
திண்ணை: பகுத்தறிவு பல்கலை பதிவாளர் பதவிக்கு ஏலம்; அமைச்சர் கறார்!
''முன்னாடிலாம் வீட்டு வீட்டுக்கு
திண்ணைய கட்டி வெச்சிருப்பாங்க.
பாதசாரிங்க யாராவது உட்கார்ந்து
இளைப்பாறிட்டு போறதுக்கு வசதியா
இருக்கும். இப்போலாம் வீடுங்கதான்
பெருசு பெருசா இருக்கே தவிர
திண்ணையதான் காணோம். தமிழனுங்க
மனசும் சின்னதாப் போச்சுது'' என்றபடியே,
சலிப்புடன் நக்கல் நல்லசாமியின்
வீட்டு திண்ணையில் வந்தமர்ந்தார்
நம்ம பேனாக்காரர்.
''எங்கே நம்ம ஞானவெட்டியாரையும்,
பொய்யாமொழியாரையும் நாலஞ்சு
நாளா ஆளையே காணோமே?'' என்றார்
நக்கல் நல்லசாமி.
''ஓ...அவங்களா... ஏதோ வேலையா
பண்ருட்டி பக்கம் போயிருக்கறதா சொன்னாங்க''
''இப்போது ஏதும் பலாப்பழம் சீசன் இல்லையே?''
''யோவ்... இந்த நக்கலுக்கு ஒண்ணும்
குறைச்சல் இல்ல... என்ற பேனாக்காரர்,
அவங்க எதுக்கு பண்ருட்டிக்கு போனாங்கனு
நமக்கு தெரியலப்பா. ஆனா,
அங்க இருந்தபடியே நமக்கு செல்போன்ல
ஒரு சேதி சொல்லியிருக்காங்க'...