கடைசி ஒருநாள்: இந்தியாவுக்கு 205 ரன்கள் இலக்கு; ஷர்துல் தாகூர் 4 விக்கெட்
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஆறாவது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய வீரர்களின் அபார பந்து வீச்சு காரணமாக அந்த அணி 46.5 ஓவர்களில் 204 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய பந்து வீச்சாளர் ஷர்துல் தாகூர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்திய அணி, 205 ரன்கள் இலக்குடன் விளையாடி வருகிறது.
தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, அந்த நாட்டுடன் 6 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. இந்திய அணி ஏற்கனவே 4 -1 கணக்கில் தொடரை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்துள்ளது. இந்நிலையில், 6வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி செஞ்சுரியன் மைதானத்தில் இன்று (பிப்ரவரி 16, 2018) மாலை தொடங்கி, நடந்து வருகிறது.
டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி, முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியில் புவனேஷ்வர்குமாருக்கு ஓய்வளிக்க