Saturday, April 27மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: sexual assault

பாலியல் அத்துமீறல்: குழந்தைகள் மீதான தாக்குதலே அதிகம்!

பாலியல் அத்துமீறல்: குழந்தைகள் மீதான தாக்குதலே அதிகம்!

இந்தியா, சிறப்பு கட்டுரைகள், முக்கிய செய்திகள்
பாலியல் துன்புறுத்தல் தொடர்பான புகார்களில் குழந்தைகள் மீதான தாக்குதல் நிகழ்வுகளே அதிகளவில் காவல்துறையில் பதிவாகி இருப்பது அண்மைய ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்தியா மட்டுமின்றி உலகளவில் பிரபலங்கள் பலர், சிறு வயதில் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் துன்புறுத்தல் குறித்த அனுபவங்களை பொதுவெளியில் பகிர்ந்து வருகின்றனர். இதற்காக ட்விட்டர் சமூக வலைத்தளத்தில் #MeToo என்ற ஹேஷ்டேக் உருவாக்கி, பாலியல் அத்துமீறல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அமெரிக்க அதிபராக பில் கிளிண்டன் இருந்தபோது வெள்ளை மாளிகையில் மோனிகா லெவின்ஸ்கி என்பவர் பணிப்பெண்ணாக இருந்தார். அவருடன் கிளிண்டன் பாலியல் ரீதியில் தகாத உறவு வைத்திருந்தார் என்ற புகார் எழுந்தது. அதை ஆரம்பத்தில் மறுத்த கிளிண்டன், பின்னர் மோனிகா ஆதாரமாக ஒரு நீல நிற துணியை காட்டியபோது பகிரங்கமாக ஒப்புக்கொள்ள நேர்ந்தது. இதையடுத்து, மோனிகா லெவின்ஸ்
பெண்ணுக்கு பாதுகாப்பான தேசமா இந்தியா?

பெண்ணுக்கு பாதுகாப்பான தேசமா இந்தியா?

இந்தியா, உலகம், முக்கிய செய்திகள்
இந்திய உயர்நீதிமன்றங்களில் மட்டும் 137458 பாலியல் வல்லுறவு வழக்குகள் இன்னும் விசாரணை நிலையிலேயே இருப்பதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. ஆண்டுக்கணக்கில் நீடிக்கும் விசாரணைகளால், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உரிய நீதி கிடைக்காமல் போகக்கூடும். இதன் தீவிரம் தெரியாமல் இந்திய நீதிமன்றங்களும், அரசும் பரிபாலனம் நடத்துவது, இந்தியாவில் பெண்களுக்கான பாதுகாப்பை கேள்விக்கு உள்ளாக்கி இருக்கிறது. தேரா சச்சா சவுதா ஆசிரம பெண் சீடர்கள் இருவரை, அதன் தலைவர் குர்மீத் ராம் ரஹீம்சிங் பாலியல் வல்லுறவு செய்ததாக 2002ல் புகார் பதிவு செய்யப்பட்டது. கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் கழித்தே தண்டனை கிடைத்திருக்கிறது. தாமதமான நீதி என்றாலும், பசுத்தோல் போர்த்திய சாமியார்களுக்கு சரியான சவுக்கடியாகத்தான் இந்த தண்டனை அமைந்திருக்கிறது. 20 ஆண்டுகள் சிறை, நிச்சயம் கடுமையான தண்டனைதான். ஆனால், தாமத