Saturday, May 18மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

முக்கிய செய்திகள்

ஆளுநர் நாளை தமிழகம் வருகிறார்

ஆளுநர் நாளை தமிழகம் வருகிறார்

சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மாற்றக்கோரி, டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் கடிதம் கொடுத்துள்ள நிலையில் ஆளுநர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ் நாளை (26/8/17) தமிழகம் வருகிறார். இதற்கிடையே, புதுச்சேரியில் ரிசார்ட்டில் தங்கியுள்ள தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேரும் நாளை ஆளுநரை நேரில் சந்திப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கட்சித்தாவல் தடை சட்டத்தின் கீழ் தினகரன் அணியைச் சேர்ந்த 19 எம்எல்ஏக்களையும் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி அணியைச் சேர்ந்த கொறடா ராஜேந்திரன், பேரவைத் தலைவர் தனபாலிடம் கடிதம் கொடுத்துள்ளார். இதுபோன்ற பரபரப்பான சூழ்நிலையில் ஆளுநர் வருவது, தமிழக அரசியல் களத்தில் மீண்டும் பரபரப்பு சம்பவங்கள் நிகழக்கூடும் என்றும் தெரிகிறது.
பள்ளிக்கல்வித்துறை செயலர் உதயசந்திரனுக்கு ‘செக்’?

பள்ளிக்கல்வித்துறை செயலர் உதயசந்திரனுக்கு ‘செக்’?

கல்வி, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
பள்ளிக்கல்வித்துறைக்கு தற்காலிக முதன்மைச் செயலர் அந்தஸ்தில் ஒருவரை தமிழக அரசு நியமித்திருப்பதன் மூலம், பள்ளிக்கல்வித்துறை செயலராக இருந்து வரும் உதயச்சந்திரன் ஐஏஎஸ்-க்கு, தமிழக அரசு மறைமுகமாக கடிவாளம் போட்டுள்ளது. இதன் பின்னணியில் தனியார் பள்ளிகளின் அழுத்தமும், காண்டிராக்டர்களும் இருப்பதாக சொல்லப்படுகிறது. தமிழக பள்ளிக்கல்வித்துறை செயலராக நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த சபீதா ஐஏஎஸ், கடந்த மார்ச் மாதம் அதிரடியாக மாற்றப்பட்டார். உடனடியாக அந்த பதவிக்கு உதயச்சந்திரன் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டார். அவர் ஆட்சியராக இருந்தபோதே மக்களிடம் நற்பெயரை சம்பாதித்து இருந்ததால், அவரால் பள்ளிக்கல்வித்துறையில் ஆக்கப்பூர்வமான பல நன்மைகள் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் - உதயச்சந்திரன் ஆகியோர் கூட்டணியில் பள்ளிக்கல்வித்துறையில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் நட
பேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோல்!

பேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோல்!

இந்தியா, தமிழ்நாடு, முக்கிய செய்திகள், வேலூர்
சென்னை: ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், ஒரு மாத காலம் பரோலில் விடுதலை செய்யப்பட்டார். இன்று மாலை அவர், வேலூர் சிறையில் இருந்து விடுதலை ஆனார். முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி, 1991-ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் உடந்தையாக இருந்ததாக பேரறிவாளன் உள்ளிட்ட சிலருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த 26 ஆண்டுகளாக பேரறிவாளன், வேலூர் மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார். இந்நிலையில் உடல் நல குறைவால் பாதிக்கப்பட்டுள்ள தனது தந்தையை காண்பதற்கு பரோலில் விடுவிக்கும்படி, பேரறிவாளன் கோரிக்கை விடுத்திருந்தார். அவருடைய தாயார் அற்புதம்மாளும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார். அவரது கோரிக்கையை ஏற்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி , பேரறிவாளனை ஒரு மாத காலம் பரோலில் விடுவிக்க உத்தரவு பிறப்பித்துள்ளார். இதையடுத்து, இ
அந்தரங்கத்தை உளவு பார்க்கக் கூடாது : ஆதார் வழக்கில் ‘குட்டு’

அந்தரங்கத்தை உளவு பார்க்கக் கூடாது : ஆதார் வழக்கில் ‘குட்டு’

இந்தியா, முக்கிய செய்திகள்
புது டில்லி: தொழில்நுட்பம் என்ற பெயரில் பிறரின் அந்தரங்கத்தை உளவு பார்ப்பது, மாண்பை குலைக்கும்  செயல் என்று உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு குட்டு வைத்துள்ளது. ஆதார் அடையாள அட்டையை அரசு சேவைகளுக்கு கட்டாயமாக்குவது தனிப்பட்ட உரிமையை மீறும் செயல் என்ற வழக்கை 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்சு விசாரித்தது. அந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கியது. அந்தரங்க உரிமை என்பது அரசியல் சாசனத்தில் கூறியுள்ளபடி அடிப்படை உரிமைதான் என்று இந்த பெஞ்ச் அதிரடி தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பின் முக்கிய அம்சம்: ஒருவர், தனது வீட்டுக்குள் யாரை அனுமதிக்க வேண்டும் என்பது அவரது உரிமை. அவருடைய வீட்டில் ஒருவரை அனுமதித்தால், அனைவரையும் அனுமதிக்க வேண்டும் என்பது கட்டாயம் கிடையாது. வீட்டுக்குள் யார் வரவேண்டும் என்பது அவருடைய தனிப்பட்ட உரிமை. ஒரு வீட்டில் அந்தரங்கம் என்பது பாதுகாக்கப்பட வேண்டிய அம்சம். அதுதா
‘விவேகம்’ விமர்சனம் – ‘மாஸ் லெவல்’!

‘விவேகம்’ விமர்சனம் – ‘மாஸ் லெவல்’!

சினிமா, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
பெரும் எதிர்பார்ப்புகளுடன் இன்று (24/8/17) வெளியாகி இருக்கிறது 'விவேகம்'. நடிப்பு: அஜித்குமார், காஜல் அகர்வால், அக்ஷராஹாஸன், விவேக் ஓபராய், கருணாகரன். இசை: அனிருத். இயக்கம்: 'சிறுத்தை' சிவா. சர்வதேச உளவுப்பிரிவு போலீஸ் அதிகாரியாக வருகிறார் ஏகே என்ற அஜெய்குமார் என்ற அஜித்குமார். வழக்கம்போல் அவருடைய குழுவில் நான்கு போலீஸ் அதிகாரிகள் வருகின்றனர். அவர்களில் ஒருவர் ஆர்யன் என்ற விவேக் ஓபராய். இந்தியாவில் சர்வதேச தீவிரவாதிகள் மூன்று இடங்களில் சக்தி வாய்ந்த அணு குண்டுகளை வைத்து விடுகின்றனர். அவற்றில் ஒரு குண்டு வெடித்து, நூற்றுக்கணக்கானோர் மரணமடைகின்றனர். மீதம் உள்ள இரண்டு குண்டுகளையும் வெற்றிகரமாக அகற்றினாரா? கர்ப்பிணியாக இருக்கும் தன் காதல் மனைவி காஜல் அகர்வாலை வில்லன் கும்பலிடம் இருந்து காப்பாற்றினாரா? என்பதை விவரிக்கிறது, 'விவேகம்'. இதன் பிறகு, இந்தியாவில் இருந்து செர்பியா நாட்டிற்கு
தஞ்சையில் வருகிறது ‘எய்ம்ஸ்’!

தஞ்சையில் வருகிறது ‘எய்ம்ஸ்’!

காஞ்சிபுரம், சிவகங்கை, சென்னை, தஞ்சாவூர், திருச்சி, திருவாரூர், புதுக்கோட்டை, மதுரை, முக்கிய செய்திகள்
தமிழகத்தில், 'எய்ம்ஸ்' எனப்படும் அகில இந்திய மருத்துவக்கல்வி ஆராய்ச்சி நிறுவனம் (All India Institute of Medical Sciences), தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டியில் அமைக்கப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. நேரு பிரதமராக இருந்தபோது, தெற்கு ஆசியா அளவில் மிகச்சிறந்த மருத்துவ ஆராய்ச்சி மையத்தை இந்தியாவில் நிறுவ வேண்டும் என்றும், அதுவே தனது கனவு என்றும் கூறினார். பின்னர், 1956ம் ஆண்டில் புதுடில்லியில் எய்ம்ஸ் மருத்துவ ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட்டது. இது ஒரு தன்னாட்சி அந்தஸ்து பெற்ற நிறுவனம். இளநிலை, முதுநிலை மருத்துவப் படிப்புகள் மட்டுமின்றி பல் மருத்துவம், செவிலியர் பயிற்சி, துணை மருத்துவப் படிப்புகளும் வழங்கப்படுகிறது. மருத்துவத்துறையில் புதிய ஆராய்ச்சிகள் மேற்கொள்வதும் எய்ம்ஸ் நிறுவனத்தின் முக்கிய அம்சங்களுள் ஒன்று. இந்நிலையில், இந்தியாவில் மேலும் ஆறு இடங்களில் எய்ம்ஸ் மருத்துவ ஆராய
ரஜினி, அஜீத்திற்கு சமூக அக்கறை இல்லை – பொன்னுசாமி

ரஜினி, அஜீத்திற்கு சமூக அக்கறை இல்லை – பொன்னுசாமி

சினிமா, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
ரஜினி, அஜித்திற்கு சமூக அக்கறையே இல்லை என்று தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பால் உற்பத்தியில் இந்தியா முன்னணிக்கு வந்துவிட்டாலும், இன்னும் அனைத்து மக்களுக்கும் பால் மற்றும் பால் பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் நிலவுகிறது. 20 விழுக்காடு வளரிளம் பெண் குழந்தைளுக்கு பாலில் உள்ள கால்சியம் போதிய அளவில் கிடைக்கவில்லை என்கிறது ஓர் ஆய்வு.   அதேபோல் வயதான, கர்ப்பிணி பெண்களுக்கும் கால்சியம் பற்றாக்குறை இருப்பது தெரியவந்துள்ளது. பெண் குழந்தைகள் போதிய அளவுக்கு பால் அல்லது பால் பொருட்களை எடுத்துக் கொள்வதில்லை என்கிறார்கள் உணவியல் ஆய்வாளர்கள். இதெல்லாம் ஒருபுறம் இருக்க, தமிழகத்திலோ சினிமா ரசிகர்கள் தங்களின் ஆதர்ஷ நடிகர்களின் கட்-அவுட்டுகளுக்கு பால் அபிஷேகம் செய்யும் மூடத்தனமான போக்கு இன்றும் நிலவுகிறது. இது போன்ற செயல்களுக்கு தமிழ்நாடு பால் முகவர்கள் சங்
சசிகலாவின் சீராய்வு மனு தள்ளுபடி: உச்சநீதிமன்றம் உத்தரவு

சசிகலாவின் சீராய்வு மனு தள்ளுபடி: உச்சநீதிமன்றம் உத்தரவு

அரசியல், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
புதுடில்லி: சொத்துக்குவிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட நான்கு ஆண்டு சிறை தண்டனை தீர்ப்பை எதிர்த்து ஜெயலலிதாவின் தோழி சசிகலா தாக்கல் செய்த சீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் இன்று (23/8/17) தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. ஜெயலலிதா, அவருடைய தோழி சசிகலா, மற்றும் சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் நான்கு ஆண்டு சிறை தண்டனை விதித்தது. ஜெயலலிதா, குற்றவாளிதான் என்றாலும் அவர் மரணம் அடைந்துவிட்டதால் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார். இதையடுத்து சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில், கடந்த பிப்ரவரி 15ம் தேதி அடைக்கப்பட்டனர். இந்த தீர்ப்பை எதிர்த்து சசிகலா உள்ளிட்ட மூன்று பேரும் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்தனர். நீதிபதிகள் அமிதவ ராய், போப்டே ஆகியோர் கொண்ட அமர்வு இந்த மனுவை நேற்
இம்சை அரசன் 24-ம் புலிகேசி பராக் பராக்!

இம்சை அரசன் 24-ம் புலிகேசி பராக் பராக்!

சினிமா, முக்கிய செய்திகள்
தமிழ் திரையுலகில் காமெடி கதாபாத்திரங்களில் முடிசூடா மன்னனாகத் திகழந்த வடிவேலுவுக்கு, கடந்த 2011ம் ஆண்டுக்குப் பிறகு சினிமா மார்க்கெட் இறங்குமுகம்தான். 2011ம் ஆண்டில் திமுக கூட்டணிக்கு ஆதரவாக அவர் தேர்தல் பிரச்சாரம் செய்ததால் இந்த சரிவு ஏற்பட்டது. சந்தானம், சூரி, சதீஸ், ரோபோ சங்கர் போன்றோர்கள் வடிவேலுவின் வெற்றிடத்தை நிரப்ப முயற்சித்தாலும், மக்களிடம் அவர்களின் காமெடி எடுபடவில்லை. கடந்த ஓராண்டாக வடிவேலு மீண்டும் அடுத்த ரவுண்டுக்கு தயாராகி விட்டாலும், கடைசியாக அவர் கதாநாயகனாக நடித்த தெனாலிராமன், எலி படங்கள் சரியாக போகவில்லை. விஷாலுடன் இணைந்து நடித்த காமெடி கதாபாத்திரமும் எடுபடவில்லை. இந்நிலையில் வடிவேலுக்கு சினிமா வாழ்வில் மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்திய இம்சை அரசன் 23-ம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாகத்தின் மூலம், சரிந்த தனது மார்க்கெட்டை தூக்கி நிறுத்தும் வேலைகளில் இறங்கியுள
நீட் தேர்வு: தமிழகம் ஏமாற்றம்!

நீட் தேர்வு: தமிழகம் ஏமாற்றம்!

இந்தியா, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு மட்டும் விலக்கு அளிக்க முடியாது என நடுவண் அரசு கைவிரித்து விட்டது. இதனால், நீட் தேர்வு அடிப்படையில், தமிழகத்தில் மருத்துவ கவுன்சிலிங்கை உடனடியாக துவக்கி செப்டம்பர் 4ம்தேதிக்குள் முடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ‛நீட்' தேர்வு அடிப்படையில் தமிழகத்தில் உடனடியாக மாணவர் சேர்க்கை உத்தரவிட வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று (22/8/17) விசாரணைக்கு வந்த போது, நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் தமிழக அரசின் அவசர சட்டத்திற்கு ஒப்புதல் இல்லை. ஒரு மாநிலத்திற்கு மட்டும் விலக்களிக்க முடியாது. தமிழக அரசின் அவசர சட்டத்தை ஏற்க முடியாது என மத்திய அரசு கூறியது. இதனையடுத்து நீட் தேர்வு அடிப்படையில் இந்த வருடம் மாணவர் சேர்க்கையை உடனடியாக நடத்த வேண்டும் என உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வை செப்டம