பொய் செய்தி விவகாரம்: பணிந்தார் நரேந்திர மோடி!; ஸ்மிருதிக்கு மூக்குடைப்பு!!
பொய் செய்திகள் வெளியிடும் ஊடகத்தினரின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்ற நடுவண் அமைச்சர் ஸ்மிருதி இராணியின் உத்தரவுக்கு கடும் எதிர்ப்புகள் வலுத்ததை அடுத்து, பிரதமர் நரேந்திர மோடி நேரடியாக தலையிட்டு, அந்த உத்தரவுக்கு அதிரடியாக தடை விதித்தார்.
நடுவண் தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சரான ஸ்மிருதி இராணி, பொய் செய்திகள் வெளியிடும் பத்திரிகை, செய்தி தொலைக்காட்சிகள் உள்ளிட்ட ஊடக செய்தியாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நேற்று (ஏப்ரல் 2, 2018) திடீரென்று ஓர் உத்தரவை பிறப்பித்தார்.
போலி செய்திகள் வழங்கிய குற்றம் முதல்முறையாக நடந்திருப்பது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட செய்தியாளரின் தேசிய அங்கீகாரம் (National Accreditation) 6 மாதங்களுக்கு ரத்து செய்யப்படும் என்றும், இரண்டாவது முறையாக அதே குற்றம் நடந்திருப்பது தெரிய வந்தால் ஓராண்டுக்கு ரத்து செய்யப்படும் என்றும் உத்தரவிட...