”ஒண்ணு, முட்டா பீஸூ…
இன்னொன்னு அடிமுட்டா பீஸூ….
ஆனாலும் சில நேரத்துல ரெண்டு
பேருமே கெட்டிக்காரய்ங்கப்பா…” என்று
பேசிக்கொண்டே திண்ணையில்
வந்து அமர்ந்தார் பேனாக்காரர்.
”அட அந்த ரெண்டு பேரும்
யாருனு சொன்னாத்தானே
எங்களுக்கெல்லாம் விளங்கும்”
என்றார் நக்கல் நல்லசாமி.
அதற்குள் தர்பூசணி பழத்துண்டுகளுடன்
வந்து அரட்டையில் ஐக்கியமானார்
நம்ம ஞானவெட்டியார்.
”போன சட்டமன்ற தேர்தலப்பவே
முரசு கட்சிய திமுக கூட்டணிக்குள்ள
கொண்டு வர்றதுல சூரியக்கட்சி
படாதபாடு பட்டுச்சு. அவங்க
கேட்ட தொகுதிகள், தேர்தல் செலவுனு
பேரம் படியாததாலதான் சூரியக்கட்சில
இருந்து வெளியேறி, மநகூவுல
சங்கமிச்சாரு கேப்டன். இந்தமுறையும்
முரசு கட்சிய கூட்டணிக்குள்ள
இழுக்கறதுல வழக்கம்போல தளபதியார்
சொதப்பிட்டாரேனு
சூரியக்கட்சிக்காரய்ங்களே
புலம்புறாங்கப்பா.
மாம்பழம்தான் கனியாம போய்டுச்சு.
சட்டுப்புட்டுனு முரசு கட்சிய இழுத்து,
ஆளும்தரப்புக்கு அதிர்ச்சி வைத்தியம்
கொடுத்திருக்கணும்ல. இப்ப பாருங்க…
தாமரை கட்சி ரஜினி மூலமா தூது
அனுப்பியிருக்கு. இதனால அதிர்ந்துபோன
தளபதி, வேற வழியில்லாமத்தான் முரசு
கட்சித் தலைவர அவசர அவசரமாக
நேர்ல போயி பார்த்துட்டு நலம்
விசாரிச்சுட்டு வந்தாரு.
மாம்பழக் கட்சி வலுவா இருக்கற
சில தொகுதிகள்ல முரசு கட்சியும்
வலுவாத்தான் இருக்கு. அதனால
முரசு கட்சிய எப்பாடு பட்டாவது
கூட்டணிக்குள்ள கொண்டு வந்தாதான்
சூரியக்கட்சியும் ஓரளவு கரையேறும்.
மாம்பழக் கட்சி, இந்நேரம் சூரியக்கட்சிக்குள்ள
வந்திருந்தா சின்ன மாங்காவுக்கு
ராஜ்யசபா சீட் கண்டிப்பாக கொடுத்துருப்பாங்கள்ல.
இப்போ அதே தூண்டிலை முரசு கட்சிக்காரரோட
மைத்துனருக்கு போட்டு, கூட்டணி கதைய
சுபமாக முடிச்சிடலாம்னு ஐடியா
கொடுத்தா யாரு கேட்கப்போறா…,”
புலம்பினார் பேனாக்காரர்.
”இந்த பம்பரக்காரரு என்னடானா
கூட்டணி பேச்சுவார்த்தைனு
அறிவாலயத்தையே சுத்தி சுத்தி வர்றாரு.
போறபோக்க பார்த்தா, பம்பரக்காரருக்கு
தளபதியாரு இதயத்துல மட்டும்தான்
எடம் கிடைக்கும்போல” என்று
நல்லசாமி நக்கலடிக்க,
”விடுப்பா…அப்புறம் பம்பரக்காரு
கோவத்துல டிரம்ப்கூடதான்
கூட்டணினு சொன்னாலும்
சொல்லிடுவாரு,” என்றார்
ஞானவெட்டியார்.
”முரசு கட்சிக்கு அதிகபட்சம்
அஞ்சு சீட்டுக்கு மேல தர முடியாதுங்கறதுல
இபிஎஸ்ஸூம், ஓபிஎஸ்ஸூம் கறாராக
இருக்காங்களாம். பிப்ரவரி 24ம் தேதி வரை
அவருக்கு அவகாசம் கொடுத்திருக்காங்க.
ஒத்துவரலைனா போன தேர்தலப்போ
சூரியக்கட்சி செஞ்ச மாதிரி, இந்த முறை
ஆளும்தரப்பு முரசு கட்சியை
உடைக்கவும் திட்டம் போட்டுருக்குதாம்,”
என்றபடியே திண்ணையில் இருந்து
எழுந்து நடந்தார் பேனாக்காரர்.
– பேனாக்காரன்.