Wednesday, October 15மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

Tag: Mukesh Ambani

2024ல் இந்தியர்கள் கூகுளில் அதிகம் தேடியது என்ன? யாரை?

2024ல் இந்தியர்கள் கூகுளில் அதிகம் தேடியது என்ன? யாரை?

இந்தியா, முக்கிய செய்திகள்
ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் கூகுள் தேடு பொறியில் உலக நாடுகள் அதிகம் தேடிய நிகழ்வுகள், பிரபலங்கள், விவகாரங்கள் குறித்து பட்டியல் வெளியிட்டு வருகிறது. எந்தெந்த சொற்களை அதிகமாக பயனர்கள் தேடினர் என்ற விவரங்களையும் ஆவணப்படுத்துகிறது கூகுள். நாம் இப்போது,நடப்பு 2024ஆம் ஆண்டின்இறுதிப் பகுதியில் இருக்கிறோம்.இந்த ஆண்டில் இந்தியர்கள்ஐபிஎல் கிரிக்கெட் முதல்ரத்தன் டாடா வரைகூகுள் தேடு பொறியில்அதிகமாக தேடித்தேடிபடித்திருக்கிறார்கள் என்பதுதெரிய வந்துள்ளது.இந்தியாவைப் பொறுத்தவரைகிரிக்கெட், அரசியல், பிரபலங்களைப் பற்றிதெரிந்து கொள்வதுதான் கூகுளில்ஆதிக்கம் செலுத்தி இருக்கின்றன. கூகுள் நிறுவனம் வெளியிட்ட தரவுகளின்படி, ஐபிஎல் கிரிக்கெட், டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் மற்றும் பாரதிய ஜனதா கட்சி ஆகியவை 2024ஆம் ஆண்டில், இந்தியாவில் அதிகம் பேரால் தேடப்பட்ட முக்கிய வார்த்தைகளில் அடங்கும். இது, கிரிக்கெட் மற்றும்...
அடேங்கப்பா…! கல்யாணச் சந்தையில் புழங்கும் 6 லட்சம் கோடி ரூபாய்!

அடேங்கப்பா…! கல்யாணச் சந்தையில் புழங்கும் 6 லட்சம் கோடி ரூபாய்!

இந்தியா, முக்கிய செய்திகள், வர்த்தகம்
''கல்யாணம் பண்ணிப்பார்; வீட்டைக் கட்டிப்பார்!'' ஆகிய இரண்டுமே அனுபவித்து, ஆய்ந்து சொன்ன மொழிகள். இவ்விரண்டு திட்டங்களிலும் பொருளாதாரம் முக்கிய பங்காற்றுகிறது. மட்டுமின்றி, உறவுகளை ஒன்றிணைப்பதும் முக்கியமாகிறது. எப்போது, எது கைகூடும்? எது உடையும்? எப்போது இத்திட்டங்கள் நிறைவேறும்? என்று கடைசித் தருணம் வரை திக்… திக்… நிமிடங்களாகவே கடந்து போக வேண்டியதிருக்கிறது. இரண்டுமே உணர்வுப்பூர்வமானது. என்றாலும்கூட, கல்யாண வைபவம் என்பது வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே நிகழக்கூடியது என்பதால் மனதிற்கு நெருக்கமானதாகிறது. ஒரு காலத்தில் மணமகள் அல்லது மணமகன் வீட்டிலேயே தென்னங்கீற்றுப் பந்தல் போட்டு, திருமண விழாக்களும், விருந்து உபசரிப்பும் களைகட்டின. நாகரிக மாற்றத்தால் இப்போது அவரவர் சக்திக்கு ஏற்ப மண்டபம் பிடிக்கின்றனர். மண்டபத்தை உறுதி செய்த பிறகு அழைப்பிதழ் அச்சடிப்பதில் இருந்து தொடங்குகிறது கல்யாண வ...
இந்திய கோடீஸ்வரர் பட்டியலில் முகேஷ் அம்பானி தொடர்ந்து முதலிடம்; 6 லட்சம் கோடிகளுக்கு அதிபர்!

இந்திய கோடீஸ்வரர் பட்டியலில் முகேஷ் அம்பானி தொடர்ந்து முதலிடம்; 6 லட்சம் கோடிகளுக்கு அதிபர்!

முக்கிய செய்திகள், வர்த்தகம்
பிரபல தொழில் சாம்ராஜ்யமான ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி, தொடர்ந்து இந்தியாவின் நம்பர்-1 கோடீஸ்வரராக திகழ்கிறார். அவருடைய சொத்து மதிப்பு 6.12 லட்சம் கோடிகளுக்கு மேல் இருப்பதாக, ஹூரூன் ஆய்வேடு, மார்ச் 2ம் தேதி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.   இப்போதைய நிலையில், இந்தியாவில் மட்டும் மொத்தம் 209 பெரும் கோடீஸ்வரர்கள் இருக்கிறார்கள் என்றும், அவர்களில் 177 பேர் இந்தியாவில் வசிப்பதாகவும் மற்றவர்கள், வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் என்றும் ஹூரூன் ஆய்வேடு கூறுகிறது.   உலகளாவிய கோடீஸ்வரர்கள் பட்டியலின் பத்தாவது பதிப்பை பிரபல வணிக இதழான ஹூரூன் செவ்வாய்க்கிழமை (மார்ச் 2) அன்று வெளியிட்டது. அதில்தான் மேற்கண்ட தகவல் இடம் பெற்றுள்ளது.   உலகம் முழுவதும் மொத்தம் 3228 பெரும் கோடீஸ்வரர்கள் இருக்கிறார்கள். மொத்தம் 68 ந...
ஒரே நாளில் 34% விலை ஏறிய வோடபோன் ஐடியா பங்குகள்! கூகுள் பேச்சுவார்த்தை எதிரொலி!!

ஒரே நாளில் 34% விலை ஏறிய வோடபோன் ஐடியா பங்குகள்! கூகுள் பேச்சுவார்த்தை எதிரொலி!!

முக்கிய செய்திகள், வர்த்தகம்
கூகுள் நிறுவனம், வோடபோன் ஐடியா நிறுவனத்தில் கணிசமான பங்குகளை வாங்க உள்ளதாக பேச்சுகள் எழுந்ததை அடுத்து, மே மாத கடைசி வர்த்தக நாளில் இந்நிறுவனத்தின் பங்குகள் 34 சதவீதம் வரை அதிரடியாக உயர்ந்தது. இந்தியாவின் பெரும் கோடீஸ்வரரான முகேஷ் அம்பானி, தன்னுடைய ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் கணிசமான பங்குகளை அண்மையில் பேஸ்புக், சில்வர் லேக், விஸ்டா ஈக்விட்டி, ஜெனரல் அட்லாண்டிக் ஆகிய நிறுவனங்களுக்கு விற்றதன் மூலம் சுமார் 75 ஆயிரம் கோடி ரூபாயை திரட்டினார்.   பேஸ்புக் நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் மீது பார்வையைச் செலுத்திய நிலையில், உலகின் மற்றொரு டிஜிட்டல் ஜாம்பவனான கூகுள் நிறுவனமும், இந்திய தொலைதொடர்புத் துறையில் கால் பதிக்க ஆர்வம் காட்டுகிறது.   கூகுள் நிறுவனம், வோடபோன் ஐடியா நிறுவனத்திடம் இருந்து 5 சதவீத பங்குகளை வாங்க திட்டமிட்டு இரு...
நொறுங்கும் ஏழைகள்; அம்பானியின் சொத்து மட்டும் உயர்வது எப்படி?

நொறுங்கும் ஏழைகள்; அம்பானியின் சொத்து மட்டும் உயர்வது எப்படி?

இந்தியா, உலகம், சிறப்பு கட்டுரைகள், முக்கிய செய்திகள்
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் ரஜினி நடிப்பில் வெளியான 'சிவாஜி' படத்தில், ரஜினி அறிமுகம் ஆகும் காட்சி அது. விமான நிலையத்தில் இருந்து வெளியேறி, காரில் ஏறும்போது பக்கவாட்டு கண்ணாடியை தட்டியபடி ஒரு பெண் கையில் தட்டேந்தி நிற்பார். அப்போது ரஜினி சொல்வார், ''பணக்காரர் மேலும் பணக்காரர் ஆகிறார். ஏழைகள் மேலும் ஏழைகளாகிட்டே இருக்கிறார்கள் (Rich get Richer and Poor get Poorer)'' என ஆங்கிலத்தில் ஆதங்கத்துடன் கூறுவார். சமீபத்திய ஃபோர்ப்ஸ் இந்தியா (FORBES INDIA) பத்திரிகையின் அறிக்கையும் அந்த வசனத்தைதான் நினைவூட்டுகிறது. உலகளவில் பிரபலமான வணிக பத்திரிகையான ஃபோர்ப்ஸ், இந்திய பணக்காரர்களின் பட்டியலை இரு நாள்களுக்கு முன்பு வெளியிட்டு இருக்கிறது. அதில், இந்தியாவின் முகேஷ் அம்பானி முதலிடத்தில் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டு உள்ளது. அவருடைய தற்போதைய சொத்து மதிப்பு 38 பில்லியன் டாலர்கள் (2.47 லட்சம் கோடிகள...