Saturday, December 7மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

Tag: penis

அரசை விமர்சித்து கேலிச்சித்திரம்:  கார்ட்டூனிஸ்ட் பாலா கைது!

அரசை விமர்சித்து கேலிச்சித்திரம்: கார்ட்டூனிஸ்ட் பாலா கைது!

சென்னை, தமிழ்நாடு, திருநெல்வேலி, முக்கிய செய்திகள்
நெல்லை தீக்குளிப்பு நிகழ்வை சித்தரிக்கும் விதமாக முதல்வர், நெல்லை ஆட்சியர், காவல்துறை ஆணையர் ஆகியோரை கேலிச்சித்திரமாக வரைந்த கார்ட்டூனிஸ்ட் பாலாவை காவல்துறையினர் இன்று (நவம்பர் 5, 2017) கைது செய்தனர். திருநெல்வேலி மாவட்டம் காசிதர்மத்தைச் சேர்ந்தவர் இசக்கிமுத்து. கந்துவட்டி கொடுமை குறித்து நெல்லை மாவட்ட ஆட்சியர், காவல்துறையினரிடம் பலமுறை புகார் மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் விரக்தி அடைந்த அவர் தனது மனைவி, இரு பெண் குழந்தைகளுடன் கடந்த அக்டோபர் 23ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். கந்து வட்டி கொடுமைக்கு ஒரு குடும்பமே பரிதாபமாக பலியானது குறித்து சென்னை கோவூரைச் சேர்ந்த கார்ட்டூனிஸ்ட் பாலா, தனது லைன்ஸ் மீடியா இணையதளத்தில் ஒரு கேலிச்சித்திரம் வெளியிட்டு இருந்தார். அத்துடன் ஒரு கட்டுரையும் வெளியிட்டு இருந்தார். ...