நதியில் செத்த மீனாய் மிதக்கும் நான் யார்? சாதிய ஒடுக்குமுறையை துகிலுரியும் பரியேறும் பெருமாள்! #PariyerumPerumal
தமிழ் சினிமாக்களில்
இதுநாள் வரை ஆகிவந்த
காட்சி மொழியையும்,
நாயகத்தனத்தை
தூக்கிப்பிடித்தலையும்
சுக்கல் சுக்கலாக்கி,
புதிய தடத்தை அமைத்துக்
கொடுத்திருக்கிறது,
பரியேறும் பெருமாள்.
தமிழ் ரசிகனின் ரசனையையும்
பல படிகள் உயர்த்தி
இருக்கிறது.
இனி, பரியேறும்
பெருமாளுக்கு முன்,
பரியேறும் பெருமாளுக்குப்
பின் என்று தமிழ்
சினிமாக்களை
காலவரிசைப்படுத்தலாம்.
மய்யக் கதாபாத்திரம்
நம்முடன் தெரு முனை கடையில் தேநீர் அருந்தும் சராசரி இளைஞனைத்தான் கதிர் பிரதிபலிக்கிறார். அவர்தான் பரியேறும் பெருமாள். கதை நாயகன். மய்யக் கதாபாத்திரம் அவருக்கானது என்றாலும், படத்தில் வரும் வேறு சில துணை பாத்திரங்களே இந்தக் கதைக்கு அடர்த்தியைக் கூட்டியிருக்கின்றன.
இரண்டே காட்சியில் வந்தாலும் திரை பார்வையாளர்களை அச்சச்சோ... அவரை விட்டுடுங்கடா என சொல்ல வைத்திருக்கும் பரிய...