Friday, March 29மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: Yashwant Sinha

ஊடகங்களை ஒடுக்க பாஜக திட்டம்!; தொடர் தோல்விகளால் விரக்தி!!

ஊடகங்களை ஒடுக்க பாஜக திட்டம்!; தொடர் தோல்விகளால் விரக்தி!!

அரசியல், இந்தியா, சிறப்பு கட்டுரைகள், முக்கிய செய்திகள்
ஆட்சி நிர்வாகத் தளத்தில் ஏற்பட்டுள்ள தொடர் தோல்விகள் காரணமாக, டிஜிட்டல் ஊடகங்களை ஒடுக்கும் முடிவில் பாஜக தீவிரமாக ஈடுபட்டுள்ளது. மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக இணைய ஊடகங்கள், சமூக ஊடகங்களுக்குக் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் எனத்தெரிகிறது. கடந்த 2014ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட்டாலும்கூட பாஜக, 282 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும்பான்மையோடு ஆட்சியில் அமர்ந்தது. எனினும், கூட்டணி கட்சிகளுக்கும் அமைச்சரவையில் இடம் கொடுத்தது. இந்து தேசியத்தை அமைக்கும் முகமாக ஒரே மொழி, ஒரே தேசம், ஒரே வரி சித்தாந்தங்களை நோக்கி நகர்ந்தது. பாஜக வந்தால் என்னவெல்லாம் நடக்கும் என்று இடதுசாரிகளும், காங்கிரஸூம் எச்சரித்தனவோ அதே வறட்சியான சித்தாந்தங்களை நோக்கி பாஜக நடைபோட்டது. விளைவு, கடந்த நான்கு ஆண்டுகளில் நடந்த 11 இடைத்தேர்களில் பத்து மக்களவை தொகுதிகளை இழந்துள்ளது.
”பணமதிப்பு நீக்கம் முற்றிலும் தோல்வி!”: பாஜக மூத்த தலைவர் பேச்சு

”பணமதிப்பு நீக்கம் முற்றிலும் தோல்வி!”: பாஜக மூத்த தலைவர் பேச்சு

அரசியல், இந்தியா, முக்கிய செய்திகள்
பணமதிப்பு நீக்கத்தின்போது பிரமதர் நரேந்திர மோடி சொன்ன ஊழல், கருப்புப் பணம் ஒழிப்பு, பயங்கரவாதம் தடுப்பு ஆகிய அனைத்து நோக்கங்களும் முற்றிலும் தோல்வி அடைந்திருக்கிறது என்று பாஜக மூத்த தலைவரும் முன்னாள் நடுவண் அமைச்சருமான யஷ்வந்த் சின்ஹா தெரிவித்துள்ளார். பொருளாதார பேராசிரியர் அருண்குமார் எழுதிய 'பணமதிப்பு நீக்கமும் கருப்புப் பொருளாதாரமும்' என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா அண்மையில் டெல்லியில் நடந்தது. பாஜக மூத்தத் தலைவரும், முன்னாள் நடுவண் நிதியமைச்சருமான யஷ்வந்த் சின்ஹா நூலை வெளியிட்டார். நிகழ்ச்சியில் அவர் தன்னை, 'ஆளும் கட்சிக்குள் இருக்கும் எதிர்க்குரல்' என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். அவர் பேசியது: நடுவண் அரசின் அனைத்து முடிவெடுக்கும் அதிகாரங்களும் பிரதமர் அலுவலகத்தில் மட்டுமே குவிந்து கிடக்கின்றன. பிரதமர் நரேந்திர மோடி என்ற ஒரே ஒரு கொள்கை வகுப்பாளரை மட்டுமே இந்த அரசு கொண
பாஜகவின் மிகப்பெரும் பண மோசடி; அருண்ஷோரி தாக்கு!

பாஜகவின் மிகப்பெரும் பண மோசடி; அருண்ஷோரி தாக்கு!

அரசியல், இந்தியா, முக்கிய செய்திகள்
பணமதிப்பிழப்பு என்பது பாஜக அரசு செய்த மிகப்பெரும் பண மோசடி என்று முன்னாள் பாஜக மத்திய அமைச்சர் அருண் ஷோரி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். பொருளாதார வீழ்ச்சி குறித்து பிரதமர் நரேந்திர மோடி, நிதி அமைச்சர் அருண் ஜெட்லி ஆகியோரை முன்னாள் பாஜக அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா கடுமையான விமர்சனம் செய்து வரும் நிலையில், இப்போது அருண்ஷோரியும் அத்தகைய விமர்சனங்களை முன்வைத்துள்ளார். வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது பங்கு விலக்கல் துறை அமைச்சராக இருந்தவர் அருண்ஷோரி. அவர் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியது: கடந்த ஆண்டு பிரதமர் மோடி அதிரடியாக அறிவித்த ரூபாய் நோட்டு வாபசே பொருளாதார சரிவிற்கு காரணம். அது முழுக்க முழுக்க அரசால் நடத்தப்பட்ட மிகப் பெரிய பண மோசடி. இது ஒரு முட்டாள் தனமான யோசனை. இதனால் கருப்பு பணம் வைத்திருந்த ஒவ்வொருவரும் அதை வெள்ளையாக மாற்றி விட்டனர். பழைய ரூபாய் ந
நரேந்திர மோடி சொன்ன ‘அச்சா தின்’ எப்போது வரும்?

நரேந்திர மோடி சொன்ன ‘அச்சா தின்’ எப்போது வரும்?

அரசியல், இந்தியா, சிறப்பு கட்டுரைகள், முக்கிய செய்திகள்
உலகளவில் பொருளாதார மந்த நிலை ஏற்பட்டபோதுகூட இந்தியாவின் பொருளாதாரம் சீர்குலையாமல் கட்டுக்குள் இருந்தது. ஆனால், பிரதமர் நரேந்திர மோடியின் மூன்றாண்டு கால ஆட்சியில் இந்தியா கடுமையான பொருளாதார சரிவை மட்டுமல்ல, உற்பத்தி, வேலைவாய்ப்புகளையும் பறிகொடுத்து, கூட்டத்தில் தொலைந்த குழந்தைபோல தடுமாறிக் கொண்டிருக்கிறது. அச்சா தின்: கடந்த 2014ம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கு முன்பாக ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய மோடி, 'நான் பிரதமரானால் இந்தியாவுக்கு 'அச்சா தின்' (நல்ல நாள்) பிறந்து விடும்' என்றார். ஜன்தன், ஆதார், மேக் இன் இந்தியா, பணமதிப்பிழப்பு, புல்லட் ரயில், சவுபாக்கியா என ஒவ்வொரு திட்டம் அறிவிக்கும்போதும் புதிய இந்தியா பிறந்து விட்டதாக பிரதமர் மோடி அகன்ற மார்பை திறந்து சொல்லிக்கொண்டுதான் இருக்கிறார். அவருக்கும், அவரை இயக்கும் ஆர்எஸ்எஸ் கும்பலுக்கும் வேண்டுமானால் அந்த நாள்கள், நல்ல நாள்களாக இருக்கல