Tuesday, December 3மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

Tag: Paid News

மக்களே போல்வர் கயவர்…! ஊடகங்களும் அத்தகையவர்களே!!

மக்களே போல்வர் கயவர்…! ஊடகங்களும் அத்தகையவர்களே!!

அரசியல், சிறப்பு கட்டுரைகள், முக்கிய செய்திகள்
மக்களவைத் தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு இன்னும் பத்து நாள்களில் வர உள்ள நிலையில், செய்தி நிறுவனங்கள், ஊடகங்கள், தேர்தல் கள ஆய்வு நிறுவனங்கள் தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகளை வெளியிட்டு வருகின்றன. இந்நிலையில், புதிய தலைமுறை செய்தி தொலைக்காட்சி நிறுவனம், பெடரல் இணைய ஊடகம் மற்றும் ஏபிடி நிறுவனமும் இணைந்து நடத்திய தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளை அண்மையில் வெளியிட்டது. மக்களவைத் தேர்தல்-2024ல் தமிழகத்தில், திமுக 38.35 சதவீத வாக்குகளைப் பெறும் என்றும், அதிமுக 17.26 சதவீத வாக்குகளைப் பெறும் என்றும் தெரிவிக்கிறது, புதிய தலைமுறை கருத்துக்கணிப்பு. நாம் தமிழர் கட்சி 7.26 சதவீத வாக்குகளைப் பெற்று நான்காம் இடத்தைப் பிடிக்கும் என்றும் அந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதில் வேடிக்கை என்னவென்றால், தொண்டர்கள் மற்றும் கட்டமைப்பு ரீதியாக வலிமையாக உள்ள அதிமுகவைக் கா...
வீரம் என்றால் என்ன தெரியுமா? போலி ஜனநாயகத்திற்கா உங்கள் வாக்கு? #3

வீரம் என்றால் என்ன தெரியுமா? போலி ஜனநாயகத்திற்கா உங்கள் வாக்கு? #3

அரசியல், சிறப்பு கட்டுரைகள், சேலம், முக்கிய செய்திகள்
விடிந்தால், தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. யாருக்கு வாக்களிக்க வேண்டும்? என்பதை இந்நேரத்தில் வாக்காளர்கள் முடிவு செய்திருக்கக் கூடும். எனினும், தேர்தல் ஜனநாயகத்தின் பெருமதிப்பிற்குரிய வாக்காளர்களிடம் கொஞ்சம் உரையாட விரும்பியே இந்த பதிவை எழுதுகிறேன்.   களத்தில் நாம் சந்திக்கும் ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு நிறம் உண்டு. எத்தனை நிறங்கள் இருந்தாலும், அடிப்படையில் அவை ஒரே வண்ணத்தின் நிறப்பிரிகைகள்தான்.   அதாவது, 99 விழுக்காடு கட்சிகள் முதலாளிய வர்க்கத்தினருக்கு ஆதரவானவை. உழைக்கும் வர்க்கத்திற்காக பேசக்கூடியவை எப்போதும் பொதுவுடைமைக் கட்சிகளே.   தமிழகத்தைப் பொருத்தவரை பொதுவுடைமைக் கட்சிகளும் கூட்டணி விசுவாசம் என்ற பெயரில் தன் சுயத்தை எப்போதோ தொலைத்துவிட்டு, முதலாளிய பாதையை நோக்கிச் சென்று கொண்டிரு...
திண்ணை: சொல்வதெல்லாம் பொய்!

திண்ணை: சொல்வதெல்லாம் பொய்!

அரசியல், தமிழ்நாடு, திண்ணை, முக்கிய செய்திகள்
''தமிழ்நாட்டுல மக்களவை தேர்தல் நெருங்க நெருங்க அரசியல் களம் சூடு ஏறிட்டே போறது. அதைவிட இப்பவே கத்திரி வெயிலாட்டம் கொளுத்துது. வெளில தல காட்ட முடியலப்பா...'' என்றபடியே, நக்கல் நல்லசாமியின் வீட்டுத் திண்ணையில் வந்து அமர்ந்தார் பேனாக்காரர்.   வெயிலுக்கு இதமாக மய்ய அரைத்த இஞ்சி, கறிவேப்பிலை, பொடியாக நறுக்கின வெள்ளரி துண்டுகள் கலந்த மோரை கொண்டு வந்து கொடுத்தார் நக்கலார். ''தேர்தல் சம்பந்தமா லேட்டஸ்ட் சேதி என்ன இருக்கு? கருத்துக்கணிப்பு கிணிப்பு ஏதாச்சும் இருக்கா?'' என்றார்.   ''இப்பலாம் எங்க உருப்படியான கருத்துக்கணிப்பு இருக்கு... எல்லாம் திணிப்புதான். அவங்கவங்க அரிப்புக்கு தகுந்தமாதிரி சொறிஞ்சு விடறதுக்கும் இன்றைக்கு நிறைய ஊடகங்கள், தரகர்கள் வந்துட்டாங்க. அப்படி யாருக்கிட்டதான் கருத்துக்கணிப்பு நடத்துவாங்களோ... கருத்து சொன்ன ஒரு பயலும் பேஸ்புக்லயோ, டிவிட்டர்லயோ, வாட்ஸ்அப்பு...