எட்டுவழிச்சாலையும் எடப்பாடி பழனிசாமியும்… மீம்ஸ்களால் தோரணம் கட்டும் இணையவாசிகள்!
சென்னை - சேலம் இடையிலான எட்டுவழி பசுமைச்சாலைத் திட்டத்தை செயல்படுத்துவதில் முனைப்பு காட்டும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி ஆகியோரை கேலி, கிண்டல் செய்து சமூகவலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ள மீம்ஸ்கள் ரொம்பவே வைரல் ஆகி வருகின்றனர்.
சென்னை - சேலம் இடையே எட்டுவழி பசுமைச்சாலைத் திட்டம், 10 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ளது. சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்கள் வழியாக இந்த சாலை அமைகிறது. இதற்காக 2343 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்படுகிறது. இதில், 90 சதவீத நிலம், விளை நிலங்கள் ஆகும்.
இத்திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தும் பணிகள் தொடங்கியதில் இருந்தே விவசாயிகள், பொதுமக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது. ஆனால், முதல்வர் எடப்பாடி பழனிசாமியோ, விவசாயிகள் தானாகவே முன்வ