Saturday, April 27மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: Kalki

மாணவர்களை ஈர்த்த சேலம் புத்தகத்திருவிழா! ”கல்கி, சாண்டில்யன் படைப்புகளுக்கு வரவேற்பு” #SalemBookFestival

மாணவர்களை ஈர்த்த சேலம் புத்தகத்திருவிழா! ”கல்கி, சாண்டில்யன் படைப்புகளுக்கு வரவேற்பு” #SalemBookFestival

சேலம், தகவல், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  சேலத்தில் நடந்து வரும் புத்தக திருவிழாவுக்கு பெரியவர்களைக் காட்டிலும் பள்ளி மாணவர்கள் அதிகளவில் ஆர்வத்துடன் கலந்து கொண்டு, புத்தகங்களை வாங்கிச்செல்வது பதிப்பாளர், புத்தக விற்பனையாளர்களிடையே புதிய நம்பிக்கையை ஏற்டுத்தி உள்ளது.   முதன்முதலாக சேலத்தில் ஆண்டுதோறும் நியூ செஞ்சுரி புத்தக நிலையம் சார்பில் பழைய பேருந்து நிலையம் அருகே, புத்தகக் கண்காட்சி நடத்தி வருகிறது. இந்த ஆண்டு முதன்முதலாக சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணியின் முயற்சியால், பபாசி எனப்படும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்துடன் இணைந்து பிரம்மாண்ட புத்தகத் திருவிழாவுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.   21ம் தேதி வரை திருவிழா   சேலம் போஸ் மைதானத்தில் கடந்த 9.11.2018ம் தேதி 1வது சேலம் புத்தகத்திருவிழா தொடங்கியது. வரும் 21ம் தேதி வரை இத்திருவிழா நடக்கிறது. காலை 11 மணி முதல் இரவு
‘ஓ! பக்கங்களால்’ வாசகர்களை கவர்ந்த ஞாநி!

‘ஓ! பக்கங்களால்’ வாசகர்களை கவர்ந்த ஞாநி!

காஞ்சிபுரம், சிறப்பு கட்டுரைகள், சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
மூத்த எழுத்தாளரும், அரசியல் விமர்சகருமான ஞாநி சங்கரன், இன்று (ஜனவரி 15, 2018) அதிகாலை திடீர் மூச்சுத்திணறலால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 64. எழுத்துலகில் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருந்த அவருடைய எழுதுகோல் நிரந்தரமாக ஓய்வெடுக்கச் சென்றுவிட்டது. ஞாநி சங்கரன், செங்கல்பட்டில் பிறந்தவர். பெற்றோர் வைத்த பெயர், சங்கரன். அவருடைய அப்பா, வேம்புசாமி. அவரும் பத்திரிகையாளர்தான். சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு வந்த ஞாநி, டயாலிசிஸ் சிகிச்சை எடுத்து வந்தார். இந்த நிலையில்தான் இன்று அதிகாலை 12.30 மணியளவில் அவருக்கு திடீரென்று மூச்சுத்திணறல் ஏற்பட்டு இருக்கிறது. மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் இறந்துள்ளார். ஞாநி என்றாலே பலருக்கு சட்டென நினைவுக்கு வருவது அவருடைய ஓ! பக்கங்கள்தான். விகடன் இதழில் அவர் எழுதி வந்த ஓ!பக்கங்கள் கட்டுரைக்கென தனி வாசகர் வட்டமே உண்டு. அதன்மூலமாக அவர் அரசியல் தளத்த