Friday, April 26மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: அதிமுக

ஓபிஎஸ் – இபிஎஸ் விரிசலை அம்பலமாக்கிய மைத்ரேயன்!

ஓபிஎஸ் – இபிஎஸ் விரிசலை அம்பலமாக்கிய மைத்ரேயன்!

அரசியல், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் ஓரணியாக இணைந்தாலும் அவர்களுக்குள் நீறு பூத்த நெருப்பு போல மன க்கசப்புகள் இருந்து வருவதாக உலா வரும் செய்திகளை, அதிமுக எம்பி மைத்ரேயன் தன்னுடைய ஃபேஸ்புக் பதிவு மூலம் உறுதிப்படுத்தி உள்ளார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஓ.பன்னீர்செல்வம் அணி, சசிகலா அணி என அதிமுக இரண்டாக உடைந்தது. கட்சிக்குள் தங்கள் செல்வாக்கை தக்க வைத்துக்கொள்ள, தன்னுடைய விசுவாசியான ஆதரவாளரான எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் நாற்காலியில் அமர வைத்துவிட்டு, ஊழல் வழக்கில் சிறை சென்றார் சசிகலா. அதிமுகவை பல அணிகளாக உடைத்தது, ஓ.பன்னீர்செல்வத்தை கொம்பு சீவி விட்டது என எல்லாவற்றையும் பாஜக பின்னிருந்து நேர்த்தியது இயக்கியது. இதற்கிடையே, ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோரை ஓரே அணியாக இணைக்கும் வேலைகளிலும் பாஜக முன்னின்று செயல்பட்டது. முன்பு பாஜகவில் இருந்து, இப்போது அதிமுக சார
காமெடி டைம்: பெயர் – ஹெச் ராஜா; உபதொழில் – கலவரமூட்டுவது!

காமெடி டைம்: பெயர் – ஹெச் ராஜா; உபதொழில் – கலவரமூட்டுவது!

அரசியல், சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தமிழகத்தில் பாஜகவை எதிர்த்து திமுகவோ, அதிமுகவோ அல்லது ஏனைய பிற அரசியல் கட்சிகளோ அரசியல் செய்ய இப்போதைக்கு தேவை இல்லை என்றே தோன்றுகிறது. அந்தளவுக்கு இளைஞர்கள் மத்தியில் அக்கட்சி கடும் அதிருப்தியை சம்பாதித்து இருக்கிறது. அதற்கு, அக்கட்சியின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, மாநிலத்தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் போன்றோருக்கு குவியும் எதிர்வினைகளே சான்று. இளைஞர்கள் மொழியில் சொல்வதென்றால், அவர்கள் எதைச்சொன்னாலும் அதை தங்கள் இஷ்டத்துக்கு கிழி கிழினு கிழித்து தொங்கவிடுவது அல்லது மரண கலாய் செய்வது என்ற ரீதியில் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். சட்டப்பேரவையில், உள்ளாட்சி அமைப்புகளில் ஒரு பிரநிதியைக்கூட கொண்டிராத பாஜக, தங்கள்¢ இருப்பை பதிவு செய்ய விஜய், கமல்ஹாசன் போன்றோர் மீதான கணைகளை வீசுகிறது. எதை எதிர்பார்த்து அந்தக் கட்சி இவற்றையெல்லாம் செய்து வருகிறதோ, அதற்கு மேலாகவே அக்கட்சி இப்போது அற
ஜெயலலிதா தொகுதியில் டிசம்பர் 31க்குள் இடைத்தேர்தல்; ஆணையம் அறிவிப்பு

ஜெயலலிதா தொகுதியில் டிசம்பர் 31க்குள் இடைத்தேர்தல்; ஆணையம் அறிவிப்பு

அரசியல், இந்தியா, சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
முதல்வராக இருந்த ஜெயலலிதா உடல்நலக்குறைவால் மரணம் அடைந்ததை அடுத்து அவர் வெற்றி பெற்ற ஆர்.கே.நகர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. அந்த தொகுதிக்கு கடந்த ஏப்ரல் மாதம் 12ம் தேதி இடைத்தேர்தல் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது. ரத்து: அப்போது அதிமுகவில் ஓபிஎஸ், இபிஎஸ் என இரு அணிகள் இருந்தன. இபிஎஸ் அணியின் சார்பில் டிடிவி தினகரன், ஓபிஎஸ் அணி தரப்பில் மதுசூதனன், பிற கட்சி வேட்பாளர்கள் உள்பட 62 பேர் போட்டியிட்டனர். டிடிவி தினகரன் தரப்பில் வாக்காளர்களுக்கு ஓட்டுக்காக ஆயிரக்கணக்கில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாக புகார்கள் கிளம்பின. அந்த புகாரின்பேரில் அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு, அலுவலகங்களில் சோதனை நடந்தது. அந்த சோதனையில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததற்கான சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது. அதையடுத்து ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்தது. உரிய நேரத்தில் தேர்தல் நட
சசிகலாவுக்கு ‘வாய்ப்பூட்டு’; 5 நாள் மட்டும் ‘பரோல்’

சசிகலாவுக்கு ‘வாய்ப்பூட்டு’; 5 நாள் மட்டும் ‘பரோல்’

அரசியல், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சொத்து வழக்கில் நான்கு ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்ட ஜெயலலிதாவின் தோழி சசிகலா, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவருடைய கணவர் நடராஜனுக்கு, சென்னையில் உள்ள குளோபல் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இரு நாள்களுக்கு முன் அவருக்கு கல்லீரல், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது. கணவரை காண்பதற்காக 15 நாள்கள் பரோல் விடுப்பில் செல்ல அனுமதி கேட்டு கர்நாடகா சிறைத்துறைக்கு சசிகலா விண்ணப்பித்து இருந்தார். சில தொழில்நுட்ப காரணங்களால் அப்போது பரோலில் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. சில ஆவணங்களும் போதிய அளவில் இல்லை என்றும் கூறப்பட்டது. இதையடுத்து மீண்டும் நேற்று புதிய பரோல் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதை பரிசீலித்த கர்நாடகா சிறைத்துறை, தமிழக காவல்துறையிடம் சசிகலாவுக்கு பரோல் அளிப்பது குறித்து கருத்து கேட்டது. அத
கமல் – ரஜினி: இருதுருவ அரசியலா? இணைந்த கைகளா?

கமல் – ரஜினி: இருதுருவ அரசியலா? இணைந்த கைகளா?

அரசியல், சினிமா, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
விரைவில் தனிக்கட்சி தொடங்குவதாக அறிவித்திருந்த கமல்ஹாசன், தன்னை மக்களுக்கு பிடிக்கவில்லை எனில், மக்கள் விரும்பும் ஒருவருக்கு இயன்ற உதவிகள் செய்யவும் தயாராக இருக்கிறேன் என்று திடீரென்று பல்டி அடித்துள்ளார். கோடம்பாக்கம் என்பது திரையுலகின் கனவுத்தொழிற்சாலை மட்டுமல்ல. அது, அரை நூற்றாண்டுக்கும் மேலாக அரசியல் தலைவர்களை உருவாக்கும் தொழிற்கூடமாகவும் இருந்து வந்திருக்கிறது. இப்போதும் தமிழர்களில் கணிசமானோர் கோடம்பாக்கத்தின் வாசலில்தான் தலைவர்களை தேடிக்கொண்டிருக்கின்றனர். கமல், ரஜினி ஆகியோருக்குள் எழுந்துள்ள அரசியல் அபிலாஷைகளும் அத்தகையதுதான். அவர்களை மக்கள் ஏற்றுக்கொள்வார்களா இல்லையா என்பது தேர்தலில்தான் தெரியும். இருவருமே தனித்து இயங்குவது குறித்துதான் பேசி வருகின்றனர். ஆனாலும், தமிழருவி மணியன் போன்றவர்கள் ரஜினி, கமல் இருவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்று தங்களின் உள்ளக்கிடக்கையை வெளிப