மோடியுடன் ஓபிஎஸ் சந்திப்பு: அதிமுக அணிகள் இணையுமா?
புதுடில்லி: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பிரதமர் மோடியை இன்று (ஆக.,14) சந்தித்தார்.
கடந்த 2 நாட்களுக்கு முன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமரை சந்தித்த நிலையில், இன்று ஓபிஎஸ் மோடியை சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்பின் போது அதிமுக இரு அணிகள் இணைப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் ஆகியோர் அடுத்தடுத்து பிரதமர் மோடியை சந்தித்துள்ளதால் ஓரிரு நாள்களில் இரு அணிகள் இணைப்பு குறித்த முக்கிய முடிவு வெளியாகலாம் என தெரிகிறது....