பாஸ்போர்ட் மட்டும் போதும்… இந்தியர்கள் இனி 62 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்லலாம்!
இந்திய பாஸ்போர்ட் மூலம் இனி மலேஷியா, இலங்கை, இந்தோனேஷியா உள்ளிட்ட 62 நாடுகளுக்கு விசா இல்லாமலேயே இந்தியர்கள் பயணிக்க முடியும்.
உலகின் மிகவும் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலில் பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், சிங்கப்பூர் மற்றும் ஸ்பெயின் நாடுகள் இடம் பிடித்துள்ளன.
சர்வதேச வான் போக்குவரத்து சங்கம் (ஐஏடிஏ) அளித்த தகவலின்படி, உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் குறித்த பட்டியலை ஹென்லே பாஸ்போர்ட் குறியீட்டு நிறுவனம் வெளியிட்டுள்ளது.
அதில், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், சிங்கப்பூர் மற்றும் ஸ்பெயின் நாடுகளின் பாஸ்போர்ட் முதலிடம் பிடித்துள்ளது. இந்த நாடுகளின் குடிமக்கள் அவர்களின் பாஸ்போர்ட் மூலம் 194 நாடுகளுக்கு விசா இல்லாமலேயே செல்ல முடியும். இவற்றில் ஜப்பான், சிங்கப்பூர் நாடுகள் கடந்த ஐந்து ஆண்டுகளாக தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
நடப்பு ஆண்டுக்...