பசு மாட்டு சாணி கதிரியக்கத்தை தடுக்குமா?
உலகெங்கும் மாட்டு சாணம்
பல்வேறு வகையில் பயன் தருகிறது.
இந்தியா உட்பட பல்வேறு
பகுதிகளில் மாட்டு சாணியை
வைத்து உருவாக்கப்படும் வரட்டி,
சமையல் செய்ய எரிபொருளாகப்
பயன்படுகிறது. நான் சிறுவனாக
இருந்தபோது எங்கள் வீட்டிலும்
பயன்படுத்தி வந்துள்ளோம்.
மண் தரை, மண் சுவர்
போன்றவற்றின் மீது மாட்டு
சாணம் பூசும்போது பிணைப்பு
பொருளாக மாறி மணல்
துகள்கள் ஒன்றுடன் ஒன்று
பிணையப் பயன்படுகிறது.
காலம் காலமாக, உலகெங்கும்,
விவசாயிகள் மாட்டு சாணம்
உட்பட கால்நடை கழிவுகளை
எரு உரமாகப் பயன்படுத்தி
வருகின்றனர்.
கடந்த சில நாட்களாக
மாட்டு சாணம் அதுவும்
குறிப்பாக நாட்டு பசுவின்
சாணம் கதிரியக்கத்தை
60 சதம் தடுத்து விடுகிறது என
ஆய்வு கூறுவதாக பத்திரிகை
செய்திகள் வருகின்றன.
அதன் பின்னணியில் உள்ள
ஆய்வு என்ன? அந்த ஆய்வு
எப்படி நடத்தப்பட்டது?
என்பது குறித்து அறிவியலார்கள்
எழு...