Thursday, March 28மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: movie

இப்படை வெல்லும் – சினிமா விமர்சனம்

இப்படை வெல்லும் – சினிமா விமர்சனம்

சினிமா, முக்கிய செய்திகள்
சென்னையில் குண்டுகளை வெடிக்கச் செய்து நாச வேலைகளில் ஈடுபடும் ஒரு பயங்கரவாதியிடம் சிக்கிக்கொள்ளும் கதாநாயகன், அவரிடம் இருந்து தப்பித்தாரா? குண்டுவெடிப்பில் இருந்து மக்களை காப்பாற்றினாரா? என்பதுதான், 'இப்படை வெல்லும்' படத்தின் ஒன்லைன். நடிகர்கள்: உதயநிதி ஸ்டாலின், மஞ்சிமா மோகன், சூரி, ஆர்.கே.சுரேஷ், டேனியல் பாலாஜி, ராதிகா, எம்எஸ் பாஸ்கர், ரவி மரியா மற்றும் பலர். இசை: டி. இமான்; ஒளிப்பதிவு: ரிச்சர்டு டி நாதன்; எடிட்டிங்: பிரவீன்; தயாரிப்பு: லைகா புரொடக்ஷன்ஸ்; இயக்கம்: கவுரவ் நாராயணன். சர்வதேச பயங்கரவாதியான சோட்டா (டேனியல் பாலாஜி), சென்னையில் சில இடங்களில் வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்து, அமைதியை சீர்குலைக்க திட்டம் தீட்டுகிறார். அதற்காக அவர் உத்தரபிரதேச சிறையில் இருந்து தப்பித்து, சென்னை வந்து சேர்கிறார். ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வரும் நாயகன் மதுசூதனன் (உதயநிதி ஸ்டாலின்)
‘மெர்சல்’ பட சிக்கல் தீர்ந்தது!

‘மெர்சல்’ பட சிக்கல் தீர்ந்தது!

சினிமா, சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
விலங்குகள் நல வாரியத்திடம் இருந்து தடையில்லா சான்றிதழ் பெறுவதில் நிலவி வந்த சிக்கல் இன்று (அக். 16, 2017) சுமூகமாக முடிவுக்கு வந்ததை அடுத்து, திட்டமிட்டபடி தீபாவளிக்கு படத்தை வெளியிடுவதற்கான பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100வது படமாக, சுமார் ரூ.135 கோடி பொருட்செலவில் தயாராகி இருக்கிறது 'மெர்சல்'. இதில் நடிகர் விஜய் முதன்முதலாக மூன்று வேடத்தில் நடித்திருக்கிறார். அதில், மேஜிக் கலைஞராக ஒரு வேடம் ஏற்று நடித்திருக்கிறார். இதற்காக அவர் தொழில்முறை மேஜிக் நிபுணர்களிடம் பயிற்சி பெற்று, படத்திலும் அவரே சுயமாக சில மேஜிக்குகளை செய்ததாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. தீபாவளியன்று (அக். 18) உலகம் முழுவதும் 3200க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியிடுவதற்கான வேலைகள் நடந்து வந்த நிலையில், படத்தில் சில காட்சிகளுக்கு ஆட்சேபம் தெரிவித்த விலங்குகள் ந
மெர்சல் படத்தின் டைட்டில் மாறுகிறதா?

மெர்சல் படத்தின் டைட்டில் மாறுகிறதா?

சினிமா, சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
'சண்டையில கிழியாத சட்டை எங்கிட்டு இருக்கு?' என்ற 'கைப்புள்ள' வடிவேலு காமெடி போல, 'சர்ச்சையில் சிக்காமல் விஜய் படம் எப்போது ரிலீஸ் ஆகியிருக்கு?' என்று சொல்லும் காலம் வந்தாலும் ஆச்சர்யமில்லை. கடந்த சில ஆண்டுகளாகவே விஜய் நடித்த படங்கள் ரிலீசுக்கு முன்னரோ அல்லது வெளியான பின்னரோ ஏதோ ஒரு வகையில் சர்ச்சையில் சிக்கி வருகிறது. 'தலைவா' படம் ரிலீசுக்கு முன்பே பிரச்னைகளை சந்தித்தது. அந்தப் படத்தின் தலைப்புக்குக் கீழ், 'பார்ன் டு லீட்' என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டு இருக்கும். அப்போது ஆட்சியில் இருந்த அதிமுகவினர், அந்த வார்த்தைகளுக்கு அதிருப்தி தெரிவித்ததாக அப்போது தகவல்கள் வெளியாகின. கத்தி, துப்பாக்கி போன்ற படங்களும் நீதிமன்ற வழக்குகளைச் சந்தித்த பின்னரே திரைக்கு வந்தன. இந்நிலையில், சுமார் ரூ.135 கோடி பட்ஜெட்டில் தயாராகி உள்ள மெர்சல் படமும் தற்போது நீதிமன்ற வழக்கில் சிக்கி இருக்கிறது. மெர