Friday, January 16மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

Tag: Poor chief minister

இந்தியாவின் கோடீஸ்வர முதல்வர்கள் யார் யார்?; ஏழை முதல்வர் மாணிக் சர்க்கார்!

இந்தியாவின் கோடீஸ்வர முதல்வர்கள் யார் யார்?; ஏழை முதல்வர் மாணிக் சர்க்கார்!

அரசியல், இந்தியா, முக்கிய செய்திகள்
தேர்தல் சீர்திருத்தத்திற்காக போராடி வரும் ஏடிஆர் அமைப்பும், தேசிய தேர்தல் கண்காணிப்பகம் அமைப்பும் இணைந்து அண்மையில் ஓர் ஆய்வை மேற்கொண்டன. இந்திய ஒன்றிய அரசில் உள்ள மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் என மொத்தமுள்ள 31 முதலமைச்சர்களைப் பற்றிய ஆய்வு அது. அவர்களின் சொத்துமதிப்பு, அவர்களுக்கு எதிரான வழக்குகள், கல்வித்தகுதி போன்ற அம்சங்களை அவ்விரு அமைப்புகளும் ஆய்வு செய்தன. இன்றைய நிலையில் 25 முதலமைச்சர்கள் கோடீஸ்வரர்களாக உள்ளனர் என்கிறது அந்த ஆய்வு. அவர்களில் இருவர், 100 கோடி ரூபாய்க்கும் அதிகமாக சொத்துக்களை வைத்திருப்பவர்கள். ஒருவர், ஆந்திரா மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு. அவருடைய சொத்து மதிப்பு 177 கோடி ரூபாய். மற்றொருவர், அருணாச்சல பிரதேச மாநில முதல்வர் பீமா காண்டு. அவருடைய சொத்து மதிப்பு 129 கோடி ரூபாய். மூன்றாம் இடத்தில் இருக்கும் பஞ்சாப் மாநில முதல்வர் அம்ரீத்தர் சிங், 48 கோ...