Tuesday, February 27மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: O.Panniriselvam

”ஆண்மையற்ற அதிமுக தலைவர்கள்”; சர்ச்சை கிளப்பிய ஆடிட்டர் குருமூர்த்தியின் ட்வீட்!!

”ஆண்மையற்ற அதிமுக தலைவர்கள்”; சர்ச்சை கிளப்பிய ஆடிட்டர் குருமூர்த்தியின் ட்வீட்!!

அரசியல், சென்னை, முக்கிய செய்திகள்
டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் மீது ஆறு மாதம் கழித்து நடவடிக்கை எடுத்துள்ளது தொடர்பாக, துக்ளக் பத்திரிகை ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை ஆண்மையற்றவர்கள் என்று ட்வீட் செய்த விவகாரம் அரசியல் களத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்ட டிடிவி தினகரன் அமோக வெற்றி பெற்றார். ஆளுங்கட்சி வேட்பாளரான மதுசூதனன் தோல்வி அடைந்தார். இந்நிலையில், அதிமுக கட்சிப் பொறுப்பில் இருந்து வரும் தினகரன் ஆதரவாளர்கள் நாஞ்சில் சம்பத், புகழேந்தி, சரஸ்வதி, கலைராஜன் உள்ளிட்டோர் நேற்று திடீரென்று நீக்கப்பட்டனர். இது தொடர்பாக துக்ளக் பத்திரிகை ஆசிரியரும், பாஜக பிரமுகருமான ஆடிட்டர் குருமூர்த்தி, ''இந்த பலவீனமான நபர்கள், ஆறு மாதம் கழித்துதான் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர். ஆண்மையற்ற தலைவர்கள்.
ஓபிஎஸ்ஸை கழற்றிவிட ஆழம் பார்க்கிறாரா இபிஎஸ்?

ஓபிஎஸ்ஸை கழற்றிவிட ஆழம் பார்க்கிறாரா இபிஎஸ்?

அரசியல், சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
''எனக்குப் பின்னாலும் அதிமுக என்ற இயக்கம் இன்னும் நூறு ஆண்டுகள் ஆனாலும் மக்கள் நலனுக்காகவே செயல்படும்,'' என்றார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா. இப்படி அவர் சட்டப்பேரவையிலேயே முழங்கினார். எந்த இயக்கம் மக்கள் நலனுக்காக செயல்படும் என்று சொன்னாரோ, அந்த இயக்கம்தான் சில காலம் கூவத்தூர் விடுதியிலும், புதுச்சேரி விடுதியிலும், கல்லறையிலும் முடங்கிக் கிடந்தது. அடுத்த தேர்தல் வரையிலாவது அந்த இயக்கம் உயிர்ப்புடன் இருக்குமா என்பதே கேள்விக்குறியான நிலையில் இருக்கிறது. அதிமுகவை மீட்டெடுக்க ஜெயலலிதா, ஏசு கிறிஸ்து போல மீண்டும் உயிர்த்தெழுந்துதான் வர வேண்டும். அதிமுக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் ஜெயலலிதா இருக்கும்வரை அவர் முன்பாக எப்படி கூனிக்குறுகி நின்றார்களோ அதே அடிமை மனோபாவத்தை சசிகலாவிடமும் காட்டி வந்தார்கள். ஆனால், பாஜக என்ற புதிய கூட்டாளி கிடைத்த பின்னர் அவர்களின் போக்கு அடியோடு மாறி
முதுகெலும்பற்ற அடிமைகளும் மூளையற்ற பக்தாள்களும்!

முதுகெலும்பற்ற அடிமைகளும் மூளையற்ற பக்தாள்களும்!

அரசியல், கோயம்பத்தூர், சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
அரசியல் சாசனத்திற்கு அப்பாற்பட்டு நடந்து வரும் ஆளுநரின் ஆய்வுப்பணிகளுக்கு பல்வேறு மட்டத்திலும் கடும் எதிர்ப்புகள் வலுத்து வரும் நிலையில், தமிழக அரசை ஆளுநர் மூலம் நிர்வாகம் செய்ய பாஜக திட்டமிட்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. பாரதியார் பல்கலைக்கழகத்தின பட்டமளிப்பு விழாவிற்காகக் கோயம்புத்தூருக்குச் சென்ற தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், பட்டங்களை வழங்கியதோடு ராஜ்பவனுக்கு திரும்பி இருக்கலாம். என்ன நினைத்தாரோ, திடீரென்று அவர் கோவை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் அரசின் நலத்திட்டப்பணிகள் குறித்த ஆய்வு என்ற பெயரில் கோதாவில் குதித்தார். பாஜகவை சும்மாவே தெறிக்கவிடும் எதிர்க்கட்சிகள் விடுவார்களா?. அக்கட்சியை கடும் விமர்சனங்களால் பிராண்டி எடுத்து வருகிறார்கள். 'தமிழகத்திற்கு நல்லது செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் ஆளுநர் ஆய்வு செய்கிறார். அதில் ஒன்றும் தவறு இல்லை' என்று பாஜக
அதிமுக அரசுக்கு ஆதரவா?; ‘பொடி’ வைக்கும் புதிய ஆளுநர்

அதிமுக அரசுக்கு ஆதரவா?; ‘பொடி’ வைக்கும் புதிய ஆளுநர்

அரசியல், முக்கிய செய்திகள்
கடந்த ஓராண்டுக்கும் மேலாக தமிழக ஆளுநர் பொறுப்பில் இருந்த வித்யாசாகர் ராவ் நேற்று விடைபெற்றார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அவரை முறைப்படி வழியனுப்பி வைத்தனர். பதவி ஏற்பு: அதையடுத்து, தமிழக புதிய ஆளுநராக நியமிக்கப்பட்ட பன்வாரிலால் புரோஹித், ராஜ் பவனில் இன்று (அக்டோபர் 6) முறைப்படி பதவியேற்றுக் கொண்டார். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்பு விழாவில் பன்வாரிலால் புரோஹித்தின் மனைவியும் கலந்து கொண்டார். பதவியேற்பு முடிந்ததும் முதல்வர், துணை முதல்வர் ஆகியோர் அவருக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். மு.க.ஸ்டாலின் அதிருப்தி: முதல்வர், துணை முதல்வர் ஆகியோரைத் தொடர்ந்து மரபுப்படி எதிர்க்கட்சித் தலைவரான மு.க.ஸ்டாலின்தான் ஆளுநருக்கு வாழ்த்துச் சொல்ல அழைக்கப்பட வேண்ட
ஓபிஎஸ் – இபிஎஸ் அணிகள் இணைந்தன!

ஓபிஎஸ் – இபிஎஸ் அணிகள் இணைந்தன!

தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சென்னை : அதிமுகவில் இரு அணிகளாக பிரிந்து செயல்பட்டு வந்த எடப்பாடி பழனிசாமி அணியும், ஓ.பன்னீர்செல்வம் அணியும் இன்று இணைந்தன. கட்சி அலுவலகத்திற்கு வந்த முதல்வர் பழனிசாமியும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வந்து, அணிகள் இணைப்பை உறுதி செய்தனர். இருவரும் கைகுலுக்கி வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். முதல்வர் பழனிசாமியைத் தொடர்ந்து, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் கட்சி தலைமை அலுவலகத்திற்கு வந்தார். முதல்வர் பதவியில் இருந்து விலகி பிறகு, 6 மாதங்களுக்கு பிறகு கட்சி அலுவலகத்திற்கு ஓபிஎஸ் வந்தார். முதல்வர் உடனான ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு, ஓபிஎஸ் வீட்டிற்கு சென்ற அமைச்சர் தங்கமணி, வேலுமணி மற்றும் எம்.பி., வைத்தியலிங்கம் அவரை கட்சி அலுவலகத்திற்கு அழைத்து வந்தனர். கட்சி அலுவலகம் வந்த ஓபிஎஸ்.,க்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து, ஓபிஎஸ் ம