Wednesday, December 4மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

Tag: stomach

ஹெர்னியா அச்சம் வேண்டாம்! டாக்டர் சொல்வதை கேளுங்க…

ஹெர்னியா அச்சம் வேண்டாம்! டாக்டர் சொல்வதை கேளுங்க…

அலோபதி, சேலம், மருத்துவம்
மருத்துவமனைகளில் அதிகளவில் நடக்கும் அறுவை சிகிச்சைகளில் ஒன்று, குடலிறக்க (ஹெர்னியா) அறுவை சிகிச்சை. பெண்களைவிட அதிகளவில் ஆண்களே ஹெர்னியா பிரச்சினைக்கு ஆளாகின்றனர். இந்த பாதிப்பு ஏன் ஏற்படுகிறது? தீர்வுகள் குறித்து விளக்குகிறார், சேலம் டாக்டர் ராமு லைப் கேர் மருத்துவமனை மருத்துவர் வையாளி ராமு.   குடலிறக்கம் (ஹெர்னியா) என்றால் என்ன?: பலரும் கருதுவதுபோல் குடலிறக்கம் எனப்படும் ஹெர்னியா, ஒரு நோய் அல்ல. அது, உடல் பகுதியில் ஏற்படும் ஒரு பழுது. அவ்வளவுதான். வயிற்றுப்பகுதியின் அடிப்புறச் சுவர், சில பகுதிகளில் நலிந்து, வலுவிழந்து இருக்கும். அவ்வாறு வலுவிழந்து காணப்படும் பகுதி வழியே, சிறுகுடல் பிதுக்கிக் கொண்டு அல்லது துருத்திக்கொண்டு இறங்கி விடும். இதைத்தான், 'ஹெர்னியா', அதாவது 'குடல் இறக்கம்' என்கிறோம்.   அறிகுறிகள்?   வயிறு வ...