”ரஜினிகாந்த் ஒரு சந்தர்ப்பவாதி!”: மலேசியா துணை முதல்வர் விமர்சனம்
தமிழ்நாட்டு அரசியலை ஆட்கொள்ள ஆன்மிகம் மட்டும் போதாது என்று மலேசியா நாட்டின் பினாங்கு மாநில துணை முதலமைச்சர் பேராசிரியர் ராமசாமி கடுமையாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் கடந்த 31ம் தேதி ரசிகர்களுடனான சந்திப்பின்போது தான் அரசியலுக்கு வருவது உறுதி என்றும், ஆன்மிக அரசியல்தான் தனது கொள்கை என்றும் கூறினார். இதையடுத்து ஜனவரி 1ம் தேதி, ரசிகர் மன்றங்களை புதுப்பிக்கும் வகையிலும், ஆதரவாளர்களை அணுகவும் ரஜினி மன்றம் என்ற பெயரில் புதிதாக இணையதளத்தையும் தொடங்கினார்.
இந்நிலையில் மலேசியா நாட்டின் பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் ராமசாமி, தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ரஜினியை விமர்சித்து ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
இரண்டு தசாப்தங்களாக எதிர்பார்க்கப்பட்டது, விரைவில் நனவாகவுள்ளது. கடந்த 31 டிசம்பர் 2017 அன்று, தென்னிந்தியாவின் சூப்பர்ஸ...