Thursday, January 15மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

Tag: Thirumavalavan

விசிகவில் இருந்து நிரந்தரமாக வெளியேறினார் ஆதவ் அர்ஜூனா!

விசிகவில் இருந்து நிரந்தரமாக வெளியேறினார் ஆதவ் அர்ஜூனா!

அரசியல், தமிழ்நாடு
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இருந்து நிரந்தரமான விலகுவதாக அக்கட்சியின் முன்னாள் துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். லாட்டரி சாம்ராஜ்யத்தின்சாம்ராட்டாக விளங்கி வரும்மார்ட்டினின் மருமகன்தான்இந்த ஆதவ் அர்ஜூனா.'வாய்ஸ் ஆப் காமன்ஸ்' என்றநிறுவனத்தைத் தொடங்கி,கட்சி மாநாடுகளை ஒருங்கிணைக்கும்பணிகளையும், தேர்தல் நேரத்தில்அரசியல் கட்சிகளுக்குபிரஷாந்த் கிஷோர் போலவியூக வகுப்பாளராகவும்செயல்பட்டு வந்தார். கடந்த 2021 சட்டப்பேரவைத்தேர்தலின்போது விடுதலைச்சிறுத்தைகள் கட்சிக்கு வியூகவகுப்பாளராக பணியாற்றினார்.இதன்மூலமாக விசிக தலைவர்திருமாவளவனுக்கு நெருக்கமான அவர்,நடப்பு ஆண்டு பிப்ரவரி மாதம்விசிகவில் இணைந்தார். கட்சியில் சேர்ந்த 20 நாளில்,அவரை துணைப் பொதுச்செயலாளராக்கினார்திருமாவளவன். அப்போதே,கட்சியின் மூத்த நிர்வாகிகளிடையேஆதவ் மீது எரிச்சல் ஏற்பட்டது. கட்சியில்...
எதுக்காக சொல்றேன்னா… அதுக்காக சொல்றேன்…! பேனாக்காரன் பதில்கள்!!

எதுக்காக சொல்றேன்னா… அதுக்காக சொல்றேன்…! பேனாக்காரன் பதில்கள்!!

தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
உதயநிதி, இளைஞர் பட்டாளத்தை திரட்டிக் கொண்டிருப்பதாக அமைச்சர் துரைமுருகன் சொல்லி இருக்கிறாரே? பழைய மாணவர்கள் பற்றி ரஜினி பேசிய பேச்சுக்கு துரைமுருகன் எதிர்வினையாற்றியது குறித்து அப்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் அவரை கடுமையாக கடிந்து கொண்டதாகச் சொல்லப்பட்டது. அதனால் அவரை குளிர்விக்கவே இந்தளவுக்கு இறங்கி வந்திருக்கிறார் துரைமுருகன். பெரியார் சிலைக்கு த.வெ.க. தலைவர் விஜய் மரியாதை செலுத்தியது எதைக் காட்டுகிறது?  நடிகர் விஜயை அரசியல் ரீதியாக அவரை வழிநடத்த சரியான ஆள் இல்லை என்ற விமர்சனம் கிளம்பிய நிலையில், பெரியார் பிறந்தநாளில் அவருடைய சிலைக்கு மாலை அணிவித்து அரசியல் களத்திலும் தான் ஒரு கில்லிதான் என்பதை நிரூபித்திருக்கிறார் தளபதி. ஏற்கனவே சமூக ஊடகங்களில் விஜயை, திமுகவின் இணையக்கூலிகள் ஆபாசமாக அடித்து துவைத்து வரும் நிலையில், பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்தியது ஆளும்தரப்...
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டிற்கு உத்தரவிட்டது யார்?; திருமாவளவன் அதிர்ச்சி தகவல்!

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டிற்கு உத்தரவிட்டது யார்?; திருமாவளவன் அதிர்ச்சி தகவல்!

அரசியல், சேலம், தமிழ்நாடு, தர்மபுரி, முக்கிய செய்திகள்
  தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டிற்கு பிரதமர் மோடிதான் உத்தரவிட்டார் என்று சேலத்தில் திருமாவளவன் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.     எட்டு வழிச்சாலைத் திட்டத்தை கைவிடக்கோரி சேலத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் இன்று (ஜூலை 20, 2018) ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தின்போது அக்கட்சித் தலைவர் திருமாவளவன் பேசியது:   எட்டு வழிச்சாலைத் திட்டம் அமையவுள்ள சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களிலும் இந்தத் திட்டத்திற்கு மக்கள் ஆதரவு தரவில்லை. அப்படியிருந்தும், அரசு இந்த சாலைத் திட்டத்திற்காக துணிச்சலாக நிலங்களை கையகப்படுத்தி வருவது வேதனை அளிக்கிறது. இந்த சாலைத் திட்டத்தால் அடுத்த 50 ஆண்டுகளில் தொழில் வளர்ச்சி பெருகும் என்பதற்கு என்ன உத்தரவாதம்?     முதலில் கிராமச்சாலைகளை மாநில நெடுஞ்சாலைக...
பாஜக 100 சதவீதம் மதவாத கட்சியேதான்!: திருமாவளவன்

பாஜக 100 சதவீதம் மதவாத கட்சியேதான்!: திருமாவளவன்

அரசியல், இந்தியா, சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
திராவிட கட்சிகளிடம் சாதிய உணர்வு இருந்தாலும், ஜனநாயகத் தன்மை கொண்டது; ஆனால் பாஜக அப்படி அல்ல. அது முழுக்க முழுக்க மதவாதம் பேசக்கூடிய கட்சி என்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன். விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், இன்று (நவம்பர் 5, 2017) ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார். திராவிடக் கட்சிகள், பாஜக, தலித் அரசியல், ரஜினி, கமல் அரசியல், மதவாதம், சாதியம் என பல்வேறு கேள்விகளுக்கும் பதில் அளித்தார். அவருடைய பேட்டியில் இருந்து... பாஜக தலித் கட்சிகளை வளைக்கும் திட்டத்துடன்தான் செயல்பட்டு வருகிறது. ராம்விலாஸ் பாஸ்வான் முதல் மாயாவதி வரை அதற்கு பல உதாரணங்களைச் சொல்ல முடியும். தமிழ்நாட்டிலும் அதற்கு முயற்சித்தார்கள். அதை குறிப்பிடும் வகையில்தான் என்னை வளைக்க முடியாமல் தோற்றுப்போன வருத்தத்தில் என் மீது பாஜக தலைவர் தமிழிசை விமர்சனங்களை முன்வைக்க...