டிடிவி தினகரனை ஆதரித்தது ஏன்?; சுப்ரமணியன்சாமி ‘ராமாயண’ விளக்கம்!
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சொந்தக் கட்சியான பாஜகவைவிட்டு டிடிவி தினகரனை ஆதரித்து ஏன் என்ற கேள்விக்கு, சுக்ரீவனை ராமர் எதற்காக உதவிக்கு அழைத்துக்கொண்டாரோ அதற்காகத்தான் என நூதனமாக பதில் அளித்துள்ளார்.
நடந்து முடிந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஆளும் அதிமுகவை எதிர்த்து சுயேச்சையாக களம் இறங்கிய டிடிவி தினகரன் அமோக வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் மதுசூதனன் தவிர திமுக, பாஜக, நாம் தமிழர் உள்ளிட்ட அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர்.
இந்த தேர்தலின்போது பாஜகவின் மூத்தத் தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியன்சுவாமி, பாஜகவைக்கூட முன்னிலைப்படுத்தாமல் சுயேட்சை வேட்பாளரான டிடிவி தினகரனை ஆதரித்து ட்விட்டரில் கருத்துகள் வெளியிட்டு வந்தார்.
தமிழகத்தில் ஆளும் எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுக அரசுக்கு பிரமதர் நரேந்திரமோடியின் பரிபூரண ஆசிர்வாதம் இருந்து வரும் நிலை...