Tuesday, December 3மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

Tag: Partiality

முதல்வர் மருத்துவக்குழு டாக்டர்கள் குறைப்பு:  ஓரவஞ்சனை  ஏன்?

முதல்வர் மருத்துவக்குழு டாக்டர்கள் குறைப்பு: ஓரவஞ்சனை ஏன்?

கிருஷ்ணகிரி, கோயம்பத்தூர், சென்னை, சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்போது முதல்வருடன் பின்தொடர்ந்து செல்லும் மருத்துவக்குழுவின் பலம் திடீரென்று குறைக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. குடியரசுத்தலைவர், பிரதமர், ஆளுநர், முதல்வர் போன்ற முக்கிய பதவிகளில் உள்ளவர்கள் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளச் செல்லும்போது, அவர்களுக்கு 'ஹை செக்யூரிட்டி' போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருக்கும். தவிர, அந்தந்த மாவட்டக் காவல்துறையினரும் பாதுகாப்புக்குச் செல்வது நடைமுறை. போலீஸ் பந்தோபஸ்து தவிர, விஐபிக்களை பின்தொடர்ந்து மருத்துவக்குழுவினர்களுடன் கூடிய ஓர் ஆம்புலன்ஸ் வாகனமும் செல்லும். அந்த வாகனத்தில் அவசர சிகிச்சைக்குத் தேவையான உபகரணங்கள் வைக்கப்பட்டு இருக்கும். பொதுவாக, இருதயவியல் மருத்துவர், பொது மருத்துவர், சிறுநீரகவியல் மருத்துவர், எலும்புமுறிவு மருத்துவர் மற்றும் இவர்களுடன் ஒரு மயக்கவியல் மருத்துவரும் உடன் செல்வர். இவ...