Thursday, March 28மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: publishers

பூவனம்: நீரில் ஆடும் நிலா (கவிதை)

பூவனம்: நீரில் ஆடும் நிலா (கவிதை)

இலக்கியம், திண்டுக்கல், புத்தகம், மதுரை
நீரில் ஆடும் நிலா...!  திண்டுக்கல் மாவட்டம் பாலகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த கவிஞர் பெ.அறிவுடைநம்பி எழுதி இருக்கிறார். தமிழக அரசின் கதர் வாரியத்தில் பணியாற்றி, ஓய்வுபெற்றவர். பல்வேறு சிற்றிதழ்களிலும் இவருடைய படைப்புகள் வெளியாகி உள்ளன. கவிஞர் மு.மேத்தாவின் முன்னுரையுடன், திண்டுக்கல் அய்யனார் பதிப்பகம் நூலை வெளியிட்டு உள்ளது. நூலில் இருந்து... கீழே விழுவது புவி ஈர்ப்பு மேலே எழுவது விலைவாசி அது நியூட்டன் விதி இது அரசியல் சதி என நையாண்டி செய்கிறார். ஒவ்வொருமுறை அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயரும்போதும் நாட்டில் விலைவாசியும் உயர்ந்து விடுகிறது என்பதை அனுபவ ரீதியாக அறிந்தவர்தானே நம் கவிஞர். மற்றொரு இடத்தில், தீச்சட்டி எடுப்போம் பேருந்தையும் உடைப்போம் இது நேர்த்திக்கடன்! என்று சமீபத்திய தமிழக அரசியல் நிகழ்வுகளை பகடி செய்கிறார். இதைவிட கவிஞரின் இன்னொரு நுட்பமான பதிவு, ந
பூவனம்:  மறைக்கப்பட்ட பறையர் வரலாறு (ஆய்வு நூல்)  -சேனாதிபதி ஜெ.மு.இமயவரம்பன்

பூவனம்: மறைக்கப்பட்ட பறையர் வரலாறு (ஆய்வு நூல்) -சேனாதிபதி ஜெ.மு.இமயவரம்பன்

இலக்கியம், புத்தகம்
பட்டியல் இனத்தவரிலும் குறிப்பாக பறையர் சாதி தோன்றியதன் வரலாறு குறித்து ஏற்கனவே பல்வேறு ஆய்வு நூல்கள் வந்துவிட்டன. இப்போது சேலத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் சேனாதிபதி ஜெ.மு.இமயவரம்பன், 'மறைக்கப்பட்ட பறையர் வரலாறு' என்ற ஓர் ஆய்வு நூலை வெளியிட்டுள்ளார். வெளியீடு, கலகம் வெளியீட்டகம். ஈழத்துக் கவிஞர் காசி ஆனந்தன், பின் அட்டைக் குறிப்பு வழங்கி கூடுதல் வண்ணம் சேர்த்துள்ளார். இந்நூலை முழுவதும் வாசித்து முடிக்கையில், பறையர் என்ற இனமே இந்தியாவில் பேரினமாக இருந்திருக்க வேண்டும் என்று கருதத் தோன்றுகிறது. இசை பறையன், களத்து பறையன், கிழக்கத்தி பறையன், நெசவுக்கார பறையன், பரமலை பறையன், பஞ்சி பறையன், பறையாண்டி பறையன் உள்பட 100க்கும் மேற்பட்ட பெயர்களில் இந்த சமூகத்தினர் அழைக்கப்பட்டு வந்துள்ளதை அறிய முடிகிறது. பறையர்கள் மீதான ஒடுக்குமுறை குறித்து பதிவு செய்யும்போது, அண்ணல் அம்பேத்கரை மேற்கோளாக பதிவு