Saturday, December 14மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

Tag: parents

”புயலோ மழையோ குளிரோ எதுவும் எங்களுக்கு துன்பமில்லை!” – செய்தித்தாள் ‘லைன் பாய்’கள் கதை!

”புயலோ மழையோ குளிரோ எதுவும் எங்களுக்கு துன்பமில்லை!” – செய்தித்தாள் ‘லைன் பாய்’கள் கதை!

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  சில பணிகளில் குறைந்த உழைப்பு இருக்கும். அதீத லாபம் கிடைக்கும். சில பணிகளில் உழைப்பு விழுங்கும் அளவுக்கு பணப்பலன்கள் இருக்காது. இதில் இரண்டாவது வகையிலானது, வீட்டுக்கு வீடு செய்தித்தாள் போடும் 'லைன் பாய்'களின் வாழ்க்கை. செய்தித்தாளும் ஒரு கோப்பை தேநீரும்:   ''காலையில பேப்பர் பார்க்கலைனா எனக்கு பொழுதே ஓடாது. அதுவும், ஒரு கையில தேநீர் கோப்பையை பிடித்து ஒவ்வொரு மிடறாக உறிஞ்சி சுவைத்தபடி, செய்தித்தாள் வாசிக்கும் அனுபவமே தனிதான்,'' என பலர் சுகானுபவமாக சொல்வதுண்டு.     அவர்களில் பலர், செய்தித்தாள் விநியோகத்தில் இருக்கும் வலைப்பின்னல் அமைப்பு, உழைப்பு, கூலி, 'லைன் பாய்'களின் வாழ்க்கை போராட்டம் பற்றி அறிந்து இருக்க வாய்ப்பே இல்லை.   முகவர்கள்:   தினசரி செய்தித்தாளோ அல்லது வார / மாத சஞ்சிகைகளோ எதுவாக இருந்தாலும், அவை மாவட்ட அளவில் நியமிக்...
‘துறுதுறு’ குழந்தைகள் ‘திருதிரு’ பெற்றோர்கள்!; ஏடிஹெச்டி செய்யும் மாயம்!!

‘துறுதுறு’ குழந்தைகள் ‘திருதிரு’ பெற்றோர்கள்!; ஏடிஹெச்டி செய்யும் மாயம்!!

அலோபதி, குழந்தைகள் நலம், சிறப்பு கட்டுரைகள், சேலம், மருத்துவம், முக்கிய செய்திகள்
''அடடடடா....உங்க மகன், ஒரு நிமிஷம்கூட கிளாஸ்ல உட்கார மாட்டேன்கிறான், மேடம். அவனுக்கு வகுப்பறை விதிகளைக் கொஞ்சம் சொல்லிக்கொடுங்க...'' ''நாங்களும் எவ்வளவோ கோச்சிங் கொடுத்துட்டோம். அவனால அடிப்படை கணக்குப்பாடம் கூட சரியாக செய்ய முடியறதில்ல...'' இதுபோல இன்னும் நிறைய. இப்படி எல்லாம் உங்கள் பிள்ளைகள் மீது புகார்கள் வந்திருந்தால், நிச்சயம் உங்கள் குழந்தைக்கு, 'அட்டென்ஷன் டெஃபிஸிட் ஹைப்பர்ஆக்டிவிட்டி டிஸ்ஆர்டர் (Attention Deficit Hyperactivity Disorder)' பிரச்னை இருக்கலாம், என்கிறது மருத்துவ உலகம். இது நோய் அல்ல; குறைபாடு. சுருக்கமாக ஆங்கிலத்தில், 'ADHD'. தமிழில், 'கவனக்குறைவு மற்றும் மிகுசெயல்பாடு கோளாறு'. குழந்தைகள், வளரிளம் பருவத்தினருக்கு ஏற்படும் உளவியல் கோளாறுகள், கற்றலில் ஏற்படும் சிக்கல்களைக் களைவது குறித்து, சேலம் இரண்டாவது அக்ரஹாரத்தில் உள்ள 'டாக்டர் ராமு லைஃப்கேர் மருத்து...
டெங்கு காய்ச்சலை ஒழிக்காத அரசு அகல வேண்டும்: கமல்ஹாசன் ஆவேசம்

டெங்கு காய்ச்சலை ஒழிக்காத அரசு அகல வேண்டும்: கமல்ஹாசன் ஆவேசம்

அரசியல், சினிமா, சிறப்பு கட்டுரைகள், சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
டெங்கு காய்ச்சலை தடுக்க ஆவன செய்யாத அரசு அகல வேண்டும் என்று நடிகர் கமல்ஹாசன் தமிழக அரசை காட்டமாக விமர்சனம் செய்துள்ளார். நடிகர் கமல்ஹாசன், விரைவில் அரசியல் களம் காண உள்ளதாகவும், தனிக்கட்சி தொடங்க உள்ளதாகவும் சில நாட்களுக்கு முன் தெரிவித்தார். 100 நாள்களில் தேர்தல் வந்தாலும் தான் போட்டியிட தயாராக இருப்பதாகவும், மக்களுக்காக முதல்வர் ஆவதற்கும் தயார் என்றும் கூறியிருந்தார். டுவிட்டர் பக்கத்திலும், ஊடகங்களுக்கு அளிக்கும் பேட்டியிலும், தற்போதுள்ள அதிமுக அரசுக்கு எதிராக அவர் தொடர்ந்து பல்வேறு விமர்சனங்களை பகிரங்கமாக முன்வைத்து வருகிறார். இதற்கிடையே, கேரள முதல்வர் பினராயி விஜயனை நேரில் சந்தித்து பேசிவிட்டு வந்தார். சில நாள்களுக்கு முன்னதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், கமல்ஹாசனை சென்னைக்கு நேரில் வந்து சந்தித்து விட்டுச் சென்றார். அரவிந்த் கேஜரிவாலுடனான சந்திப்புக்குப் பின்னர் அ...