Friday, March 29மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: ஜெயலலிதா மரணம்

திண்ணை: அதிமுக கூட்டணிக்குள் பாமக வந்தது எப்படி?

திண்ணை: அதிமுக கூட்டணிக்குள் பாமக வந்தது எப்படி?

அரசியல், திண்ணை, முக்கிய செய்திகள்
''உஷ் அப்பாடா....இப்பவே இப்படி சுட்டெரிக்குதே... இன்னும் அக்னி நட்சத்திர சீசன்லலாம் நம்மாள பகல்ல வெளியே தலைக்காட்டக்கூட முடியாது போலருக்கு..." அடர்த்தியான தலைமுடி ஊடாக வழிந்த வியர்வையைத் துடைத்தபடி திண்ணையில் வந்து அமர்ந்தார் பேனாக்காரர். ''வெயில் மட்டுமா...? அரசியல் களமும் சூடுபிடிச்சிடுச்சே. இப்படியே கொளுத்துனா கத்திரி வெயில்ல மூளை தெறிச்சி வெளியே விழுந்துடும் போல. ஆனாலும் அதெல்லாம் மூளை இருக்கறவன் பட வேண்டிய கவல. எனக்கெதுக்கு...'' என தன்னைத்தானே எள்ளல் செய்து கொண்டார் நக்கல் நல்லசாமி.   ''சரி.... சரி... சட்டுபுட்டுனு வந்த தகவல சொல்லிட்டுப் போயிடறேன்... இன்னும் அரசியல் சேதி நிறைய எழுத வேண்டியிருக்கு. அதிமுக, திமுகவோட எந்தக் காலத்துலயும் கூட்டு வைக்க மாட்டோம். வேணும்னா பத்திரம்கூட எழுதித் தற்ரோம்னு சின்ன மாங்கா sorry... சின்ன அய்யா சொன்னாருல்ல...?'' ''ஆம
தமிழை கொலை செய்யும் ஊடகங்கள்! நாஞ்சில் சம்பத் ‘நறநற!!’

தமிழை கொலை செய்யும் ஊடகங்கள்! நாஞ்சில் சம்பத் ‘நறநற!!’

அரசியல், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  தமிழ்நாட்டில் உள்ள எல்லா காட்சி ஊடகங்களும் திட்டமிட்டு தமிழ்க்கொலை செய்வதாகவும், அதனாலேயே ஊடக விவாதங்களில் பங்கேற்க விரும்புவதில்லை என்றும் நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.   இலக்கிய மேடை, அரசியல் மேடை என இரட்டை குதிரையில் சவாரி செய்து வந்த தரமான சொற்பொழிவாளர்களுள் ஒருவரான நாஞ்சில் சம்பத், அரசியல் களத்தை விட்டு வெறியேறி விட்டதாக கடந்த ஆண்டு கூறினார். மதிமுக தலைவர் வைகோவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் அக்கட்சியில் இருந்து வெளியேறி, சில காலம் ஒதுங்கி இருந்தார். பின்னர் ஜெயலலிதாவின் அழைப்பை ஏற்று அக்கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். அவர் கட்சியில் சேர்ந்த வேகத்திலேயே துணை கொள்கைபரப்பு செயலாளர் பதவி கொடுத்து அழகு பார்த்தார் ஜெயலலிதா. சுற்றுப்பயணம் மேற்கொள்ள வசதியாக அவருக்கு ஜெ., புதிதாக இன்னோவா கார் ஒன்றும் பரிசாக வழங்கினார். இன்னோவா காருக்காக அதிமுகவ
ஓபிஎஸ்ஸை கழற்றிவிட ஆழம் பார்க்கிறாரா இபிஎஸ்?

ஓபிஎஸ்ஸை கழற்றிவிட ஆழம் பார்க்கிறாரா இபிஎஸ்?

அரசியல், சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
''எனக்குப் பின்னாலும் அதிமுக என்ற இயக்கம் இன்னும் நூறு ஆண்டுகள் ஆனாலும் மக்கள் நலனுக்காகவே செயல்படும்,'' என்றார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா. இப்படி அவர் சட்டப்பேரவையிலேயே முழங்கினார். எந்த இயக்கம் மக்கள் நலனுக்காக செயல்படும் என்று சொன்னாரோ, அந்த இயக்கம்தான் சில காலம் கூவத்தூர் விடுதியிலும், புதுச்சேரி விடுதியிலும், கல்லறையிலும் முடங்கிக் கிடந்தது. அடுத்த தேர்தல் வரையிலாவது அந்த இயக்கம் உயிர்ப்புடன் இருக்குமா என்பதே கேள்விக்குறியான நிலையில் இருக்கிறது. அதிமுகவை மீட்டெடுக்க ஜெயலலிதா, ஏசு கிறிஸ்து போல மீண்டும் உயிர்த்தெழுந்துதான் வர வேண்டும். அதிமுக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் ஜெயலலிதா இருக்கும்வரை அவர் முன்பாக எப்படி கூனிக்குறுகி நின்றார்களோ அதே அடிமை மனோபாவத்தை சசிகலாவிடமும் காட்டி வந்தார்கள். ஆனால், பாஜக என்ற புதிய கூட்டாளி கிடைத்த பின்னர் அவர்களின் போக்கு அடியோடு மாறி
வடிவேலு அவதாரம் எடுக்கும் தமிழக அமைச்சர்கள்; ”பாவம் அவங்களே  கன்ஃபியூஸ் ஆயிட்டாங்க!”

வடிவேலு அவதாரம் எடுக்கும் தமிழக அமைச்சர்கள்; ”பாவம் அவங்களே கன்ஃபியூஸ் ஆயிட்டாங்க!”

அரசியல், சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சினிமாவில் வரும் காமெடி காட்சிகளை விட நம்ம ஊர் அமைச்சர்கள், அரசியல்வாதிகளின் மேடைப்பேச்சும், அசட்டுத்தனமான நடவடிக்கைகளும் நம்மை நகைச்சுவையால் திணறடிக்கின்றன என்றால் மிகையாகாது. நடிகர் விஜய் நடித்த 'காவலன்' படத்தில் 'வைகைப்புயல்' வடிவேலு, ஏதாவது குண்டக்க மண்டக்க சொல்லிவிட்டு 'பாவம் அவரே கன்ஃபியூஸ் ஆயிட்டாரு' என அப்பாவியாகக் கூறுவார். அதேபோல்தான் அமைந்திருக்கிறது அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேச்சும். ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், ''தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் கட்டுக்கடங்காமல் உள்ளது. துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லிக்குச் சென்று பிரதமர் மன்மோகன் சிங்கை நேரில் சந்தித்து கொசுக்கள் கட்டுக்கடங்காமல் உள்ளது. அதை கட்டுப்படுத்த எய்ம்ஸ் போன்ற சிறப்பு மருத்துவர்களை அனுப்பி வையுங்கள்'' என்று சொன்னதாகக் கூறினார். https://twitter.com/twi
ஜெயலலிதா மரணத்தில் சந்தேகமா?; விசாரணை ஆணையத்திடம் சொல்லலாம்

ஜெயலலிதா மரணத்தில் சந்தேகமா?; விசாரணை ஆணையத்திடம் சொல்லலாம்

அரசியல், சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
ஜெயலலிதா மரணம் தொடர்பாக தங்களிடம் உள்ள தகவல்களை எழுத்து மூலமாக வரும் 30ம் தேதி முதல் நவம்பர் 22ம் தேதிக்குள் தெரிவிக்கலாம் என விசாரணை ஆணையத் தலைவர் நீதிபதி ஆறுமுகசாமி தெரிவித்துள்ளார். தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, கடந்த ஆண்டு செப். 22ம் தேதி, உடல்நலக்குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 75 நாள்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சையில் இருந்த அவர், டிசம்பர் 5ம் தேதி மரணம் அடைந்ததாக அறிவிக்கப்பட்டது. அவருடைய மரணத்தில் சந்தேகம் இருப்பதாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் மற்றும் வேறு சிலரும் சந்தேகம் எழுப்பினர். இதையடுத்து ஜெயலலிதா மரணம் பற்றி விசாரிக்க, உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். கடந்த செப்டம்பர் 25ம் தேதி இந்த ஆணையம் அமைக்கப்பட்டது. மூன்று மாத காலத்திற்குள் விசாரணை அ
தமிழக ஆளுநர் பொறுப்பில் இருந்து வித்யாசாகர் ராவ் விடுவிக்கப்பட்டது ஏன்?; பரபரப்பு தகவல்கள்

தமிழக ஆளுநர் பொறுப்பில் இருந்து வித்யாசாகர் ராவ் விடுவிக்கப்பட்டது ஏன்?; பரபரப்பு தகவல்கள்

அரசியல், சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தமிழகத்தில் கிட்டத்தட்ட ஓராண்டாக பொறுப்பு ஆளுநராக இருந்த வித்யாசாகர் ராவ் விடுவிக்கப்பட்டதன் பின்னணி குறித்து பரபரப்பு தகவல்கள் உலா வருகின்றன. தமிழக ஆளுநராக இருந்த ரோசய்யா கடந்த 2016ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஓய்வு பெற்றார். அதையடுத்து, புதிய ஆளுநர் நியமிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மஹாராஷ்டிரா மாநில ஆளுநரான வித்யாசாகர் ராவ், தமி-ழக பொறுப்பு ஆளுநராக நியமிக்கப்பட்டார். ஜெயலலிதா உடல்நலக்குறைவு, அவருடைய மரணம், ஆளுங்கட்சியில் பிளவு போன்ற அரசியல் பரபரப்பு நிலவிய காலங்களில் நேரடி ஆளுநர் இருந்திருக்க வேண்டும். ஆனால், தமிழகத்தைப் பொறுத்தவரை முன்னெப்போதும் இல்லாத நடைமுறையை நடுவண் பாஜக அரசு மேற்கொண்டது. ஒருகட்டத்தில், முதல்வர் பொறுப்பில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் விலக்கப்பட்டு, வி.கே.சசிகலா பொறுப்பேற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அப்போது அவரை முதல்வராக பதவியேற்க ஆளுநர் முறைப்படி அழ