கிரிக்கெட்: தொடரை வென்றது இந்தியா
பல்லேகெலே: இலங்கைக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை இந்திய அணி வென்றது. டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடரில் இலங்கை அணி தொடர்ந்து சொதப்பி வந்ததால், அந்நாட்டு ரசிகர்கள் மைதானத்திற்குள் குடிநீர் பாட்டில்கள வீசி எறிந்து ரகளையில் ஈடுபட்டனர். இதனால் போட்டி பாதியில் நிறுத்தப்பட்டாலும், இந்திய அணி வென்றதாக அறிவிக்கப்பட்டது.
விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இலங்கை அணியுடன் ஏற்கனவே மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிய இந்திய அணி, தொடரை முழுமையாக வென்று புதிய வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. தற்போது 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடந்து வருகிறது.
ஏற்கனவே முதல் இரண்டு ஒரு நாள் போட்டிகளை வென்று, தொடரில் முன்னிலை வகிக்கும் இந்திய அணி, இந்த தொடரையும் முழுமையாக கைப்பற்றும் முனைப்புடன் இன்று (27/8/17) மூன்றாவது போட்டியில் களமிறங்கி...