Saturday, December 14மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

Tag: oththa seruppu

அதிகார வர்க்கத்தின் மீது பாய்ந்த ஒத்த செருப்பு! – சினிமா விமர்சனம்!

அதிகார வர்க்கத்தின் மீது பாய்ந்த ஒத்த செருப்பு! – சினிமா விமர்சனம்!

சினிமா, முக்கிய செய்திகள்
தான் செய்த கொலை குற்றங்களில் இருந்து, செய்யாத ஒரு கொலையைச் சொல்லி புத்திசாலித்தனமாக தன்னை காவல்துறையின் பிடியில் இருந்து விடுவித்துக் கொள்ளும் ஒரு சாமானியனின் ஒப்புதல் வாக்குமூலம்தான், 'ஒத்த செருப்பு சைஸ் 7' படத்தின் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் எல்லாமே. பார்த்திபன் பாணியில் சொல்ல வேண்டுமானால், ஒரு நீலப்படத்தில் நடிக்க சன்னி லியோன் போன்ற ஒரே ஒருவர் போதும். ஆனால், ஒத்த செருப்பு போன்ற ஒரு முழு நீளப்படத்தில் பார்த்திபன் மட்டுமே நடித்திருப்பது இந்தியாவில் முதல் முயற்சி.   அதுவும் பக்கத்து வீட்டுக்காரர் போன்ற தோற்றத்தில் இருக்கும் பார்த்திபனை மட்டுமே, பாப்கார்ன்கூட கொறிக்க விடாமல் திரையில் இரண்டு மணி நேரம் பார்த்துக் கொண்டிருக்க முடியுமா? உண்மையில், ரசிகர்களுக்கு எந்தவித சலிப்பும் ஏற்படாத வகையில் அவர்களை இருக்கையில் கட்டிப்போட்டு சுவாரஸ்யப்படுத்தி இருக்கிறார் பார்த்திபன். தமிழ...