Friday, April 26மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

குற்றம்

சேலம் மாநகராட்சியில் குப்பை வண்டிகள் வாங்கியதிலும் கொள்ளை! போலி கம்பெனிக்கு டெண்டர்!

சேலம் மாநகராட்சியில் குப்பை வண்டிகள் வாங்கியதிலும் கொள்ளை! போலி கம்பெனிக்கு டெண்டர்!

குற்றம், சிறப்பு கட்டுரைகள், சேலம், முக்கிய செய்திகள்
குப்பைகளை அள்ளிச் செல்வதற்காக கொள்முதல் செய்யப்பட்ட பேட்டரி வண்டிகளிலும் பல லட்சங்களை ஓசையின்றி வாரிச்சுருட்டி இருக்கிறது சேலம் மாநகராட்சி.  சேலத்தை ஸ்மார்ட் சிட்டியாக தரம் உயர்த்துவதற்காக கடந்த 2016ம் ஆண்டில் மத்திய அரசு முதல்கட்டமாக 111 கோடி ரூபாய் வழங்கியது. ஆனால், இந்த நிதியை செலவிடாமல் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் வரை அடை காத்து வந்தது மாநகராட்சி. மத்திய அரசு ரிவிட் அடித்த பிறகே, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை செயல்படுத்துவதற்கான கன்சல்டன்சியை நியமித்தது.   இத்திட்டத்தின் ஒரு பகுதியாகத்தான், வீடுகளில் சேகரமாகும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து சேகரிப்பதற்காக பேட்டரிகளால் இயங்கும் மூன்று சக்கர வாகனங்களை கொள்முதல் செய்தது சேலம் மாநகராட்சி. பெரிய பெரிய இரும்பு கலன்களில் உள்ள குப்பைகளை தூக்கி லாரிகளில் கொட்ட ரொம்பவே சிரமப்பட்டு வந்த துப்புரவு தொழிலாளர்கள
சேலம் மாநகராட்சி ஊழியர் ரூ.88 லட்சம் சுருட்டல்! பரபரப்பு தகவல்கள் அம்பலம்!!

சேலம் மாநகராட்சி ஊழியர் ரூ.88 லட்சம் சுருட்டல்! பரபரப்பு தகவல்கள் அம்பலம்!!

குற்றம், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சேலம் மாநகராட்சி துப்புரவு ஊழியர் ஒருவர், போலி காசோலைகள் மூலம் 88 லட்சம் ரூபாய் சுருட்டியிருக்கும் பகீர் தகவல்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.   சேலம் கருங்கல்பட்டி கலைஞர் நகர் மூன்றாவது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் குணசேகரன். ஓய்வு பெற்ற சுகாதார ஆய்வாளர். இவருடைய மகன் வெங்கடேஷ் (38). சேலம் மாநகராட்சி கொண்டலாம்பட்டி மண்டலத்தில், கடந்த 2000ம் ஆண்டு முதல் துப்புரவு ஊழியராக பணியாற்றி வருகிறார். கடந்த சில ஆண்டுகளாக கொண்டலாம்பட்டி மண்டல அலுவலகத்தில் சம்பள பட்டியல் தயாரிக்கும் பிரிவில் உதவியாளராக பணியாற்றி வருகிறார். கொண்டலாம்பட்டி மண்டலத்தில் முதல்நிலை அதிகாரிகள், அலுவலக பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள், துப்புரவு ஊழியர்கள், குப்பை வண்டி ஓட்டுநர்கள் என 1500 பேர் பணியாற்றுகின்றனர். இவர்களுக்காக மாதம் 3 கோடி ரூபாய் வரை சம்பள செலவினங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த மண்டல ஊழியர
சேலம் கல்லூரி மாணவர் கொலை! அதிமுக எம்எல்ஏவிடம் தஞ்சம் அடைந்த கூலிப்படை! கூடா நட்பு கேடாய் முடிந்த பின்னணி!!

சேலம் கல்லூரி மாணவர் கொலை! அதிமுக எம்எல்ஏவிடம் தஞ்சம் அடைந்த கூலிப்படை! கூடா நட்பு கேடாய் முடிந்த பின்னணி!!

குற்றம், சேலம், முக்கிய செய்திகள்
சேலம் அருகே, கல்லூரி மாணவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு பழிதீர்க்கும் விதமாக அடுத்தடுத்து மேலும் சில அசம்பாவிதங்கள் நிகழக்கூடும் என்ற தகவலால் ஒரு கிராமமே திகிலடைந்து கிடக்கிறது.   சேலம் சீலநாய்க்கன்பட்டி அருகே உள்ள நாழிக்கல்பட்டியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மனைவி வசந்தி. கூலித்தொழிலாளிகளான இவர்களின் ஒரே மகன் திலீப்குமார் (19). நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் உள்ள திருவள்ளுவர் அரசு கலைக்கல்லூரியில் இளங்கலை பொருளாதாரம் இறுதியாண்டு படித்து வந்தார். செப்., 5ம் தேதியன்று இரவு 7 மணியளவில் தன் நண்பர்களைச் சந்தித்துவிட்டு வருவதாக அம்மாவிடம் சொல்லிவிட்டு வீட்டில் இருந்து 20 அடி தூரம் நடந்து சென்ற அவரை வழிமறித்த ஒரு கும்பல் கொடூரமாக குத்திக் கொன்றிருக்கிறது. மகனை யாரோ சிலர் மிரட்டியபடியே, 'அவன இங்கேயே போட்டுத்தள்ளுங்கடா...' என்றுகூற, வீட்டில் இருந்து
8 லட்சம் கடனுக்கு 6 கோடி ரூபாய் சொத்தை வளைத்துப்போட்ட சங்ககிரி தொழில் அதிபர்கள் கைது! சிபிசிஐடி போலீசார் அதிரடி!!

8 லட்சம் கடனுக்கு 6 கோடி ரூபாய் சொத்தை வளைத்துப்போட்ட சங்ககிரி தொழில் அதிபர்கள் கைது! சிபிசிஐடி போலீசார் அதிரடி!!

குற்றம், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
FOLLOW-UP   சங்ககிரியில், எட்டு லட்சம் ரூபாய் கடனுக்கு 6 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை சட்ட விரோதமாக கிரயம் செய்துகொண்ட பிரபல தொழில் அதிபர்களை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.   சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள காவடிக்காரனூரைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (52). விவசாயி. மனைவி, ஒரு மகள் உள்ளனர். இவர், சங்ககிரியைச் சேர்ந்த பிரபல தொழில் அதிபர்களான சண்முகம், அவருடைய தம்பி மணி ஆகியோரிடம் கடந்த 1998ம் ஆண்டு 8 லட்சம் ரூபாய் கந்துவட்டிக்கு கடன் வாங்கியிருந்தார். புதிதாக டிப்பர் லாரிகள் வாங்குவதற்காக கடன் பெற்றிருந்தார். 3 ரூபாய் வட்டிக்கு கடன் கொடுத்துள்ளனர்.   இதற்காக அவரிடம் இருந்து சண்முகமும், மணியும் 23 ஏக்கர் நிலத்தை 'பவர்' பத்திரம் எழுதி பெற்றுக்கொண்டனர். மேலும், வெங்கடேசன் தனித்தனியாக மூன்று வெற்றுக் காசோலைகளிலும், ஒரு வெற்று பாண்டு பத்திரத்தில
பெரியார் பல்கலையில் 28 கோடி ரூபாய் ஊழல்! தொடரும் தில்லுமுல்லு; தணிக்கையில் அம்பலம்!!

பெரியார் பல்கலையில் 28 கோடி ரூபாய் ஊழல்! தொடரும் தில்லுமுல்லு; தணிக்கையில் அம்பலம்!!

குற்றம், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சேலம் பெரியார் பல்கலையில் போலி ஆசிரியர்கள் நியமனம், தவறான ஊதிய நிர்ணயம் உள்ளிட்ட புகார்கள் மட்டுமின்றி, 28 கோடி ரூபாய் ஊழல் நடந்திருக்கலாம் என்று 2016-2017ம் ஆண்டின் தணிக்கை அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது.   ஒரு பல்கலைக்கழகம் எப்படி எல்லாம் இருக்கக்கூடாதோ அப்படி எல்லாமுமாக இருந்து வருகிறது சேலம் பெரியார் பல்கலைக்கழகம். இன்னும் சில ஆண்டுகளில் வெள்ளிவிழாவை எதிர்நோக்கி இருக்கும் இப்பல்கலை, யுஜிசி, பல்கலை விதிகள், உயர்கல்வித்துறை என எதன் சட்ட வரையறைக்குள்ளும் அகப்படாமல் தான்தோன்றித்தனமான செயல்பாடுகளால், கடும் சீர்கேடுகளை அடைந்திருக்கிறது. சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய நான்கு மாவட்டங்களில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களின் உயர்கல்வி கனவுகளை மெய்ப்பிக்கும் நோக்கில் 1997ல் தொடங்கப்பட்டதுதான் பெரியார் பல்கலை. இந்நான்கு மாவட்டங்களிலும் த
விடைத்தாள் டெண்டரில் ஊழல்! பெரியார் பல்கலை மீது புது புகார்; விஜிலன்ஸ் விசாரணை!!

விடைத்தாள் டெண்டரில் ஊழல்! பெரியார் பல்கலை மீது புது புகார்; விஜிலன்ஸ் விசாரணை!!

குற்றம், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
ஆசிரியர் நியமனத்தில் ஊழல், போலி சான்றிதழ் விவகாரங்களில் சிக்கித் திணறி வரும் பெரியார் பல்கலையில் விடைத்தாள் கொள்முதல் செய்ததிலும் பல லட்ச ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக புதிதாக மேலும் ஒரு புகார் எழுந்துள்ளது.   சேலம் பெரியார் பல்கலையில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் நேரடியாக பட்டமேற்படிப்பு, ஆராய்ச்சிப் படிப்புகளை படித்து வருகின்றனர். தவிர, இப்பல்கலையின் நேரடி நிர்வாகத்தின் கீழ் எடப்பாடி, பென்னாகரம், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய நான்கு இடங்களில் உறுப்புக்கல்லூரிகளும் இயங்கி வருகின்றன. சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய நான்கு மாவட்டங்களில் உள்ள அரசு, நிதியுதவி பெறும் மற்றும் சுயநிதி கலைக்கல்லூரிகள் என 101 கல்லூரிகள் இப்பல்கலையுடன் இணைவு பெற்றுள்ளன. பல்கலை மற்றும் உறுப்புக்கல்லூரிகள், இணைவு கல்லூரிகள் மூலம் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படி
பல நூறு கோடி ரூபாய் சுருட்டிய வின் ஸ்டார் சிவக்குமார் செட்டில்மென்ட் கமிஷனுக்கும் டிமிக்கி! ஜாமினை ரத்து செய்ய பரிந்துரை!!

பல நூறு கோடி ரூபாய் சுருட்டிய வின் ஸ்டார் சிவக்குமார் செட்டில்மென்ட் கமிஷனுக்கும் டிமிக்கி! ஜாமினை ரத்து செய்ய பரிந்துரை!!

குற்றம், சேலம், முக்கிய செய்திகள்
சேலத்தில், ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் பெயரில் பல நூறு கோடி ரூபாய் சுருட்டிய வின்ஸ்டார் சிவக்குமார், செட்டில்மென்ட் கமிஷன் முன்பும் விசாரணைக்கு ஆஜராகாமல் தொடர்ந்து டிமிக்கி கொடுத்து வருகிறார். இதனால் உச்சக்கட்ட அதிருப்தி அடைந்த கமிஷனின் தலைவர், சிவகுமாருக்கு வழங்கப்பட்ட ஜாமினை ரத்து செய்யவும் பரிந்துரை செய்துள்ளார்.   சேலம் அழகாபுரத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார். புதிய பேருந்து நிலையம் அருகே வின்ஸ்டார் இந்தியா சிட்டி டெவலப்பர்ஸ் மற்றும் சவுபாக்கியா சிட்டி டெவலப்பர்ஸ் என்ற பெயர்களில் ரியல் எஸ்டேட் நிறுவனங்களை நடத்தி வந்தார். வீட்டு மனைகளில் முதலீடு செய்யும் நபர்களுக்கு, அத்தொகைக்கு உரிய மதிப்பில் வீட்டு மனை அல்லது ஓராண்டில் முதலீட்டு தொகையை இரட்டிப்பு மடங்காக வழங்கப்படும் என்று செய்தித்தாள்கள், உள்ளூர் சேனல்களில் விளம்பரம் செய்தார். இந்த கவர்ச்சிகரமான அறிவிப்பை ந
சேலம்: சினிமா பாணியில் ஆண்களை மயக்கி பல லட்சம் சுருட்டிய கில்லாடி பெண்!

சேலம்: சினிமா பாணியில் ஆண்களை மயக்கி பல லட்சம் சுருட்டிய கில்லாடி பெண்!

குற்றம், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சில நேரங்களில் சினிமா காட்சிகளை விடவும், நிஜ உலகின் நிகழ்வுகள் கொடூரமானவையாக இருக்கும். கடந்த 2007ல், சரத்குமார், ஜோதிகா நடிப்பில் 'பச்சைக்கிளி முத்துச்சரம்' என்ற படம் வெளியானது. அந்தப்படத்தில், அப்பாவி அல்லது சபலிஸ்ட் ஆண்களை குறிவைத்து, அவர்களிடம் அனுசரணையாக பேசி, ஒருகட்டத்தில் காமத்திற்கு தூண்டில்போட்டு, பணம் பறிக்கும் மோசடி பெண் வேடத்தில் அசத்தியிருப்பார் ஜோதிகா.   கடந்த 2017ல் கலையரசன் நடிப்பில் வெளியான 'அதே கண்கள்' படத்திலும்கூட அதன் நாயகி ஷிவதா, பார்வையற்ற வசதிடான இளைஞர்களை குறிவைத்து பணம் பறிக்கும் பாத்திரத்தில் நடித்திருப்பார். படத்தில் வரும் இதுபோன்ற காட்சிகள் திரில்லர் தன்மையுடன் இருந்தாலும், நிஜத்தில் நடக்கும்போது அதன் இழப்பும், மனவலியும் ஈடு செய்ய இயலாததாகி விடுகிறது. கிட்டத்தட்ட 'பச்சைக்கிளி முத்துச்சரம்', 'அதே கண்கள்' படங்களின் நாயகிகளைப்போ
கிடப்பில் போடப்பட்ட ‘காக்கி கருப்பு ஆடுகள்’ வழக்கு? கள்ள மவுனம் சாதிக்கும் சேலம் காவல்துறை!

கிடப்பில் போடப்பட்ட ‘காக்கி கருப்பு ஆடுகள்’ வழக்கு? கள்ள மவுனம் சாதிக்கும் சேலம் காவல்துறை!

குற்றம், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
ஆத்தூரில், காவல் ஆய்வாளரின் மிரட்டலால் நிதி நிறுவன அதிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒட்டுமொத்த காக்கி துறைக்கும் அவப்பெயரை உண்டாக்கி இருக்கிறது. தேர்தல் வாக்கு எண்ணிக்கை பரபரப்பில் இந்த வழக்கை கிடப்பில் போட்டதால், நிதி நிறுவன அதிபரை பறிகொடுத்த குடும்பம் கடும் அதிருப்தியில் உள்ளது.   சேலம் மாவட்டம் ஆத்தூர் வினாயகபுரம் நேதாஜி நகரைச் சேர்ந்த திமுக பிரமுகர் பிரேம்குமார் (49), தன் தம்பி செந்தில்குமாருடன் சேர்ந்து சொந்த ஊரில் தனலட்சுமி ஃபைனான்ஸ் என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தி வந்தார். மே 14ம் தேதி, திடீரென்று அவர் வீட்டில் வாயில் நுரை தள்ளிய நிலையில் மயங்கி விழுந்து கிடந்தார். என்னமோ ஏதோ என்று பதற்றம் அடைந்த மனைவியும், இரு மகன்களும் பிரேம்குமாரை தூக்கிச்சென்று தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். மறுநாள் காலையில் (மே 15) சிகிச்சை பலனின்றி பிரேம்குமா
தர்மபுரி: காட்டுக்குள் வந்தால் கபளீகரம்! காதலர்களுடன் வரும் இளம்பெண்களுக்கு குறி! துப்பாக்கிக்கு இரையான சம்பவத்தில் திடுக்கிடும் தகவல்கள்

தர்மபுரி: காட்டுக்குள் வந்தால் கபளீகரம்! காதலர்களுடன் வரும் இளம்பெண்களுக்கு குறி! துப்பாக்கிக்கு இரையான சம்பவத்தில் திடுக்கிடும் தகவல்கள்

குற்றம், தமிழ்நாடு, தர்மபுரி, முக்கிய செய்திகள்
  ஒகேனக்கல் அருகே காட்டுப்பகுதிக்குள் காதலனுடன் ஒதுங்கிய இளம்பெண்ணை சீரழிக்க முயன்றபோது ஏற்பட்ட தகராறில் காதலனை கருணையே இல்லாமல் துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.   தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் இருந்து நான்கு கி.மீ. தொலைவில் பண்ணப்பட்டி பிரிவு சாலையில் ஒரு காப்புக்காடு இருக்கிறது. இந்தக் காட்டுப்பகுதிக்குள் அந்நியர்கள் நுழைய தடை விதிக்கப்பட்டு உள்ளது. என்றாலும், ஒகேனக்கல்லுக்கு ஜோடியாக சுற்றுலா வரும் இளசுகள், இந்த காட்டுப்பகுதியில் ஒதுங்குவது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. ஆளரவமற்ற பகுதி என்பதால், எது நடந்தாலும் வெளி உலகுக்குத் தெரியாது. இந்நிலையில், கடந்த மே 1ம் தேதியன்று, தொப்பூர் அருகே உள்ள ஜருகு குரும்பட்டியான் கொட்டாயைச் சேர்ந்த பாலு மகன் முனுசாமி (25), தனது அக்காள் மகள் ரஞ்சனி (வயது 16, பெயர் மாற்றப்பட்டுள்ளது) உடன் ஒ