Saturday, December 7மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

Tag: pancha bootham

மேட்டூரில் களைகட்டிய ஆடிப்பெருக்கு விழா; புதுமண தம்பதிகள் புது தாலி, புத்தாடை அணிந்து வழிபாடு!

மேட்டூரில் களைகட்டிய ஆடிப்பெருக்கு விழா; புதுமண தம்பதிகள் புது தாலி, புத்தாடை அணிந்து வழிபாடு!

சேலம், தமிழ்நாடு, தர்மபுரி, முக்கிய செய்திகள்
  பத்தாண்டுகளுக்குப் பிறகு மேட்டூர் அணை நிரம்பி வழிந்ததால், இந்தாண்டு ஆடிப்பெருக்கு விழாவை பக்தர்கள் உற்சாகமாக கொண்டாடி தீர்த்தனர்.   பஞ்சபூதங்களில் ஒன்றான நீருக்கு மரியாதை அளிக்கும் விதமாக ஆடிப்பெருக்கு விழாவை காவிரிக்கரையோர மக்கள் காலங்காலமாக கொண்டாடி வருகின்றனர். தமிழகத்தின் தென்மாவட்டங்களில் இத்தகைய வழிபாட்டு கலாச்சாரம் வழக்கத்தில் இல்லை. ஆனால் கொங்கு மண்டலத்தில் குறிப்பாக காவிரி கரையோரம் உள்ள ஈரோடு, திருச்சி, சேலம், நாமக்கல் மற்றும் ஒகேனக்கல் காவிரி ஆறு பாயக்கூடிய தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் ஆடி 18 அன்று, பக்தர்கள் நீர்நிலைகளில் கூடி வழிபடுவது நடைமுறையில் இருந்து வருகிறது.   ஆடிப்பெருக்கு நீராடலின் பின்னணியில் இன்னொரு கதையும் சொல்லப்படுகிறது. அதாவது, மஹாபாரத இதிகாசத்தில் பாண்டவர்களுக்கும், கவுரவர்களுக்கும் தொடர்ந்து 18 நாள்கள் போர் நடந்ததாகவும், போரில...