நீங்கள் யாரையாவது பழிவாங்கணுமா? சாஹோ படத்திற்கு டிக்கெட் வாங்கி கொடுங்க!
சர்வதேச நிழல் உலக தாதா
ஒருவர் திடீரென்று எதிரிகளால்
கொல்லப்படுகிறார். அவருக்குப்
பிறகு நிழல் உலகை
ஆளப்போவது யார்? என்பதுதான்
சாஹோ படத்தின்
ஒரு வரி கதை.
ஒரு கமர்ஷியல்
படத்திற்கு இந்தக்
கதையே போதுமானதுதான்.
பாகுபலி, பாகுபலி-2 படங்கள்
பெற்ற பெரு வெற்றி காரணமாக
பிரபாஸ் மீது ரொம்பவே
எதிர்பார்ப்பு ஏற்பட்டிருப்பது
என்னவோ உண்மைதான்.
ஆனால், அதற்காக வலுவான
கதையோ, திரைக்கதையோ
இல்லாமல் வெறும்
பிரம்மாண்டத்தை மட்டுமே
கட்டி எழுப்பி படத்தைக்
கட்டமைக்க முடியுமா?
பிரபாஸ் இருந்தாலே போதும்,
போட்ட பணத்தை கல்லா
கட்டிவிட முடியும் என நம்பி
படத்தை எடுத்திருக்கிறார்
இயக்குநர் சுஜீத்.
கதைப்படி (கதை என்று ஒன்று இல்லை. ஆனாலும் 'ஒரு ஊர்ல...' என்று சொன்னால்தானே கதை வரும்? அதுபோலதான் 'கதைப்படி' என்பதும்), பிரபாஸ் அண்டர் கவர் ஆபரேஷனில் இருக்கும் போலீஸ் அதிகாரி. நமக்கு தெர...