கிரிக்கெட்: தவான் அபார சதம்; இந்தியா வெற்றி
தம்புல்லா: இலங்கை தம்புல்லாவில் இன்று பகலிரவு ஆட்டமாக நடந்த முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியை இந்தியா வீழ்த்தியது. ஷிகர் தவான் அபாரமாக ஆடி 132 ரன்களை குவித்தார். கோஹ்லி அரைசதம் அடித்தார்.
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி தம்புல்லாவில் இன்று பகலிரவு ஆட்டமாக நடந்தது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோஹ்லி பீல்டிங் தேர்வு செய்தார்.
இதையடுத்து, இலங்கை அணியின் டிக்வெல்லா, குணதிலகா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர் . இருவரும் நிதானமாகவும், அதேவேளையில் சிறப்பான ஆட்டத்தையும் வெளிப்படுத்தினார்கள். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 14 ஓவரில் 74 ரன்கள் சேர்த்தது. 14-வது ஓவரை சாஹல் வீசினார். இந்த ஓவரின் கடைசி பந்தில் குணதிலகா 44 பந்தில் 35 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார்.
2-வது விக்கெட்டுக்கு டிக்வெல்லா உடன் குசால் மெண்டிஸ்