Wednesday, April 24மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: ritual for rain

‘சின்னவீடு’க்கு செருப்படி…! மழைக்காக நூதன சடங்கு ‘சேலம் மக்களின் சுவாரஸ்ய கலாச்சாரம்’

‘சின்னவீடு’க்கு செருப்படி…! மழைக்காக நூதன சடங்கு ‘சேலம் மக்களின் சுவாரஸ்ய கலாச்சாரம்’

கலாச்சாரம், சேலம்
தமிழகத்தில் ஓராண்டின் சராசரி மழை அளவு 958 மி.மீ., ஆனால் கடந்த 140 ஆண்டுகளில் இல்லாத வகையில் தற்போது மழைப்பொழிவு குறைந்து, கடும் வறட்சி நிலவுகிறது. இதேபோன்ற வறட்சி, கடைசியாக 1876ல் நிலவியதாக வானிலை ஆய்வு மையம் கூறுகிறது. ஆன்மீக நம்பிக்கையாளர்கள் மழை வேண்டி பரவலாக யாகம் நடத்தி வரும் வேளையில், சேலம் பட்டைக்கோயில் அருகே கிருஷ்ணன் கோயில் தெருவைச் சேர்ந்த பொதுமக்கள், 'கொடும்பாவி' சடங்கு என்ற நூதனமான சடங்கை கடைப்பிடித்து வருகின்றனர். "வருண பகவான்தான் நமக்கெல்லாம் மழையைக் கொடுக்கிறார். அவரை, 'கொடும்பாவி' என்ற பெண் மயக்கி தன் வசப்படுத்தி வைத்துக் கொள்கிறாள். வருண பகவான் தன் மனைவிக்குத் தெரியாமல், அடிக்கடி கொடும்பாவி வீட்டுக்குச் சென்று விடுகிறார். அங்கிருக்கும் காலங்களில் மழை வருவதில்லை. வறட்சி ஏற்படுகிறது. அதனால் நாங்கள் கொடும்பாவியை உருவப்பொம்மையாக செய்து, அதை செருப்பால் அடித்து அசிங்க