன் ஐடியா நிறுவனத்திடம் இருந்து 5 சதவீத பங்குகளை வாங்க திட்டமிட்டு இரு...
சேலம்: பிளஸ்-2 விடைத்தாள் மதிப்பீடு இன்று தொடக்கம்! 200 மையங்களில் நடக்கிறது!

சேலம்: பிளஸ்-2 விடைத்தாள் மதிப்பீடு இன்று தொடக்கம்! 200 மையங்களில் நடக்கிறது!

கல்வி, சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தமிழகத்தில், பிளஸ்-2 பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் இன்று (புதன்கிழமை, மே 27) தொடங்குகிறது. கொரோனா தொற்றின் தாக்கம் அதிகமுள்ளதால், சென்னை நீங்கலாக மற்ற மாவட்டங்களில் மொத்தம் 200 மையங்களில் இப்பணிகள் நடக்கிறது. விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் ஜூன் 23ம் தேதி நிறைவு பெறுகின்றன.   தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் பிளஸ்-2 பொதுத்தேர்வு நடந்தது. அதன்பிறகு, கொரோனா தொற்று அபாயத்தால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் விடைத்தாள் திருத்தல், எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு பணிகள் முடங்கின. தற்போது ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்டுள்ள நிலையில், பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணிகளை பள்ளிக்கல்வித்துறை இன்று தொடங்குகிறது.   விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளில் மொத்தம் 40 ஆயிரம் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். இன்று முதன்மைத் தேர்...
சேலம் – சென்னை வானூர்தி சேவை நாளை முதல் மீண்டும் தொடக்கம்! பயண நேரத்தில் மாற்றம்!!

சேலம் – சென்னை வானூர்தி சேவை நாளை முதல் மீண்டும் தொடக்கம்! பயண நேரத்தில் மாற்றம்!!

சேலம், முக்கிய செய்திகள்
கொரோனா ஊரடங்கால் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த, சேலம் - சென்னை இடையேயான பயணிகள் வானூர்தி சேவை நாளை (மே 27, புதன்கிழமை) முதல் மீண்டும் தொடங்குகிறது. பயண நேரத்தில் மட்டும் சிறு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.   ஊரடங்கு:   கொரோனா வைரஸ் பரவல் அபாயம் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 24ம் தேதி மாலை 6 மணி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதுவரை நான்கு கட்டங்களாக பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.   நோய்ப்பரவல் அபாயம் மட்டுமின்றி சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க முடியாது என்பதால் பேருந்து, ரயில், வானூர்தி சேவைகள் உள்ளிட்ட அனைத்து வகையான பொது போக்குவரத்துகளும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. சேலம் காமலாபுரம் வானூர்தி நிலையத்தில் இருந்து சென்னை, திருப்பதிக்கு இயக்கப்பட்டு வந்த ட்ரூஜெட் வானூர்தி சேவையும் நிறுத்தப்பட்டது. ...
கருப்பு வெள்ளை: பஞ்சாயத்து டிவி எனும் சமத்துவ போராளி!

கருப்பு வெள்ளை: பஞ்சாயத்து டிவி எனும் சமத்துவ போராளி!

சிறப்பு கட்டுரைகள், முக்கிய செய்திகள், வரலாறு
-பனை ஓலை-   நாங்களும் ஒரு சாலிடேர் (கருப்பு-வெள்ளை) டி.வி. வைத்திருந்தோம். 1992க்குப் பிறகான காலக்கட்டம் அது. சேலத்தில் தாய்வழி பாட்டியுடன் வசித்து வந்த எனது மூத்த அண்ணன், அந்தப் பழைய சாலிடேர் டி.வி.,யை சொந்த ஊரில் பெற்றோருடன் வசித்து வரும் எங்களிடம் கொடுத்துவிட்டு, அவர் புதிதாக ஓனிடா கலர் டி.வி. வாங்கினார். கொம்பும், வாலும், நீண்ட காதுகளுடன் மொட்டத்தலை 'டெவில் மேன்' வரும் விளம்பரத்தால் ஈர்க்கப்பட்டு, அந்த டி.வி.யை அண்ணன் வாங்கினார். அப்போதே அதன் விலை ரூ.10 ஆயிரத்துக்கு மேல் என 'நினைக்கிறேன்'. 'போர்ட்டபிள்' அளவுக்கும் சற்று பெரிய திரை கொண்டது. நாங்கள் டி.வி. வாங்குவதற்கு முன்பு வரை, ஊர் மாரியம்மன் கோயிலில் இருந்த பஞ்சாயத்து டி.வி.தான் ஒட்டுமொத்த கிராமத்துக்கும் ஒரே சின்னத்திரை. சிறிய அறைக்குள் ஒரு கிராமமே, ஒருவர் மூச்சுக் காற்றை ஒரு...