Tuesday, December 3மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

Tag: Sankarankoil

இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியனை சுட்டது யார்? காவல்துறையில் குழப்பம் நீடிப்பு!

இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியனை சுட்டது யார்? காவல்துறையில் குழப்பம் நீடிப்பு!

சென்னை, தமிழ்நாடு, திருநெல்வேலி, முக்கிய செய்திகள்
ராஜஸ்தான் கொள்ளையர்களைப் பிடிக்கச்சென்ற தனிப்படை காவல் ஆய்வாளர் பெரியபாண்டியனை, உடன் சென்ற மற்றொரு ஆய்வாளர் முனிசேகர்தான் சுட்டுக்கொன்றார் என்று தகவல்கள் பரவிய நிலையில், அதை சென்னை மாகர காவல்துறை அவசர அவசரமாக மறுத்துள்ளது. திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள தேவர்குளத்தைச் சேர்ந்தவர் பெரியபாண்டியன் (48). சென்னை மதுரவாயல் காவல்நிலைய ஆய்வாளராக பணியாற்றி வந்தார். கொளத்தூர் பகுதியில் ஒரு நகைக்கடையில் நடந்த கொள்ளையில் ராஜஸ்தானைச் சேர்ந்த பிரபல கொள்ளையன் நாதுராம் மற்றும் அவருடைய கூட்டாளிகளுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து நாதுராம் மற்றும் கூட்டாளிகளைத் தேடி ஆய்வாளர் பெரியபாண்டியன், கொளத்தூர் காவல் ஆய்வாளர் முனிசேகர் மற்றும் 5 தலைமைக் காவலர்கள் கொண்ட தனிப்படையினர் ராஜஸ்தான் மாநிலம் சென்றனர். கடந்த 13ம் தேதி, நாதுராம் கும்பலை தமிழக தனிப்படை காவல்துறையினர் சுற்...
பள்ளிக்கூடம் கட்ட சொந்த நிலத்தை தானமாக வழங்கிய பெரியபாண்டியன்!

பள்ளிக்கூடம் கட்ட சொந்த நிலத்தை தானமாக வழங்கிய பெரியபாண்டியன்!

இந்தியா, சென்னை, தமிழ்நாடு, திருநெல்வேலி, முக்கிய செய்திகள்
ராஜஸ்தான் மாநிலத்தில் கொள்ளையர்களின் துப்பாக்கிச்சூட்டில் வீரமரணம் அடைந்த தமிழக காவல்துறை ஆய்வாளர் பெரியபாண்டியன், சொந்த ஊரில் பள்ளிக்கூடம் கட்டுவதற்காக தனக்குச் சொந்தமான 10 சென்ட் நிலத்தை தானமாக வழங்கியவர் என்ற நெகிழ்ச்சியான தகவல்கள் வெளியாகியுள்ளன. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகே பாலி மாவட்டத்தில் கொள்ளையர்களை சுற்றி வளைத்த தமிழக காவல்துறை தனிப்படையினர் மீது கொள்ளை கும்பல் இன்று (டிசம்பர் 13, 2017) துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதில், சென்னை மதுரவாயல் காவல்நிலைய சட்டம்-ஒழுங்கு காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன் (48) சம்பவ இடத்திலேயே பலியானார். தமிழக காவல்துறையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது. இதற்கிடையே, வீரமரணம் அடைந்த பெரியபாண்டியன் பற்றி நெகிழ்ச்சியான தகவல்கள் வெளியாகி உள்ளன. பெரியபாண்டியனின் சொந்த ஊர், திருநெல்வேலி மா...