Tuesday, April 23மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

திண்ணை: அதிமுக கூட்டணிக்குள் பாமக வந்தது எப்படி?

”உஷ் அப்பாடா….இப்பவே இப்படி
சுட்டெரிக்குதே… இன்னும் அக்னி
நட்சத்திர சீசன்லலாம் நம்மாள
பகல்ல வெளியே தலைக்காட்டக்கூட
முடியாது போலருக்கு…” அடர்த்தியான
தலைமுடி ஊடாக வழிந்த
வியர்வையைத் துடைத்தபடி
திண்ணையில் வந்து அமர்ந்தார்
பேனாக்காரர்.

”வெயில் மட்டுமா…? அரசியல் களமும் சூடுபிடிச்சிடுச்சே. இப்படியே கொளுத்துனா கத்திரி வெயில்ல மூளை தெறிச்சி வெளியே விழுந்துடும் போல. ஆனாலும் அதெல்லாம் மூளை இருக்கறவன் பட வேண்டிய கவல. எனக்கெதுக்கு…” என தன்னைத்தானே எள்ளல் செய்து கொண்டார் நக்கல் நல்லசாமி.

 

”சரி…. சரி… சட்டுபுட்டுனு வந்த தகவல சொல்லிட்டுப் போயிடறேன்… இன்னும் அரசியல் சேதி நிறைய எழுத வேண்டியிருக்கு. அதிமுக, திமுகவோட எந்தக் காலத்துலயும் கூட்டு வைக்க மாட்டோம். வேணும்னா பத்திரம்கூட எழுதித் தற்ரோம்னு சின்ன மாங்கா sorry… சின்ன அய்யா சொன்னாருல்ல…?”

”ஆமா…அதுக்கென்ன இப்போ… தன் குடும்பத்துல இருந்து யாராவது அரசியலுக்கு வந்தா முச்சந்தில நிக்க வெச்சி வௌக்குமாத்தால அடிங்கணுகூடதான் தைலாபுரத்துக்காரரு சொன்னாரு. நேரத்துக்கு ஒரு பேச்சு பேசறது தைலாபுரத்தாருக்கு ஒண்ணும் புதுசு இல்லையே…” என்றபடியே பழச்சாறுடன் வீட்டுக்குள் இருந்து வெளியே வந்தார், ஞானவெட்டியார்.

 

”ஜெயலலிதா மரணம், டிடிவி தினகரன் தனி ஆவர்த்தனம்னு இல கட்சியும் கொஞ்சம் கலகலத்துதான் போயிருக்குது. எதிரணியில விசிக இருக்கறதுனால எப்படியும் கொங்கு மண்டலத்துல அந்தக் கூட்டணிக்கு பெரிய சரிவு ஏற்படும்னு உளவுத்துறை ரிப்போர்ட் போட்டு இருந்தது. அதனால, ஏற்கனவே கொங்கு மண்டலத்துல வலுவாக இருக்கற அதிமுக இந்தமுறை, பாமக மற்றும் கவுண்டர் அமைப்புகள கூட்டணிக்குள்ள கொண்டு வந்துட்டா இல கட்சி பங்கமில்லாம கரையேறிடலாம்னும் சொல்லியிருக்காங்க.

ஒருவேள, பாமக முரண்டு பிடிச்சுதுன்னா,
அந்தக் கட்சியை கலகலத்துப்
போகச் செஞ்சிடணும்னு இபிஎஸ்
முடிவு செஞ்சிட்டாரு. வன்னியர்
நல அறக்கட்டளை சொத்துகளை
மீட்க தனி வாரியம் அமைச்சது,
ராமசாமி படையாச்சியாருக்கு
மணிமண்டபம் இப்படி எல்லாமே
தைலாபுரத்துக்காரர வழிக்குக் கொண்டு
வர்றதுக்காக செஞ்சதுதான்.
இபிஎஸ் அன் கோ இந்தளவுக்கு
யோசிக்கும்னுலாம் ஆரம்பத்துல
டாக்டர் அய்யாவும், சின்ன அய்யாவும்
யோசிக்கவே இல்ல.

மாற்றம் முன்னேற்றம்
லவ்பெல்லுங்கிறதெல்லாம் அப்புறம்தான்.
மொதல்ல சோறு முக்கியம்ல…
அதான் இல கட்சியோட கூட்டு
சேர்ந்தாச்சு. ரெட்டை இலக்கத்துல
சீட் எதிர்பார்த்தாங்க.
சின்ன அய்யாவுக்கு ராஜ்யசபா
சீட்டுனு சொன்னதுக்கப்புறம்
கொஞ்சம் மாம்பழக்கட்சி இறங்கி வந்தாங்க.
இந்தக் கூட்டணி ஜெயிச்சா,
தாமரை கட்சியிடம் சொல்லி
சின்ன அய்யாவை மறுபடியும்
சுகாதாரத்துறையில காபினெட்
மந்திரியாக்கிடலாம்னு சொல்லி வைக்க,
கடைசில 7 சீட்டுக்கு மாம்பழம்
கனிஞ்சி டுச்சாம்.

 

அத்தோட தைலாபுரத்துக்காரரு இன்னொரு முக்கிய நிபந்தனையும் வெச்சிருக்காரு,” என்று பொடி வைத்து நிறுத்தினார் பேனாக்காரர்.

 

”அதான் அவரே சொன்னாரே. நீட் தேர்வில் இருந்து விலக்கு, மதுக்கடைகள மூடறது, காவிரி விவகாரம் அதுதானே?” என்ற கேள்வியுடன் அரட்டையில் நுழைந்தார் பொய்யாமொழியார்.

 

”ம்க்கும்”

”சமீபத்துல அரசாங்கம் வன்னியர்
நல வாரியம் அமைச்சதே. அந்த
வாரியத்தோட செயல்பாடுகளை
அடியோட முடக்கி வைக்கணும்கிறதுதான்
தைலாபுரத்தாரோட முக்கிய நிபந்தனையாம்.
அந்த சொத்துக்களை மீட்கறதுனு
அரசாங்கம் களத்துல இறங்குச்சினா,
அது தைலாபுரத்தாரோட அடிமடியிலயே
கை வைச்சதுபோல ஆகிடும்னு
நினைக்கிறாராம். இந்த நிபந்தனைக்கு
ஓகே சொன்னதுக்கப்புறம்தான்
தைலாபுரத்தார், இல கட்சியோட
கூட்டணிக்கு முழு சம்மதமும்
சொன்னதோட, 21 சட்டமன்ற தொகுதி
இடைத்தேர்தலின்போது பங்கு
கேட்கமாட்டோம்னு இல கட்சி
கேட்காமலேயே வாக்குறுதியும்
கொடுத்தாராம்,” என்றார்
பேனாக்காரர்.

 

”இல கட்சியும், மாம்பழக் கட்சியும் இணைஞ்சது எதிர் முகாம்ல ரொம்பவே வயித்தெரிச்சல ஏற்படுத்தியிருக்குனுதான் பேசிக்கிறாங்கப்பா. முதல் நாள் இரவு வரைக்கும் சின்ன மாங்கா, சூரியக்கட்சியோ பேசிக்கிட்டு இருந்துட்டு மறுநாள் காலையில இல கட்சியோட கூட்டணி ஒப்பந்தம் போட்டதுதான் அவங்களோட டென்ஷனுக்கு காரணமாம்.

 

திராவிட கட்சிகளோட ஒருபோதும் கூட்டணி வைக்க மாட்டோம்ணு சொல்லிட்டு இப்ப இல கட்சியோட கூட்டு சேர்ந்தத பத்தி தளபதியே சூடாக பேச ஆரம்பிச்சிட்டாருப்பா. அதுசரி… இல கட்சி திராவிட கட்சியா என்ன?,” என்ற கேள்வியோடு திண்ணையில் இருந்து எழுந்து நடந்தார் பேனாக்காரர்.

 

சோறு முக்கியம் பாஸ்…

 

– பேனாக்காரன்