Saturday, December 13மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

Tag: obesity problem

பல்கலை, கல்லூரிகளில் இனி ‘நொறுக்க’, ‘கொறிக்க’ முடியாது! #JunkFood #UGC

பல்கலை, கல்லூரிகளில் இனி ‘நொறுக்க’, ‘கொறிக்க’ முடியாது! #JunkFood #UGC

இந்தியா, கல்வி, தகவல், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  இந்தியாவில் இளம் தலைமுறையினர் அதிகளவில் உடல்பருமனால் அவதிப்படுவதாக மத்திய சுகாதாரத்துறை எச்சரித்துள்ளதை அடுத்து, அனைத்து பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளின் வளாகத்திலும் இனி நொறுக்குத்தீனிகள் (Junk Food) விற்கக்கூடாது என்று பல்கலை மானியக்குழு (யுஜிசி) அதிரடியாக தடை விதித்து உள்ளது.   இந்தியா எதிர்கொண்டுள்ள உடல்நலம் சார்ந்த முக்கிய பிரச்னைகளுள் ஒன்று, உடல்பருமன் (Obesity). 1975ம் ஆண்டுவாக்கில் இந்தியாவில் ஒரு மில்லியன் பேருக்கு உடல்பருமன் பிரச்னை இருந்தது. ஆனால், 2016ம் ஆண்டு நிலவரப்படி 30 மில்லியன் இந்தியர்கள் அதிக எடை அல்லது உடல்பருமனால் அவதிப்படுவதாக கூறுகிறது ஓர் ஆய்வு. அடுத்த ஏழு ஆண்டுகளில், அதாவது 2025ல் இப்பிரச்னைக்கு 70 மில்லியன் பேர் இலக்காகக் கூடும் என்றும் எச்சரிக்கிறது அந்த மருத்துவ ஆய்வு. பாட்டிக்கு இருந்த அதே பிரச்னை பேத்திக்கும் இருக்கலாம். அந்த வகையில் இது...