Thursday, December 5மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

Tag: surpassed

ஆர்.கே.நகர்: ஜெயலலிதாவின் சாதனையை விஞ்சிய டிடிவி தினகரன்!

ஆர்.கே.நகர்: ஜெயலலிதாவின் சாதனையை விஞ்சிய டிடிவி தினகரன்!

அரசியல், சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக களமிறங்கி வெற்றி பெற்ற டிடிவி தினகரன், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை விட கூடுதல் வாக்குகள் வித்தியாசத்தில் எதிர் வேட்பாளரை தோல்வி அடையச் செய்துள்ளார். மக்கள் செல்வாக்குமிக்க தலைவராக கருதப்பட்ட மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, கடந்த 2011ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து, திமுக சார்பில் சிம்லா முத்துச்சோழன் நிறுத்தப்பட்டார். அந்த தேர்தலில் ஜெயலலிதா 97218 வாக்குகளும், திமுக வேட்பாளர் 57673 வாக்குகளும் பெற்றனர். சிம்லா முத்துச்சோழனை விட 39545 வாக்குகள் அதிகம் பெற்று ஜெயலலிதா அமோக வெற்றி பெற்றார். இப்போது நடந்த ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன், ஆளும் அதிமுக வேட்பாளர் மதுசூதனனை 40707 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார். தேர்தல் களத்தில் எதிர்த்துப் போட்டியிட்ட பிரத...