Friday, April 26மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: ADMK

சேலம் சிஇஓ மாற்றப்பட்டது ஏன்? பரபரப்பு பின்னணி தகவல்கள்!!

சேலம் சிஇஓ மாற்றப்பட்டது ஏன்? பரபரப்பு பின்னணி தகவல்கள்!!

கல்வி, சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
அதிமுக ஆட்சியில் நேர்மையான அரசு ஊழியர்கள் தொடர்ந்து பந்தாடப்பட்டு வருவது, உயர் அதிகாரிகள் மத்தியில் கடும் அதிருப்தியையும், மனச்சோர்வையும் ஏற்படுத்தி உள்ளது.   தமிழகத்தைப் பொருத்தவரை அதிமுக ஆட்சியின்போது அடிக்கடி அமைச்சரவை மாற்றம் செய்யப்படுவதும், ஐஏஎஸ், ஐபிஎஸ், மாவட்ட அளவிலான அதிகாரிகள் இடமாறுதல் செய்யப்படுவதும் மிகச்சாதாரணமான ஒன்றுதான். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அமைச்சரவையில் பெரிதாக மாற்றங்கள் நிகழாவிட்டாலும், நேர்மையான அதிகாரிகளை இடமாறுதல் செய்வது, காத்திருப்போர் பட்டியலில் வைப்பது, தகுதிக்குறைப்பு செய்வது போன்ற துக்ளக் தர்பார் காட்சிகள் இப்போதும் தொடர்கிறது. ஊழல் கறை படியாதவர்கள் மற்றும் திறமையானவர்கள் என்று பெயரெடுத்த ஐஏஎஸ் அதிகாரிகள் சகாயம், உதயச்சந்திரன், ஐபிஎஸ் அதிகாரி பொன்.மாணிக்கவேல் முதல் சில நாள்களுக்கு முன் இடமாறுதல் செய்யப்பட்ட மதுரை மாவட்ட ஆட்சி
சேலம் தொகுதியில் ஹாட்ரிக் அடிப்பாரா எடப்பாடி?; குஸ்தி போடும் திமுக – அமமுக!

சேலம் தொகுதியில் ஹாட்ரிக் அடிப்பாரா எடப்பாடி?; குஸ்தி போடும் திமுக – அமமுக!

அரசியல், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சேலம் மக்களவை தொகுதியில் திமுக, அதிமுக, அமமுக என மும்முனை போட்டி ஏற்பட்டுள்ள நிலையில், இந்த தொகுதியை தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக தக்க வைத்துக்கொள்வதில் எடப்பாடியின் அதிமுகவுக்கு கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.   மக்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை திமுகவும், அதிமுகவும் அடுத்தடுத்து வெளியிட்டு, அரசியல் களத்தை சூடேற்றி இருக்கின்றன. முதல்வர் மாவட்டம் என்பதால், மற்ற தொகுதிகளைக் காட்டிலும் சேலம் மக்களவை தொகுதி அனைத்து தரப்பினராலும் கூர்ந்து கவனிக்கப்பட்டு வருகிறது.   மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில், 39 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக நேரடியாக சேலம் மக்களவை தொகுதியில் போட்டியிடுகிறது என்பதாலும் இந்த தொகுதி நட்சத்திர அந்தஸ்தைப் பெற்றுள்ளது. திமுக சார்பில், முன்னாள் எம்எல்ஏ எஸ்.ஆர்.பார்த்திபன் களம் இறங்குகிறார். அதிமுக சார்பில், கே.ஆர்.எஸ்.
தலித் வாக்காளர்கள்தான் டார்கெட்! நாமக்கல்லில் திமுக பரபர… அதிமுக கொர்ர்…#ParliamentElection

தலித் வாக்காளர்கள்தான் டார்கெட்! நாமக்கல்லில் திமுக பரபர… அதிமுக கொர்ர்…#ParliamentElection

அரசியல், சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, நாமக்கல், முக்கிய செய்திகள்
  பதினாறாவது மக்களவையின் ஆயுள் காலம் 2019, மே மாதத்துடன் முடிவு பெறுகிறது. மார்ச் முதல் வாரத்தில், பதினேழாவது மக்களவை தேர்தல் அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜெயலலிதா இல்லாமல் அதிமுகவும், கருணாநிதி இல்லாமல் திமுகவும் சந்திக்கும் முதல் பொதுத்தேர்தல் இது என்பதால், தமிழக தேர்தல் களம் முன்னெப்போதையும் விட சூட்டைக் கிளப்பும்.   திமுக வேகம் ஆளும் அதிமுகவைக் காட்டிலும் திமுக தரப்பு, மக்களவை தேர்தல் பணிகளில் முன்னெப்போதும் இல்லாத வகையில் ரொம்பவே வேகம் காட்டி வருகிறது. கடந்த இரண்டு மாதங்களில் தொகுதி பொறுப்பாளர்கள் நியமனம், மாவட்டந்தோறும் நிர்வாகிகள் கருத்துக்கேட்பு கூட்டம், வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் வரை நடத்தி முடித்துவிட்டது.   தேர்தல் நெருக்கத்தில் மக்களைச் சந்திப்பது, பொதுக்கூட்டங்கள் நடத்துவது எல்லாம் காலங்காலமாக இருந்து வரும் நடைமுறைதான் என
கொல்லைப்புறமாக வந்தவர் யார்?: எடப்பாடி பழனிசாமி விளக்கம்!

கொல்லைப்புறமாக வந்தவர் யார்?: எடப்பாடி பழனிசாமி விளக்கம்!

அரசியல், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
கட்சியின் தலைமைப் பதவிக்கு கொல்லைப்புறமாக வந்தவர் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறிவரும் குற்றச்சாட்டுக்கு சேலத்தில் இன்று (செப். 25, 2018) நடந்த கண்டன பொதுக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்தார்.   கண்டன பொதுக்கூட்டம்   திமுக, காங்கிரஸ் கட்சிகளைக் கண்டித்து சேலம் கோட்டை மைதானத்தில் இன்று மாலை அதிமுக சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடந்தது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியது:   ஈழத்தமிழர்களுக்கு எதிராக இலங்கையில் போர் நடந்தது. அப்போது தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி, மூன்றரை மணி நேர உண்ணாவிரத நாடகத்தை நடத்தி, இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட்டுவிட்டதாக கூறினார். அதை நம்பி ஈழத்தில் பதுங்கு குழிகளில் இருந்த பெண்கள், குழந்தைகள், முதியோர்கள் என அனைவரும் வெளியே வந்தனர். அவர்கள் மீது ராஜபக்சே குண்டுமழை பொழிந்து லட்சக்கணக
நியாயமாரே…!; இதற்குத்தானா எட்டு வழிச்சாலை?

நியாயமாரே…!; இதற்குத்தானா எட்டு வழிச்சாலை?

அரசியல், கிருஷ்ணகிரி, சென்னை, சேலம், தமிழ்நாடு, தர்மபுரி, திருவண்ணாமலை, முக்கிய செய்திகள்
  எட்டு வழிச்சாலைக்கு நிலம் கொடுக்கும் விவசாயிகளின் குழந்தைகளுக்கு ஜவுளிக்கடை, பால் நிறுவனத்தில் சொற்ப ஊதியத்தில் வேலை வாங்கித் தருவதாக அதிகாரிகள் மூலம் ஆசை வார்த்தை கூறி வருகிறது சேலம் மாவட்ட நிர்வாகம். கொத்தடிமை வேலையில் சேர்வதற்காகவா எங்கள் பிள்ளைகளை பட்டப்படிப்பு படிக்க வைத்தோம்? என்று விவசாயிகள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். சென்னை - சேலம் இடையிலான பசுமைவழி விரைவுச்சாலை திட்டம் குறித்த அறிவிப்பு வந்த நாள் முதலே முதல்வரின் சொந்த மாவட்டமான சேலம் மாவட்ட விவசாயிகளிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.   பாரத்மாலா பரியோஜனா என்ற பெயரில் அமைக்கப்பட உள்ள பசுமைவழி விரைவுச்சாலைக்காக, சேலம் மாவட்டத்தில் 248 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்படுகிறது. இந்த மாவட்டத்தில் மட்டும் மொத்தம் 36.3 கி.மீ. தூரத்திற்கு சாலை அமைகிறது. இந்த சாலை 70 மீட்டர் அகலத்தில் 8 வழிச்சாலையாக விர
செரீனா வழக்கு, கங்கை அமரனின் பங்களா பறிப்பு; சசிகலா மட்டும்தான் காரணமா?

செரீனா வழக்கு, கங்கை அமரனின் பங்களா பறிப்பு; சசிகலா மட்டும்தான் காரணமா?

அரசியல், சிறப்பு கட்டுரைகள், சென்னை, தமிழ்நாடு, மதுரை, முக்கிய செய்திகள்
மதுரை செரீனா மீது கஞ்சா வழக்கு, ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் மீது போதைப்பொருள் வழக்கு, கங்கை அமரனின் பங்களா பறிப்பு நிகழ்வுகளின் பின்னணியில் சசிகலா மட்டுமே இருப்பது போலவும், ஜெயலலிதாவுக்கு அதில் எந்தத் தொடர்பும் இல்லை என்பது போலவும் அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான 'நமது புரட்சித்தலைவி அம்மா' செய்தி வெளியிட்டுள்ளது, மன்னார்குடி கும்பல் வட்டாரத்தை கொதிப்படையச் செய்துள்ளது. கடந்த மாதம் (பிப்ரவரி) 24ம் தேதி ஜெயலலிதாவின் பிறந்த நாளன்று, ஆளும் அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடாக 'நமது புரட்சித்தலைவி அம்மா' தொடங்கப்பட்டது. நேற்று வெளியான (மார்ச் 2, 2018) இந்த நாளிதழில், ''இதுவே என் கட்டளை.... கட்டளையே என் சாசனம்'' என்ற தலைப்பில் மிக நீளமான கவிதை ஒன்று பிரசுரிக்கப்பட்டு இருந்தது. சித்ரகுப்தன் என்ற புனைப்பெயரில் அந்தக் கவிதை எழுத்தப்பட்டு இருந்தது. அந்த கவிதை இடம்பெற்ற பக்கத்தின் மேல் பகுத