Monday, December 11மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: DMK

”பெண்களின் இடுப்பு ‘பேரல்’ போல் ஆகிவிட்டது!” திமுக பேச்சாளர் திண்டுக்கல் லியோனி சர்ச்சை பேச்சு!

”பெண்களின் இடுப்பு ‘பேரல்’ போல் ஆகிவிட்டது!” திமுக பேச்சாளர் திண்டுக்கல் லியோனி சர்ச்சை பேச்சு!

கோயம்பத்தூர், தேர்தல் 2021, முக்கிய செய்திகள்
திமுக பேச்சாளரும், பட்டிமன்ற நடுவருமான திண்டுக்கல் லியோனி, "ஒரு காலத்தில் பெண்களின் இடுப்பு எட்டு போல் இருந்தது; இப்போது பேரல் போல் ஆகிவிட்டது,'' என்று பேசியது அரசியல் அரங்கில் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.   கோவை தொண்டாமுத்தூர் சட்டப்பேரவை தொகுதியில் திமுக சார்பில் கார்த்திகேய சிவசேனாபதி போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து திமுக பேச்சாளர் திண்டுக்கல் லியோனி, மார்ச் 23ம் தேதி, குனியமுத்தூர் பகுதியில் பரப்புரையில் ஈடுபட்டார்.   பரப்புரையின்போது அவர், ''வெளிநாட்டு மாடுகளின் பாலைக் குடித்து குடித்து நம் ஊர் பெண்களும், குழந்தைகளும் பலூன் போல ஊதிவிட்டனர். ஒரு காலத்தில், பெண்களின் இடுப்பு எட்டு போல் இருந்தது. குழந்தையைத் தூக்கி இடுப்பில் வைத்தால் கச்சிதமாக அமர்ந்து கொள்ளும். ஆனால், இப்போது பெண்களின் இடுப்பு, பேரல் போல ஆகிவிட்டது. குழ
மாங்கனி மாவட்ட திமுகவில் யாருக்கு சீட்? விருப்ப மனுக்கள் பெறுவதில் உடன்பிறப்புகள் ஆர்வம்!

மாங்கனி மாவட்ட திமுகவில் யாருக்கு சீட்? விருப்ப மனுக்கள் பெறுவதில் உடன்பிறப்புகள் ஆர்வம்!

தேர்தல் 2021, முக்கிய செய்திகள்
பத்து ஆண்டுகள் தொடர்ந்து ஒரு கட்சி ஆட்சியில் இருக்கும்போது அதன் மீது இயல்பாகவே எழும் அதிருப்தி, ஜெயலலிதா என்ற மிகப்பெரும் ஆளுமை இல்லாத நிலை ஆகியவற்றால் எப்படியும் வரும் சட்டமன்ற தேர்தலில் ஆட்சி மாற்றம் நடந்தே தீரும் என்ற அதீத எதிர்பார்ப்பு திமுக தரப்பில் நிலவுகிறது. இதனாலேயே வரும் தேர்தலில் வேட்பாளர் சீட் கேட்டு, திமுகவில் 'பசையுள்ள' விஐபிகள் பலரும் விருப்பமனு தாக்கல் செய்ய அறிவாலயத்துக்கு படையெடுத்து வருகின்றனர். முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலத்தில் மொத்தம் 11 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில், சேலம் வடக்கில் மட்டுமே திமுக வெற்றி பெற்றது. 1996, 2006 தேர்தல்களில் அதிமுக மீதான கடும் அதிருப்தி நிலவிய காலக்கட்டத்தில் மட்டுமே சேலம் மாவட்டத்தில் திமுக கணிசமான இடங்களை கைப்பற்றி இருக்கிறது. மற்ற காலங்களில், ம
திமுக கிராம சபை: அழையா விருந்தாளியான வீரபாண்டி ராஜா; கண்டுகொள்ளாத மா.செ.,!

திமுக கிராம சபை: அழையா விருந்தாளியான வீரபாண்டி ராஜா; கண்டுகொள்ளாத மா.செ.,!

அரசியல், முக்கிய செய்திகள்
சேலம் அருகே நடந்த திமுக மக்கள் கிராமசபைக் கூட்டத்தில் அழையா விருந்தாளியாக உள்ளே நுழைந்த வீரபாண்டி ராஜாவால், அவருக்கு எதிர்தரப்பினர் மத்தியில் சிறிது நேரம் சலசலப்பு உருவானது. விரைவில் வர உள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி, திமுக வகுத்துள்ள பரப்புரை வியூகங்கள் மக்களிடம் வெகுவாக கவனம் பெற்றுள்ளன. அந்த வகையில் மக்கள் கிராமசபைக் கூட்டங்கள் வாயிலாக அக்கட்சியினர் நேரடியாக மக்களை சந்தித்து, இப்பொழுதே அந்தந்தப் பகுதிகளில் உள்ள குறைகளையும், ஆளுங்கட்சியின் அவலங்களையும் கேட்டு வருகின்றனர். இதற்கு மக்களிடமும் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.   கட்சி அளவில் மக்கள் கிராமசபைக் கூட்டங்கள் வெற்றி பெற்றிருக்கும் அதேநேரம், கட்சிக்குள் இருக்கும் கோஷ்டி பூசல்களும் வெட்டவெளிச்சமாகத் தவறவில்லை. சேலம் கிழக்கு மாவட்ட திமுகவைப் பொருத்தவரை அயோத்தியாப்பட்டணம் மிக ம
மக்களவை தேர்தல்: சேலத்தில் திமுக வரலாற்று வெற்றி! எஸ்.ஆர். பார்த்திபன் எம்.பி. ஆனார்!!

மக்களவை தேர்தல்: சேலத்தில் திமுக வரலாற்று வெற்றி! எஸ்.ஆர். பார்த்திபன் எம்.பி. ஆனார்!!

அரசியல், சேலம், முக்கிய செய்திகள்
மக்களவை தேர்தலில், 39 ஆண்டுகளுக்குப் பிறகு சேலம் தொகுதியை வசப்படுத்தி, வரலாற்று வெற்றியைப் பதிவு செய்துள்ளது, திமுக. அக்கட்சியின் வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபன் அமோக வெற்றி பெற்று, எம்.பி. ஆகியுள்ளார்.   தமிழகத்தில் மக்களவை தேர்தலில் சேலம் தொகுதியில் திமுக சார்பில் எஸ்.ஆர்.பார்த்திபன், ஆளும் அதிமுக தரப்பில் கே.ஆர்.எஸ். சரவணன் ஆகியோர் போட்டியிட்டனர். இவர்கள் மட்டுமின்றி, டிடிவி தினகரனின் அமமுக தரப்பில் எஸ்.கே.செல்வம், மக்கள் நீதி மய்யம் சார்பில் பிரபு மணிகண்டன், நாம் தமிழர் கட்சி சார்பில் ராசா அம்மையப்பன் உள்ளிட்ட 22 பேர் போட்டியிட்டனர். ஏற்கனவே கடந்த 2009, 2014 ஆகிய இரு மக்களவை தேர்தல்களிலும் சேலம் தொகுதியை அதிமுகவே கைப்பற்றி இருந்தது. அத்துடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டம் என்பதால், எப்படியும் இந்த தேர்தலிலும் தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக வெற
சேலம்: செம்மலையால் தாக்கப்பட்ட அதிமுக நிர்வாகி திமுகவில் இணைந்தார்; தாய் கட்சியில் தொண்டர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று புகார்!!

சேலம்: செம்மலையால் தாக்கப்பட்ட அதிமுக நிர்வாகி திமுகவில் இணைந்தார்; தாய் கட்சியில் தொண்டர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று புகார்!!

அரசியல், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
அதிமுக எம்எல்ஏ செம்மலையால் பலர் முன்னிலையில் அடித்து அவமானப்படுத்தப்பட்ட அக்கட்சித் தொண்டர், தனது ஆதரவாளர்களுடன் இன்று (ஏப்ரல் 4, 2019) திமுகவில் இணைந்தார்.   தர்மபுரி மக்களவை தொகுதியில் அதிமுக கூட்டணியில் பாமக சார்பில் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் போட்டியிடுகிறார். இதையடுத்து கடந்த மார்ச் 31ம் தேதி, சேலம் மாவட்டம் சிந்தாமணியூர் பகுதியில் பரப்புரைக்காக வந்திருந்தார். அப்போது பாமக தலைவர் ஜி.கே.மணி, அதிமுக எம்எல்ஏ செம்மலை மற்றும் இரு கட்சி நிர்வாகிகளும் உடன் இருந்தனர். அன்புமணி ராமதாஸ் பரப்புரையை தொடங்கியபோது, கூட்டத்தில் பிளந்து கொண்டு வந்த ஒருவர், 'நீங்கள்தான் போன முறை எம்.பி.யாக ஜெயிச்சீங்க அய்யா. ஆனால் ஐந்து ஆண்டுகளாக தொகுதி பக்கமே வரவில்லை. எட்டு வழிச்சாலையை எதிர்த்தீங்களே அய்யா.... இப்போது அதிமுக உடன் கூட்டணி வெச்சிருக்கீங்களே அய்யா... அந்த திட்டத்தை இனிமே ஆதரிப்பீங்களா
சேலம் தொகுதியில் ஹாட்ரிக் அடிப்பாரா எடப்பாடி?; குஸ்தி போடும் திமுக – அமமுக!

சேலம் தொகுதியில் ஹாட்ரிக் அடிப்பாரா எடப்பாடி?; குஸ்தி போடும் திமுக – அமமுக!

அரசியல், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சேலம் மக்களவை தொகுதியில் திமுக, அதிமுக, அமமுக என மும்முனை போட்டி ஏற்பட்டுள்ள நிலையில், இந்த தொகுதியை தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக தக்க வைத்துக்கொள்வதில் எடப்பாடியின் அதிமுகவுக்கு கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.   மக்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை திமுகவும், அதிமுகவும் அடுத்தடுத்து வெளியிட்டு, அரசியல் களத்தை சூடேற்றி இருக்கின்றன. முதல்வர் மாவட்டம் என்பதால், மற்ற தொகுதிகளைக் காட்டிலும் சேலம் மக்களவை தொகுதி அனைத்து தரப்பினராலும் கூர்ந்து கவனிக்கப்பட்டு வருகிறது.   மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில், 39 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக நேரடியாக சேலம் மக்களவை தொகுதியில் போட்டியிடுகிறது என்பதாலும் இந்த தொகுதி நட்சத்திர அந்தஸ்தைப் பெற்றுள்ளது. திமுக சார்பில், முன்னாள் எம்எல்ஏ எஸ்.ஆர்.பார்த்திபன் களம் இறங்குகிறார். அதிமுக சார்பில், கே.ஆர்.எஸ்.
திண்ணை: ஆக… இந்த முறையும் தளபதி சொதப்புறார்னு சொல்லுங்க!

திண்ணை: ஆக… இந்த முறையும் தளபதி சொதப்புறார்னு சொல்லுங்க!

அரசியல், தமிழ்நாடு, திண்ணை, முக்கிய செய்திகள்
''ஒண்ணு, முட்டா பீஸூ... இன்னொன்னு அடிமுட்டா பீஸூ.... ஆனாலும் சில நேரத்துல ரெண்டு பேருமே கெட்டிக்காரய்ங்கப்பா...'' என்று பேசிக்கொண்டே திண்ணையில் வந்து அமர்ந்தார் பேனாக்காரர்.   ''அட அந்த ரெண்டு பேரும் யாருனு சொன்னாத்தானே எங்களுக்கெல்லாம் விளங்கும்'' என்றார் நக்கல் நல்லசாமி.   அதற்குள் தர்பூசணி பழத்துண்டுகளுடன் வந்து அரட்டையில் ஐக்கியமானார் நம்ம ஞானவெட்டியார். ''போன சட்டமன்ற தேர்தலப்பவே முரசு கட்சிய திமுக கூட்டணிக்குள்ள கொண்டு வர்றதுல சூரியக்கட்சி படாதபாடு பட்டுச்சு. அவங்க கேட்ட தொகுதிகள், தேர்தல் செலவுனு பேரம் படியாததாலதான் சூரியக்கட்சில இருந்து வெளியேறி, மநகூவுல சங்கமிச்சாரு கேப்டன். இந்தமுறையும் முரசு கட்சிய கூட்டணிக்குள்ள இழுக்கறதுல வழக்கம்போல தளபதியார் சொதப்பிட்டாரேனு சூரியக்கட்சிக்காரய்ங்களே புலம்புறாங்கப்பா.   மாம்பழம்தான் கனியாம
பழங்குடி பெண்களை கவர்ந்த திமுக ஊராட்சி சபை கூட்டம்! மக்களை ஈர்க்கும் மும்மூர்த்திகள்!!

பழங்குடி பெண்களை கவர்ந்த திமுக ஊராட்சி சபை கூட்டம்! மக்களை ஈர்க்கும் மும்மூர்த்திகள்!!

அரசியல், தமிழ்நாடு, நாமக்கல், முக்கிய செய்திகள்
கொல்லிமலை பழங்குடி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது திமுகவின் ஊராட்சி சபைக்கூட்டங்கள். திமுக தேர்தல் பொறுப்பாளர்களின் ஜனரஞ்சகமான பேச்சுகள், பழங்குடி கிராமங்களில் ரொம்பவே எடுபட்டதால் அவர்களை கட்சிக்காரர்களாக மாற்றும் பணிகளிலும் இறங்கி இருக்கிறது, திமுக. மக்களை நோக்கி அரசியல் கட்சிகள் பயணிக்க வேண்டும் என்ற நோக்கில் திமுக முன்னெடுத்துள்ள ஊராட்சி சபைக்கூட்டங்களுக்கு நாளுக்குநாள் வரவேற்பு கூடி வருகிறது. குறிப்பாக, நாமக்கல் மக்களவை தொகுதியில் இதுவரை திமுக தொடங்கப்பட்டதில் இருந்தே செல்லாத இடங்களை எல்லாம் தேடித்தேடிச் செல்கின்றனர், அத்தொகுதி பொறுப்பாளர்கள். இதுவரை வராதவர்கள் தேடி வருகிறார்கள் என்ற பேராவலோ என்னவோ திமுகவினரே எதிர்பார்க்காத ரிசல்ட் மலைக்கிராமங்களில் கிடைத்திருக்கிறது என்கிறார்கள் உடன்பிறப்புகள்.   முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி, முன்னாள்
திமுக: 24 கிடா வெட்டி 3000 பேருக்கு பந்தி வைத்த டிஎம்எஸ்! மெகா விருந்தின் மர்மம் என்ன?

திமுக: 24 கிடா வெட்டி 3000 பேருக்கு பந்தி வைத்த டிஎம்எஸ்! மெகா விருந்தின் மர்மம் என்ன?

அரசியல், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
என்றைக்கும் இல்லாத திருநாளாக டி.எம்.செல்வகணபதி வைத்த 'மெகா' கிடா விருந்துதான், சேலம் மாவட்ட திமுகவில் இப்போதைக்கு காரசார விவாதப்பொருளாகி இருக்கிறது.   கடந்த பிப்ரவரி 3, 2019ம் தேதி, திமுகவினர் அறிஞர் அண்ணாவின் ஐம்பதாவது ஆண்டு நினைவுதின ஊர்வலம், பேச்சரங்கம் என பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்திக்கொண்டிருக்க, அக்கட்சியின் மாநிலத் தேர்தல் பணிக்குழு செயலாளரான டி.எம்.செல்வகணபதியோ, ஏற்காட்டில் ஒரு பெருவிருந்துக்கான ஏற்பாடுகளில் மும்முரமாக ஈடுபட்டிருந்தார். ஏற்காட்டிலிருந்து குப்பனூர் செல்லும் சாலையில் உள்ள சூரக்குடி முனியப்பன் கோயிலில் கிடா வெட்டி வழிபட்டார் டிஎம்எஸ். 'பிப்ரவரி 3ம் தேதியன்று, பெருவிருந்து காத்திருக்கிறது. எல்லோரும் ஏற்காடு ஏரி அருகே உள்ள திலகம் நெஸ்ட் ஹோட்டலுக்கு மதியம் 12 மணிக்கு வந்துவிடுமாறு' ஏற்காடு ஒன்றிய திமுகவினர், கட்சியினருக்கு வாட்ஸ்அப்களில் குறுஞ்செ
திமுகவை திணறடித்த ரூ.1000 டோக்கன்! சொதப்பிய ஊராட்சி சபைக்கூட்டங்கள்!!

திமுகவை திணறடித்த ரூ.1000 டோக்கன்! சொதப்பிய ஊராட்சி சபைக்கூட்டங்கள்!!

அரசியல், சிறப்பு கட்டுரைகள், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  மக்களவை தேர்தலையொட்டி, கடைக்கோடி மக்களையும் சந்திக்கும் வகையில் ஒவ்வொரு கிராமத்திலும் ஊராட்சி சபைக் கூட்டங்களை நடத்த திமுக தலைமை உத்தரவிட்டுள்ளது. 'மக்களிடம் செல்வோம்; மக்களிடம் சொல்வோம்; மக்கள் மனதை வெல்வோம்' என்ற முழக்கத்துடன் தமிழகம் முழுவதும் ஜனவரி 9ம் தேதி, ஊராட்சி சபைக் கூட்டங்களை தொடங்கியது திமுக. ஊராட்சி சபைக் கூட்டங்கள் என்பது கிட்டத்தட்ட, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே நடத்திய 'நமக்கு நாமே' பயணத்தின் இரண்டாம் பாகம்போலதான் இருக்கிறது. இதில், மு.க.ஸ்டாலினுக்கு பதிலாக அந்தந்த தொகுதி தேர்தல் பொறுப்பாளர்கள் மக்களை சந்தித்து குறைகளைக் கேட்கின்றனர்.   சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளர் எம்எல்ஏ ராஜேந்திரன் உடல்நலம் குன்றியதால், மக்களவை தேர்தல் பணிகள் வேகமெடுக்காமல் இருந்தன.   கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட உடன்பிறப்புகளும், தேர்தல் பணிகளை மறந்த நிலைய