Sunday, October 6மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: commentator

சாரணர் தேர்தல்: ஹெச்.ராஜாவை வறுத்தெடுக்கும் நெட்டிஸன்கள்!

சாரணர் தேர்தல்: ஹெச்.ராஜாவை வறுத்தெடுக்கும் நெட்டிஸன்கள்!

அரசியல், கல்வி, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சாரணர் இயக்கத் தலைவர் தேர்தலில் படுதோல்வி அடைந்த பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவை, நெட்டிஸன்கள் டுவிட்டர் பக்கத்தில் கழுவி கழுவி ஊற்றி வருகின்றனர். தமிழக சாரண, சாரணியர் இயக்கத்திற்கு கடந்த 12 ஆண்டுக்கும் மேலாக தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது. இந்நிலையில், சாரணர் அமைப்பை முழு வீச்சில் கட்டமைக்கும் நோக்குடன், இந்தாண்டு புதிதாக தேர்தல் நடத்த வேண்டும் என்று தேசிய தலைமையகம் உத்தரவிட்டு இருந்தது. அதன்படி, தேர்தல் நடத்துவதற்கான பணிகள் சமீப காலமாக நடந்து வந்தது. வழக்கமாக சாரண, சாரணியர் இயக்கத்தின் தலைவர் பதவிக்கு பள்ளிக்கல்வித்துறையைச் சேர்ந்தவர்களே போட்டியிடுவர். இந்தமுறை பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, அப்பதவிக்கு போட்டியிட்டார். அவரை எதிர்த்து தமிழக பள்ளிக்கல்வித்துறையின் முன்னாள் இயக்குநர் மணி, போட்டியிட்டார். ஹெச்.ராஜா, போட்டியிடுகிறார் என்றதுமே, இந்த தேர்தல் மிகுந்த பரபரப்புக்கு உ