ஆர்.கே.நகரில் 20 ரூபாய் டோக்கன் கொடுத்துதான் ஜெயித்தோம்!; டிடிவி தினகரன் ஆதரவாளர் ஒப்புதல்
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது வாக்காளர்களுக்கு 20 ரூபாய் டோக்கன் கொடுத்துதான் வெற்றி பெற்றோம். எல்லாமே டிடிவி தினகரனின் திட்டம்தான் என்று அவருடைய ஆதரவாளரான முன்னாள் எம்எல்ஏ தொட்டியம் ராஜசேகரன் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளது அரசியல் அரங்கில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு கடந்த டிசம்பர் 21ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது. இந்த தேர்தல் முடிவுகள் பல்வேறு கோணங்களில் புதிய கவன ஈர்ப்பை பெற்று இருந்தது. அதில் முக்கியமானது, சுயேட்சையாக பிரஷ்ஷர் குக்கர் சின்னத்தில் போட்டியிட்ட டிடிவி தினகரன், ஆளுங்கட்சி வேட்பாளரை தோற்கடித்து, வெற்றி பெற்றதுதான். கடந்த 13 ஆண்டுகளில் ஓர் இடைத்தேர்தலில் ஆளுங்கட்சி தோற்பதும் இந்த இடைத்தேர்தலில்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆர்.கே. நகர் தொகுதியில் வாக்காளர்களுக்கு ஆளுங்கட்சி தரப்பில் ஓட்டுக்கு ரூ.6000 விநியோகிக்கப்பட்டதாக...