
ரஜினியின் புதிய அரசியல் கட்சி ஜனவரி 14ல் அறிவிப்பு?
''அரசியலுக்கு வருவது உறுதி'' என்றதன் மூலம் இப்போதைக்கு தமிழக அரசியல் களத்தில் பரபர ஆக்ஷன் திரில்லர் நாயகனாக உருவெடுத்துள்ளார் ரஜினிகாந்த்.
''ஆன்மிகம் தெரியும்; அரசியலும் தெரியும்; அதென்ன ஆன்மிக அரசியல்?. இரண்டும் எதிரெதிர் திசையில் பயணிக்கக் கூடியதாச்சே!" என்று பலரையும் யோசிக்க வைத்திருக்கிறது ரஜினியின் புதிய சூத்திரம். எம்ஜிஆர் கட்சி தொடங்கியபோது, அவரிடம் கொள்கைகள் என்ன என்று கேட்டதற்கு ஒரே வார்த்தையில் பதில் அளித்தார். அதுதான், அண்ணாயிஸம்.
அதற்கே, கொந்தளிக்காதவர்கள் இப்போது ஆன்மிக அரசியலுக்காக தொண்டை வறல கூச்சல் போடுவானேன்?. பிறப்பால் ரஜினிகாந்த் தமிழர் அல்லர் என்று உரத்துச் சொல்பவர்களில் நாம் தமிழர் சீமானும், பாமகவின் அன்புமணி ராமதாஸூம் முக்கியமானவர்கள்.
இன அரசியலை மையமாக வைத்து களமாடி வரும் இருவருமே, ரஜினி வருகையால் அரசியலில் தங்கள் சுவடுகளே இல்லாமல் போய்விடுமோ என்ற அச்சத்...