
பாலியல் துன்புறுத்தல் அச்சத்தில் 51% கைம்பெண்கள்; ஆய்வில் தகவல்
கைம்பெண்களில் 51 சதவீதம் பேர், பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக நேரிடும் என்ற அச்சத்துடனேயே வாழ்வதாக ஆய்வில் கருத்து தெரிவித்து உள்ளனர்.
ஆண்டுதோறும் ஜூன் 23ம் தேதி,சர்வதேச கைம்பெண்கள் தினம்கடைப்பிடிக்கப்படுகிறது.2011ஆம் ஆண்டில் இருந்துஇப்படியொரு தினம்பின்பற்றப்பட்டு வருகிறது.கைம்பெண்கள் சந்திக்கும்சவால்கள், பொருளாதார சுதந்திரம்,சமூகம் பாதுகாப்பு குறித்துஇந்த நாளில் பேசப்படுகிறது.
மறைந்த தமிழக முதல்வர்கருணாநிதியிடம் சிலர்,'விதவை' என்ற சொல்லில் கூடபொட்டில்லையே? எனக் கேட்க,அதற்கு அவரோ சட்டென்று,'கைம்பெண் என்றுசொல்லிப் பாருங்கள்.இரண்டு பொட்டு இருக்கும்,'என்றார் சமயோசிதமாக.அப்போது முதல்தான்கைம்பெண் என்ற சொல்லும்பரவலாக பயன்பாட்டுக்கு வந்தது.அதனால் நாமும் இங்கேவிதவை என்ற சொல்லுக்குமாற்றாக கைம்பெண் என்றேபயன்படுத்துகிறோம்.
நாகப்பட்டினத்தில் இயங்கிவரும் 'கலங்கரை' என்றதொண்டு நிறுவனம்,கைம்ப...